திங்கள், 21 செப்டம்பர், 2015

விஷ்ணுப்பிரியாவின் இறுதி கடிதத்தின் பல பக்கங்களை காணவில்லை! இது கொலை அல்லது தூண்டப்பட்ட தற்கொலை!

திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்ட, டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா கடிதத்தின் அனைத்து பக்கங்களையும் வெளியிடாமல், குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே போலீசார் வெளியிட்டுள்ளதால், தற்கொலைக்கான காரணங்களை மூடிமறைக்க முற்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். ஜூன், 23ல், திருச்செங்கோட்டில் கடத்தப்பட்டு, பள்ளிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.இந்த கொலையின் பரபரப்பு முடிவுக்கு வரும் முன், வழக்கின் விசாரணை அதிகாரியான, திருச்செங்கோடு டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, 18ம் தேதி, முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கு முன், விஷ்ணுபிரியா, 10 பக்க கடிதம் எழுதியிருந்ததாக, முதலில் தகவல் வெளியானது. ஆனால், பத்திரிகையாளர்களுக்கு, ஒன்பது பக்க கடிதத்தை மட்டுமே, இரு பாகங்களாகபோலீசார் வழங்கினர்.      பல பக்க கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து இருப்பது சந்தேகம் கொடுக்கிறது..........மேலும் கடிதத்தில் இதை அரசியல் ஆக்க கூடாது .....அந்த gokul ராஜ் வழக்கோடு இதை சம்பந்த படுத்த கூடாது என்று எழுதி இருபதாக சொல்ல படுவது நம்பும் படியாக இல்லை ......விட்டால் இன்னும் காவல் துறைக்கு அதிக ஊதியம் வழங்க 7 வது pay commision அமுல் படுத்துங்கள் என்று எழுதி இருபதாக கூட சொல்ல்வார்கள் ...........தற்கொலைக்கு முயன்றவர் எதோ பெரிய பொது கூட்டத்தில் பேசுவதற்கு உரை தயாரித்து இருபதாக சொல்ல்வது மிக பலத்த சந்தேகம் கொடுக்கிறது

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

பார்ப்பனர்கள் அளவுக்கு மீறி பசுக்களை யாகத்தில் எரித்து உண்டதால்தான்.... சங்கராச்சாரியார் வாக்கு...



கிரீமி லேயர் ஏன் கூடாது? விகிதாச்சாரப் பங்கீடு ஏன் வேண்டும்? இராமியா.

ஜெகஜீவன்ராம் அவர்கள் தொடர் வண்டித் (Railway) துறை அமைச்சராக இருந்த போது, உயர்நிலைப் பணிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை 18% இடம் பெற வைத்து விட வேண்டும் என்று கடுமையாக முயன்றார். தனது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தத் தயங்கவில்லை. ஆனால் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் அவருக்கு எதிராக நுட்பமான சதிகளைச் செய்தது. பார்ப்பனர்களைப் பொருத்த மட்டில் வளர்ந்த பிரிவினர், வளராத பிரிவினர் என்பதை விட, நிர்வாகத்தில் தங்கள் சதிச் செயல்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இருந்தால் தான், தங்களுடைய அதிகாரப் பிடிப்பு தளராமல் இருக்கும் என்று நினைத்தனர் / நினைக்கின்றனர். (ஒருவேளை திறமைசாலிகள் தேர்ந்து எடுக்கபபட்டாலும் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமல் காயடிக்க விடுவதிலும் பார்ப்பனர்கள் வல்லவர்கள்.) ஆகவே ஜெகஜீவன்ராமின் சமூக நீதி உணர்வையும் அதைச் செயல்படுத்த முனையும் அவரது நிர்வாகத் திறமையையும் வீணடிக்க, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளை, வேண்டும் என்றே புறக்கணித்து விட்டு, அவர்களில் உள்ள அப்பாவிகளை (naive) உயர் நிலைகளில் அமர்த்தி, அவர்களுக்குத் திறமை இல்லை என்று ஜெகஜீவன்ராமிடம் பொய் வெளிச்சம் போட்டுக் காண்பித்து, அவரைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினர். ஜெகஜீவன்ராமின் அவ்வளவு கடுமையான முயற்சியாலும், அப்பாவிகளை பணிக்கு எடுத்துக் கொண்ட பார்ப்பனர்களின் 'கருணை' மிகுந்த உள்ளத்தால் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களைப் பணிக்கு எடுத்துக் கொண்ட நிலையிலும் அவர்களது எண்ணிக்கை 10% கூட எட்டவில்லை. அதற்குள் ஜெகஜீவன்ராமைக் களைக்க வைத்து விட்டார்கள். (நிர்வாகத் திறனுக்குப் பெயர் பெற்ற ஜெகஜீவன்ராமையே களைக்க வைத்த பார்ப்பன ஆதிக்க வர்க்கத்தின் எதிர்மறை வலிமையை நாம் கணக்கில் எடுததுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது)
வளர்ந்த பிரிவினர் (creamy layer) என்பது பார்ப்பன அதிகார வர்க்கத்தால் இந்திய வெகுமக்களுக்கு எதிராகத் திணிக்கப்பட்ட கருத்து ஆகும். உச்ச நீதிமன்றம் இதைச் செய்வதற்கு முன்பேயே, பார்ப்பன ஆதிக்க வர்க்கம் இதை மறைமுகமாக, இன்னும் நுட்பமாகச் செயல்படுத்திக் கொண்டுதான் இருந்தது.

விஷ்ணுப்பிரியாவின் இறுதி சடங்கில் அதிமுகவும் பாமகவும் பங்கேற்காதது ஏன்?


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா(27). நேற்று முன்தினம் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே அவரது உடல் சொந்தவூரான கடலூரை அடுத்த கொண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.50 மணிக்கு விஷ்ணுப்பிரியாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 12. 30 மணிக்கு தென்பென்னை ஆற்றக்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. விஷ்ணுப்பிரியாவின் இறுதிச்சடங்கில் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். அதிமுக மற்றும் பாமகவினர் மட்டும் பங்கேற்கவில்லை

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகன்..அமெரிக்காவில் வழக்கை சந்திக்கும் இந்திய தம்பதிகள்

A California couple is currently in the midst of a legal battle over their autistic son, whom neighbors blame for lowering the value of their Silicon Valley homes.A lawsuit filed by the neighbors of Vidyut Gopal and Parul Agrawal
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகனின் நடவடிக்கையால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் வித்யுத் கோபால்- பாருள் அகர்வால் தம்பதியரின் மகன் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். இவன் பக்கத்து வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் தலை முடியை இழுப்பது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இது பொதுமக்களுக்கு தொல்லை தருவதாக இருப்பதால் நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனால் மற்றவர்கள் தாக்கப்படவோ அல்லது பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கோபால்- பாருள் அகர்வால் தம்பதியருக்கு உத்தரவிட்டார். இதனால் அவர்கள் 7 ஆண்டுகாளாக வசித்துவந்த வீட்டை காலி செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரனைக்கு வரும் நிலையில், இந்த விவாகரம் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அவர்களில் பலர் கோபால்- பாருள் அகர்வால் தம்பதியருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் maalaimalar.com

5 மாதத்தில் 15 கோடி பயணிகளை இழந்தது ரயில்வே வீழ்ச்சி

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாதங்களில், மொத்த ரயில் பயணிகளின் எண்ணிக்கையில், 15 கோடிகுறைந்துள்ளதை அறிந்து ரயில்வே துறை அமைச்சகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கட்டணம் ஏற்றப்படாத நிலையில், ரயில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது குறித்து, ரயில்வே இணை அமைச்சர்மனோஜ் சின்கா கவலை தெரிவித்துள்ளார்.கடந்த 15ம் தேதி, ரயில்வே பொது மேலாளர்கள் கூட்டம், டில்லியில் நடந்தது. அப்போது, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், ரயில் பயணிகளின் மொத்த பயண எண்ணிக்கை, 342.5 கோடி என்றும், முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், இந்த எண்ணிக்கை, 357.5 கோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விகிதம் தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டின் முடிவில், ரயில்வேத் துறை, ஐந்து சதவீத ரயில் பயணிகளை இழக்கும் வாய்ப்புள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 19 கோடி ரயில் பயணிகளை, ரயில்வேத் துறை இழந்துள்ளது. வட இந்தியாவில் மக்களுக்காக அரசு இலவசமாக ரயிலை நடத்துகின்றது. இன்று ரயில்வே துறை சிறிதாவது லாபத்தில் இயங்குகின்றது என்றால் அது தென் இந்திய பயணிகளால் மட்டுமே . கோவை சென்னைக்கு என்று ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தாலும் கிடைப்பதில்லை. ஏன்? ரயில்வே துறையில் புற்றுநோயைபோல் ஊழல் பல்கி பெருகி உள்ளது. இவற்றை சரி செய்தாலே இந்த துறை பல மடங்கு லாபம் சம்பாதிக்கும். குறிப்பாக மேல் நிலையில் உள்ள மலையாளிகளை நீக்கினாலே அந்த துறை சரியாகிவிடும்.

தனுஷின் படத்துக்கு நோ சொன்ன வித்யா பாலன்! நஷ்டம் யாருக்கு?

எதிர்நீச்சல், காக்கிச் சட்டை என்ற இரு படங்களின் வெற்றியால் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு கிடைத்த பரிசு, தனுஷை இயக்கும் வாய்ப்பு. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அவரது அடுத்த பட வாய்ப்பு இருக்கிறது. எனவே முடிந்த அளவிற்கு பெரிய படமாக இந்த படத்தை எடுக்க முடிவு செய்து முதல் முயற்சியாக பாலிவுட் ஹீரோயின் வித்யா பாலன் வீட்டு கதவை தட்டியிருக்கிறார் துரை செந்தில்குமார். கோலிவுட் கைவிரித்ததால், பாலிவுட்டில் தஞ்சம் புகுந்து கூடு கட்டிய வித்யாபாலன் இன்று அந்த கூட்டை மாளிகையாகவே மாற்றிவிட்டார். அவரை சமரசம் செய்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர பலரும் எடுத்த முயற்சிகள் வீணாகிப்போக, தன் கதையின் மீது கொண்ட நம்பிக்கையுடன் சென்ற துரை செந்தில்குமாரும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். ‘கால்ஷீட்ல பிரச்சனைப்பா. அவங்க குடுக்குற தேதி செட் ஆகல, நாம என்ன பண்ண முடியும்’ என்று வித்யா பாலன் கமிட் ஆகாததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. nakkheeran.in

உபியில் முதியவரின் டைப் மெஷினை அடித்து நொறுக்கிய போலீஸ் சஸ்பென்ட்....

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அஞ்சல் நிலையத்தின் வாசலில் கடந்த 35 வருடங்களாக ஒரே ஒரு டைப் ரைட்டரை வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு இந்தியில் தட்டச்சு செய்து கொடுப்பதன் மூலம் வரும் 50 ரூபாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார் 65 வயது முதியவரான குமார். நேற்று காலை அவரது வாழ்வில் புயலாகப் புகுந்தார் ஒரு அடாவடி காவலர். தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து உடல்நோக உழைக்கும் குமாரை அந்த இடத்தை விட்டு காலி செய்ய சொன்னார் அந்த அடாவடி சப்-இன்ஸ்பெக்டர். அதற்கு அந்த முதியவர் எதிர்த்து கேள்வி கேட்கவே ஆவேசமடைந்த அவர் அவரது ஒரே வாழ்வாதாரமாக இருந்த டைப் ரைட்டரை பைத்தியம் பிடித்தவர் போல் சுக்கு நூறாக உடைத்தார். இந்த காட்சிகளை உள்ளூர் நிருபர்கள் படம் பிடித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது.

தொடர்கதையாகும் அரசு அதிகாரிகள் தற்கொலைகள்... ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை அவரிடம் திருச்செங்கோட்டில் பெண் டி.எஸ்.பி. தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி வந்ததில் இருந்து அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார். கிரானைட் முறைகேடு புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. நரபலி புகாரில் தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள் கிடைத்து வருகிறது.

சனி, 19 செப்டம்பர், 2015

குஜராத்தில் இட ஒதுக்கீடு போராட்ட தலைவர் கைது ...மொபைல் இண்டர்நெட் சேவை தடை..

படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு தடையை மீறி சூரத்தில் யாத்திரை செல்ல முயற்சித்ததாக ஹர்திக் படேலை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, அங்கு வன்முறை நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணிநேரத்துக்கு மொபைல் இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, டி.ஜி.பி. பி.சி.தாகூர் கூறுகையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மொபைல் இண்டர்நெட் சேவையை காலவரையறையின்றி துண்டித்துள்ளதாக தெரிவித்தார். ஹர்திக் படேலின் கைதுக்கு பிறகு சூரத் மாவட்ட கலெக்டர் இதற்கான தடை உத்தரவை பிறப்பித்தார்.

வைகோவின் அரசியல் சகாப்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது?

nisaptham.com: அரசியலில் நேர்மை பொதுவாழ்வில் தூய்மை லட்சியத்தில் உறுதி’ என்று ஊர் முழுக்கவும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து வை.கோபால்சாமி என்ற பெயர் அறிமுகமானது. அப்பொழுது எங்கள் ஊரிலிருந்து நிறையப் பேர் மதிமுகவை ஆதரித்துப் பேசினார்கள். செந்தாமரை அச்சகத்தில் செய்தித்தாள் படிக்கப் போகும் போதெல்லாம் வைகோ பற்றியும் மதிமுக பற்றியும்தான் பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘எம்.ஜி.ஆரை வெளியேற்றிய பிறகு பதின்மூன்றாண்டு வனவாசம்...இனி உனக்கு ஆயுள் முழுக்க வனவாசம்’ என்று திரும்பிய பக்கமெல்லாம் கருணாநிதிக்கு எதிராக அச்சடித்து ஒட்டியிருந்தார்கள். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டு விடுதலைப் புலிகள் மீதான தடையுத்தரவு கடுமையாக அமுலாக்கப்பட்ட அந்தச் சமயத்தில் மனதளவில் புலிகளின் ஆதரவாளராக இருந்தவர்கள் வைகோவின் பக்கம் சாய்ந்திருந்தார்கள். திமுக-அதிமுகவுக்கான மாற்று இனி மதிமுகதான் என்றார்கள். அவர்களது கணிப்பும் தவறாகவில்லை. one man ஷோ எல்லாம் எம்ஜியார் ஜெயலலிதா  போன்றவர்களுக்கு மட்டுமே சாத்தியம் . அவர்களுக்கு ரசிகர்கூட்டம் இருக்கிறது,அவர்களுக்கு போதியளவு லட்டுக்களும் கிடைத்தது, .இவருக்கும் ரசிகர் கூட்டம் இருந்தது ஆனால் லட்டு கிடைக்கவில்லையே? எல்லா ரசிகனுக்கும் லட்டு தின்னத்தான் ஆசை, லட்டு இல்லாமல் இதே ஆட்டத்தை வைகோ போடுவது அவரது பேராசையை காட்டுகிறது,

திருக்குறளை எந்த தமிழ் அரசனும் ஆதரிக்கவே இல்லை.ஏன்? அத்தனை அரசர்களும் பார்ப்பன அடிவருடிகள்?


பெரியார் பிறந்த நாள் அன்று, பெரியார் திடலில் பேசிய தமிழறிஞர் அவ்வை நடராசன், ‘திருக்குறளை ஆதரித்து மாநாடு நடத்திய ஒரே தலைவர் பெரியார் ஒருவர் தான்’ என்றார். மகிழ்ச்சி.
போற இடமெல்லாம் இததானே திரும்ப, திரும்பச் சொல்லிகிட்டு இருக்கேன்.
இவர் போன்ற தமிழிறிஞர்கள், இதை 30 வருசத்துக்கு முன்னாலேயே சொல்லியிருந்தா.. சில மூதேவிகள் பெரியாரை தமிழ் விரோதி என்று சொல்வதை அப்பவே தகர்த்திருக்கலாம்.
என்னைப் போன்றவர்களுக்கும் இந்த இம்சைகளுக்குப் பதில் சொல்ற வேலை மிச்சமாயிருக்கும். (வீடியோவிலிருக்கிறது என்னுடைய சவால்) மதிமாறன்.wordpress.com

விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதம்! தற்கொலை செய்யுமளவு விஷ்ணுபிரியா கோழை அல்ல..கோகுல்ராஜ்ஜின் தாய் ....

தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கடைசியாக எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டது. பெற்றோருக்கு எழுதிய 9 பக்க கடிதத்தை சேலம் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வெளியிட்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக ஜூன் மாதம் 26ல் கிடந்தார். தற்கொலை எனக்கூறி போலீசார் விசாரித்து வந்த நிலையில், காதல் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கொலை வழக்காக பதிவு செய்து திருசெங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

அ.தி.மு.க.வுக்கு மேல்–சபை எம்.பி. பதவி வழங்கி பிராயச்சித்தம் தேடிய ரங்கசாமி

புதுவை ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் அளவுக்கு ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் பலம் இருந்தது. ஆனால், அந்த கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்களின் செயல்பாடுகளால் தேர்தலில் வெற்றி பெறுவதில் நெருக்கடி ஏற்பட்டது.
எதிர் தரப்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி களம் இறங்கினார். அவருக்கு சில கட்சிகளும் சாதகமாக செயல்பட்டது. அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிக்கும், இதனால் பொது வேட்பாளர் எளிதாக வெற்றி பெறலாம் என்று அவர் திட்டமிட்டிருந்தார்.
இந்நேரத்தில் பொது வேட்பாளருக்கு எதிர்ப்பாக இருந்த கட்சி அதிமுகதான். அதிமுகவுடன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து ஆட்சியில் பங்கு தராததால் அ.தி.மு.க.வுக்கும், என்.ஆர். காங்கிரசுக்கும் இடையில் ஏற்பட்ட உறவு தேர்தலோடு பிரிந்துவிட்டது.

விஷ்ணுபிரியா டிஸ்பி தற்கொலைக்கு அதிகாரியே காரணம்! தோழி மகேஸ்வரி டிஎஸ்பி கண்ணீர்...

தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி.விஷ்ணு  பிரியாவின் தோழியான  மகேஸ்வரி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சப்-டிவிசனில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருகிறார். இவர் தோழி இறந்த துக்கம் தாங்காமல் சேலம் வந்தார். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:- நானும், விஷ்ணு பிரியாவும் சிவகங்கையில் டி.எஸ்.பி.யாக பயிற்சி பெற்றபோது நாங்கள் இருவரும் தோழிகளாக இருந்து வந்தோம். நேற்று மதியம் 2.48 மணியளவில் எனக்கு விநாயர் சதுர்த்தி பணி என்று செல்போனில் விஷ்ணு பிரியா பேசினார். அப்போது விநாயகர் சிலை பாதுகாப்புக்கு சென்று விட்டு இப்பதான் வந்தேன் என்று கூறி நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு லைனில் வருவதாக கூறி, அப்புறம் என்னிடம் பேசுகிறேன் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

கேரள எஸ்டேட்டுகளில் கொத்தடிமை தமிழர்கள் மாதம் ரூ.232 தான் சம்பளம்.

செங்கோட்டை : கேரள எல்லையில் உள்ள எஸ்டேட்களில் கொத்தடிகைளாக வேலை பார்க்கும் தமிழர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யு.சி. ஆகிய தொழிலாளர் அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன. kerala estate protest தமிழக கேரளா எல்லை பகுதியான தென்மலை அருகிலுள்ளது கலுதுருட்டி அம்பநாடு. இங்கு சுமார் 1500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது திருவாங்கூர் டி&ரப்பர் எஸ்டேட். இங்கு 3 பிரிவுகளாக தேயிலை, ரப்பர் மற்றும் ஏலக்காய், கிராம்பு, மிளகு எஸ்டேட் உள்ளது. தமிழகத்தை சார்ந்த சுமார் 1500 குடும்பத்தினர் அம்பநாடு, அரண்டல், மெத்தாப்பு, ஆணைச்சாடி, கீழ அம்பநாடு, உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் எஸ்டேட் குடியிருப்புக்களில் தங்கி இங்கு பணியாற்றி வருகின்றனர்.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

வைகோவின் கூட்டணி ஆலோசனையால் மிரண்டு போன மதிமுக நிர்வாகிகள் ஓட்டம்....

சிறிய கட்சிகளுடன் இணைந்து, வைகோ அமைக்கும் கூட்டணி முயற்சியால், ம.தி.மு.க.,வில் கடும் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. வைகோ முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், அக்கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர்.காஞ்சிபுரம், சேலம் போன்ற முக்கிய மாவட்ட செயலர்கள், தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். அவர்களுடன், ம.தி.மு.க.,வின் மகளிர் அணி செயலரும் கட்சி மாறி விட்டார். பல முக்கிய நிர்வாகிகள், ம.தி.மு.க.,வில் இருந்து வெளியேற தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.  சமீபத்தில், தி.மு.க., வுடன் நெருங்க விரும்பியதுடன், அதற்கான நடவடிக்கைகளையும், ம.தி.மு.க., எடுத்தது. 2016 சட்டசபைத் தேர்தலை, தி.மு.க.,வுடன் இணைந்து சந்திக்கவும் விரும்பியது. ஆனால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆர்வம் காட்டாததால், அதிருப்தியில் இருந்த, ம.தி.மு.க., மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. மதிமுக இல் உட்கட்சி சனநாயகம் இல்லை. இரண்டாம் கட்ட தலைவர்களின் யோசனை கேட்கப்படுவதில்லை. வைகோ எதைப் பேசினாலும் அதுவே கட்சியின் கொள்கை கோட்பாடு ஆகப் போய்விடுகிறது. அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக வந்தபோது அதுபற்றிக் கருத்துத் தெரிவித்த வைகோ அந்தப் பதவி ஒரு பொம்மை என்று வருணித்தார். இப்படியான பேச்சு தேவையற்றது. அதுமட்டுமல்ல அர்த்தமற்றது. சரி, பிழை பார்க்காமல் மனதில் பட்டதை காட்டமாகச் சொல்லிவிடுகிறார்

பாக். விமானப்படை தளம் மீது தலிபான் அதிரடித் தாக்குதல்...42 பேர் பலி !

பெஷாவர் : பாகிஸ்தானில் விமானப்படை தளம் மீது தலிபான்கள் இன்று நடத்திய அதிரடி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். பெஷாவரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் படாபர் விமானப்படை தளம் உள்ளது. இப்பகுதிக்கு செல்லும் பாதைகளில் இன்று வழக்கம்போல் பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராணுவ உடை அணிந்து வந்த 13 தீவிரவாதிகள் 2 குழுக்களாகப் பிரிந்து இரண்டு பாதைகள் வழியாக நுழைந்து திடீரென தாக்குதல் நடத்தினர்.  கையெறி குண்டுகள், மோர்ட்டர் ரக குண்டுகள் மற்றும் ஏ.கே.-47 ரக துப்பாக்கிகளால் பாதுகாப்பு படை வீரர்களை கண்மூடித்தனமாக தாக்கிய தீவிரவாதிகள், விமானப்படை தள வளாகத்தில் உள்ள மசூதிக்குள் சென்று தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டனர்.

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்! பழனிச்சாமியின் குவாரிகளில் நரபலி அரங்கேற்றம்(படங்கள்)

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சின்னமலம்பட்டியில் ஏற்கனவே தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் தோண்டியபோது மேலும் இரண்டு பேரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குவாரிகளில் நரபலி கொடுத்து அவர்களின் உடல்களை சின்னமலம்பட்டியில் இருக்கின்ற மயானத்தில் புதைத்திருப்பதாக எழுந்த புகாரில் இரண்டாம் கட்டமாக தோண்டும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்திருக்கிறது. இரண்டாவது கட்டமாக தோண்டும் பணியில் இரண்டு எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் நாளையும் (சனிக்கிழமை) இதேபோன்று தோண்டும் பணிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்னமலம்பட்டியில் தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது 4 பேரின் எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டன. அப்போது தோண்டுப்பட்ட ஆழம் 5 அடி மட்டுமே இருந்த காரணத்தினால், 10 அடிக்கு குறையாமல் தோண்ட வேண்டும் என்று சகாயம் குழு கேட்டுக்கொண்டது;அதன் அடிப்படையில் இன்று காலை தோண்டும் பணி தொடங்கியது. இதனை சகாயம் பார்வையிட்டார். மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இந்தப் பணியில் இரண்டு எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன. சின்னமலம்பட்டியில் மொத்தம் 6 எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 18.09.2015 வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அலுவலகத்துடன் இணைந்த தனது வீட்டில் விஷ்ணுப்பிரியா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். வீட்டில் சோதனையிட்டபோது விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இதனை கைப்பற்றிய சேலம் டிஐஜி வித்யாகுல்கர்னி இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். 27 வயது ஆகும் விஷ்ணுப்பிரியா திருமணம் ஆகாதவர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எம்.ரவி ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பாவம் இவருக்கு இவருக்கு எந்த போலிஸ் அதிகாரியால் எந்த டார்ச்சரோ???

பெரியார் தன்மீது கோபப்பட்டவர்களை இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் ,

பல ஆயிரவருஷங்களில் கீழ் ஜாதியாய்ப் பிறந்து மேல் ஜாதியாய்ச் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது. ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை. வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய், ரிஷியாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம். ஆனால் “பறையனாய்ப்” பிறந்து “பிராமணனாய்ச்” செத்தவரோ “பிராமணனாய்” பிறந்து “பறையனாய்” செத்தவனோ எவனும் இல்லை. இந்துமதத்தை விட்டவன் எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம். அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய்ச் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய்ச் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.!”
“நடுவில் முருகன் இரண்டுபக்கமும் வள்ளி தெய்வானை என்று கும்பிடுகிறாயே, இதே போல நடுவில் வள்ளி இரண்டு பக்கம் ஆண் என்று இருந்தால் கும்பிடுவாயா? கோபப்படுவாயா?
வமானங்களோடு வாழ மக்களை அனுமதிக்காதவர் பெரியார், அவர்களே அதை விரும்பினாலும் கூட!
“நீ யார் கேட்க? நீ யார் சொல்ல? நீதான் முட்டாள்” என்று தன் மேல் கோபப்பட்டவர்களை தயங்காமல் அனுமதித்தவர் பெரியார். “இப்போதாவது உனக்கு கோபம் வந்ததே” என்று வரவேற்றவர் பெரியார், அவர்களே அதை விரும்பாவிட்டாலும் கூட.
“நான் சொன்னாலும் கூட பகுத்தறியாமல் ஏற்காதே, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்” என சொந்த முட்டாள்தனங்களின் மீது சுரணை எழுப்பியவர் பெரியார்.
“என்ன தெரியும் உனக்கு வாயை மூடு, சொல்றதை மட்டும் கேள்!” என்று ஈன்ற தந்தையே ஈட்டியாய் பாய்கையில், “என்னையும் விடாதே! ஏன் என்று கேள்!” என்று பகுத்தறிவு பாய்ச்சினாரே அதனால்தான் அவர் தந்தை பெரியார்.
யாருக்கு வரும் அந்த அறிவுத்துணிச்சல், “கடவுள் இல்லை இல்லை என்கிறாயே வந்தால் என்ன செய்வாய்?” என்று கடவுளின் காப்பாளர்கள் சீறிய போது, சிறிதும் `வெறி’ இன்றி “வந்தா ஏத்துக்கப் போறேன்!” என்றாரே என்ன ஒரு சிந்தனை அழகு!

பார்ப்பன பாசிசத்துக்கு எதிராக உயிரைப் பணயம் வைத்துப் போராடும் தீஸ்தா. மோடியின் சிம்ம சொப்பனம்!

தீஸ்தா சேதல்வாத்தேசத் துரோகி” என்று மோடி அரசால் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளரான தீஸ்தா செதல்வாட், அவரைக் கைது செய்து சிறையிடத் துடிக்கும் மோடி கும்பலின் சதிகளிலிருந்து தற்காலிமாக மீண்டுள்ளார். மோடி அரசால் ‘தேசத்துரோகி’ எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபல மனித உரிமைச் செயற்பாட்டாளர் தீஸ்தா சேதல்வாத் தீஸ்தாவினுடைய சப்ரங் கம்யூனிகேஷன்ஸ், நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் ஆகிய தன்னார்வ நிறுவனங்கள் 2004-லிருந்து 2006 வரையிலான காலத்தில் உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் போர்டு பவுண்டேசனிடமிருந்து முறைகேடாக அந்நிய நிதியைப் பெற்றுள்ளதாகவும், அந்நிய நன்கொடை முறைப்படுத்துதல் சட்டத்திற்கு (FCRA) எதிராகச் செயல்பட்டதாகவும், கிரிமினல் சதிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டி கடந்த ஜூலை 8 அன்று மோடி அரசின் கூண்டுக்கிளியான மையப் புலனாவுத்துறை தீஸ்தா மீது வழக்கு தொடுத்தது.

தமிழக பாஜகவில் தமிழிசை சுந்தரராஜன் ஓரங்கட்டப்படுகிறாரா?

தமிழக பாஜக முக்கியத் தலைவர்கள் மத்தியில் கருத்து வேற்றுமை அதிகரித்து வருகிறது என்று சலசலக்கப்படும் செய்தியை மேலும் உறுதிப்படுத்துவதுபோல் கடந்த புதன்கிழமை ஒரு சம்பவம் நடந்துள்ளது.
தமிழகத்தில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுக்கத்தைச் சேர்ந்த பிரதிநிகள் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் கடந்த புதன்கிழமை சந்தித்துள்ளனர். சர்ச்சை இதுவல்ல. இந்த சந்திப்பு நடைபெற்றது, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு மற்ற கட்சியினர் சொன்னபின்னரே தெரியவந்துள்ளது என்பதுதான் பிரச்சினை. சபாஷ் காங்கிரசுக்கு போட்டியாக கோஷ்டி கானம்! அந்த பார்ப்பன பேட்டை ரவுடி ராசா இருக்கும் வரை இது வேலைக்காவாது ...

10 ஆயிரம் பழைய பஸ்கள்! ஆயுட்காலம் முடிந்து ஓடும்...பாதுகாப்பு கேள்விக்குறி? பயணிகள் அச்சம்!

தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு பஸ்கள் ஆயுட்காலம் முடிந்து, ஓடுவதற்கு லாயக்கற்ற நிலை யிலும், தொடர்ந்து இயக்கப்படுகின்றன. இவற்றில், 4,000 பஸ்களின் நிலைமை படுமோசம்; இதன் காரணமாகவே, அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நெல்லை போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த, தமிழக அரசு பஸ், தென்காசியில் இருந்து கேரள மாநிலம், கொட்டாரக்கரைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றது. இதில், ராஜபாளையத்தைச் சேர்ந்த, சுவாதி, 30, என்ற பெண் பயணம் செய்தார். புனலுார் என்ற இடம் வந்ததும், பஸ்சின் பின்புற படிக்கட்டு வழியாக இறங்க, இருக்கையில் இருந்து எழுந்து, ஒரு காலடி வைத்ததும், அடித்தளம் உடைந்து, 'பொத்'தென, சாலையின் நடுவே விழுந்து, படுகாயம் அடைந்தார். இச்சம்பவம், தமிழக அரசு போக்குவரத்துத் துறை நடத்தும் பஸ்களின் நிலையை வெட்டவெளிச்சமாக்கி விட்டது. அடித்தளம் அமைக்கப்படும் முறை:இரும்பு பைப் மீது, மரக்கட்டைகள் பதிக்கப்பட்டு, அதன் மீது அலுமினிய தகடு அடிக்கப்பட்டு, பஸ்சின் அடித்தளம் உருவாகிறது. 
இந்த லட்சணத்தில் பராமரித்தால் ஒரு நாள் ஓட்டுனரே ஓட்டை வழியாக விழுந்து விடுவார்

சுபாஷ் சந்திர போஸ் விமானவிபத்தில் இறக்கவில்லை 1964 வரை உயிருடன் இருந்தார் ! ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்கம்

சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டிருக்கிறது.சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்து இந்தியாவில் பல கதைகள் உலா வருகின்றன. இதுவரை கொல்கத்தா காவல்துறை வசமிருந்த இந்த ஆவணங்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இருந்தபோதும், அந்த ஆவணங்களில் என்ன இருக்கின்றன என்பது இதுவரை தெளிவாகவில்லை.
இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றி தனியாக ராணுவமொன்றை நிறுவிய சுபாஷ் சந்திரபோஸை நேச நாட்டுப் படைகள் தேடிவந்தன.
அவரது மரணம் குறித்து இந்தியாவில் பல்வேறு கதைகள் உலவிவருகின்றன வெளியிடப்பட்டிருக்கும் ரகசிய ஆவணங்களில் என்ன இருக்கின்றன என்பது இதுவரை தெரியவில்லை. இவைதவிர, சுபாஷ் சந்திர போஸ் குறித்து வேறு எத்தனை ரகசிய ஆவணங்கள் இந்திய அரசின் வசம் இருக்கின்றன என்பது தெரியவில்லை.