படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு தடையை மீறி சூரத்தில் யாத்திரை
செல்ல முயற்சித்ததாக ஹர்திக் படேலை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, அங்கு வன்முறை நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
24 மணிநேரத்துக்கு மொபைல் இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, டி.ஜி.பி. பி.சி.தாகூர் கூறுகையில், மாநிலத்தில் சட்டம்
ஒழுங்கை பாதுகாக்க மொபைல் இண்டர்நெட் சேவையை காலவரையறையின்றி
துண்டித்துள்ளதாக தெரிவித்தார். ஹர்திக் படேலின் கைதுக்கு பிறகு சூரத்
மாவட்ட கலெக்டர் இதற்கான தடை உத்தரவை பிறப்பித்தார்.
ராஜ்கோட்டிலும் ஒரு வார காலத்திற்கு மொபைல் இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி ஹர்திக் படேல் கைது எதிரொலியாக ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் பலியானார்கள். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது வதந்திகளை பரவாமல் தடுக்க மொபைல் இண்டர்நெட் இணைப்பை துண்டித்துள்ளது dailythanthi.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக