வெள்ளி, 18 செப்டம்பர், 2015

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா தூக்கிட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 18.09.2015 வெள்ளிக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அலுவலகத்துடன் இணைந்த தனது வீட்டில் விஷ்ணுப்பிரியா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். நாமக்கல் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். வீட்டில் சோதனையிட்டபோது விஷ்ணுப்பிரியா எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இதனை கைப்பற்றிய சேலம் டிஐஜி வித்யாகுல்கர்னி இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். 27 வயது ஆகும் விஷ்ணுப்பிரியா திருமணம் ஆகாதவர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எம்.ரவி ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.பாவம் இவருக்கு இவருக்கு எந்த போலிஸ் அதிகாரியால் எந்த டார்ச்சரோ???
குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று தஞ்சையில் பயிற்சி டி.எஸ்.பி.யாக பணியாற்றிய விஷ்ணுப்பிரியா, அதன்பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். பின்னர் கடந்த 8 மாதங்களாக திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றினார். உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் சடமாக ரயில் தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்ட வழக்கை இவர் விசாரித்து வந்தார். -சிவசுப்பிரமணியன். nakkheeran,in


கருத்துகள் இல்லை: