திங்கள், 29 டிசம்பர், 2014

AirAsia காணாமல்போன ஏர்ஏஷிய விமானம் கடலுக்கடியில்? BBC News

காணாமல்போன இந்தோனேஷியாவின் ஏர்ஏஷிய விமானம் (எண்:QZ8501) கடலின் ஆழத்தில் இருக்கக்கூடும் என்று இந்த விமானத்தை தேடுவதற்கான இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் தெரிவித்திருக்கிறார். இந்த விமானம் காணாமல் போனதற்கு முன்பாக கடைசியாக அந்த விமானத்திலிருந்து கிடைக்கப்பெற்ற ஒருங்கிணைப்புத் தகவல்களின் அடிப்படையிலேயே தாம் இந்த அனுமானத்திற்கு வந்திருப்பதாக பாம்பாங் சொய்லிஸ்டோ தெரிவித்தார்.
162 பயணிகளுடன் இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இந்த ஏர் பஸ் A320-200 ரக விமானம் காணாமல் போய் ஒரு நாள் முடிந்துவிட்டநிலையில் அதனைத்தேடும் பணிகள் தொடர்கின்றன. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதற்கான எந்த தடயமும் இதுவரை கிடைக்கவில்லை.

தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழில் பேசும் ஜனாதிபதி ராஜபக்ஸ: இந்தியா என் உறவு; சீனா என் நண்பன்’’


அதிர்ச்சியில் உறையவைக்கும் தலித்பெண் வன்கொடுமைகள் : தமிழக பகீர்!

தமிழ்நாட்டில் 2012-ல் 34 தலித் பெண்கள் மட்டுமே பாலியல் வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. ஆனால்,  ‘எவிடன்ஸ்’அமைப்பு தமிழ்நாடு முழுக்க நடத்திய ஆய்வில் 124 தலித்பெண்கள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள் என்று ஆதாரப்பூர்வமான தகவலை வெளியிட்டு அதிர்ச்சியூட்டிள்ளது. இதில்,  பாதிக்கப்பட்ட 29 சதவீதம் பெண்கள் பாலியல் வண்புணர்ச்சிக் குள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். அதுவும், 124 வன்கொடுமை  சம்பவங்களில் 1 சம்பவத்தில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது என்கிற  ‘எவிடன்ஸ்’அமைப்பின் ஆய்வு... இதற்கு ஆதாரமாக சுமார் 6500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சேகரித்துள்ளது!அதிர்ச்சியில் உறையவைக்கும்  தலித்பெண் வன்கொடுமைகள் சில...

நாகர்கோவில் பணத்துக்காக ஒரு குடும்பத்தையே கொன்ற ஒரு எம்.ஏ. பி.எட். பட்டதாரி

A customs employee,wife and adopted daughter found dead
ஆன்லைன் வர்த்தகத்தில் எனக்கு ரூ.35 லட்சம் லாபம் கிடைத்ததாகவும், அந்த பணத்தை பாதுகாப்பாக வைக்கும்படி சுப்பையாவிடம் கூறினேன். அதற்காக இணையதளத்தில் போலி கணக்கு தொடங்கி எனக்கு ரூ.35 லட்சம் வருவாய் வந்ததுபோல தகவலை அனுப்பி அதனை சுப்பையாவிடம் காண்பித்தேன். 
நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் வேம்பத்தூர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுப்பையா (வயது 58). நெல்லை சுங்க இலாகா அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வசந்தி (53). இவர்களது வளர்ப்பு மகள் அபிஸ்ரீ (12).
இவர்கள் 3 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டனர். வசந்தி, அபிஸ்ரீ ஆகிய இருவரும் வீட்டுக்குள்ளேயே பிணமாக கிடந்தனர். சுப்பையாவின் உடல் 2 நாட்களுக்கு முன்பு முப்பந்தல் அருகே அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை கண்டுபிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.

சகாயம் அதிர்ச்சி! சிட்டிசன் படக்கதை போல் காணமல் போன கிராமங்கள் மனிதர்கள் .....

புதுத்தாமரைப்பட்டி அருகே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரியை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படம்: ஆர்.அசோக். கிரானைட்-தொழிலுக்காக-கிராமங்கள்-முற்றிலும்-அழிப்பு-ஆய்வுக்குச்-சென்ற-ஐஏஎஸ்-அதிகாரி-சகாயம்-அதிர்ச்சி/
புதுத்தாமரைப்பட்டி அருகே கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரியை ஆய்வு செய்கிறார் சட்ட ஆணையர் உ.சகாயம். படம்: ஆர்.அசோக்.
கிரானைட் தொழிலுக்காக கிரா மங்கள் இருந்த சுவடே தெரியாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக சட்ட ஆணையர் உ.சகாயத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதை நேரில் பார்வையிட்ட சகாயம் அதிர்ச்சியடைந்தார்.
மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி ஊராட்சிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஐஐடி டெல்லி இயக்குநர் பதவி விலகினார்! சுப்பரமணியம் சாமியின் மிரட்டல் காரணம்?

டெல்லி: தனக்குரிய சம்பளப் பாக்கி ரூ. 70 லட்சத்தை வழங்குமாறு சுப்பிரமணியன் சாமி கொடுத்த நெருக்கடி காரணமாக, தனது பதவிக்காலம் முடிய இன்னும் 2 வருடம் இருக்கும் நிலையில் டெல்லி ஐஐடியின் இயக்குநர் ரகுநாத் செவ்கோங்கர் பதவி விலகியுள்ளார். இவரது விலகல் குறித்து மத்திய மனிதவளத்துறை இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால் செவ்கோங்கர் பதவி விலகி விட்டதாக மூத்த ஐஐடி அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இவரது விலகலுக்கு முக்கியக் காரணமே சுப்பிரமணியன் சாமி கொடுத்த பிரஷர்தான் காரணம் என்கிறார்கள். சம்பளப் பாக்கி கேட்டு சாமி, டெல்லி ஐஐடியின் முன்னாள் டி பிரிவு ஆசிரியராக இருந்தவர். இவர் அங்கு ஆசிரியராக இருந்தபோது அதாவது 1972ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை தனக்குரிய சம்பளப் பாக்கித் தொகையான ரூ. 70 லட்சத்தை வழங்குமாறு ஐஐடியை தொடர்ந்து நெருக்கி வந்துள்ளார் சாமி.

400 சாமியார்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு? ப்ரீயா செக்சில் ஈடுபடலாம் ஜனத்தொகையும் பெருகாது!

 புதுடில்லி:பஞ்சாப் மற்றும் அரியானாவில் செயல்படும், 'தேரா சச்சா சவுதா' என்ற மத அமைப்பின் தலைவர் குர்மித் சிங், தன் ஆதரவாளர்களான சாமியார்கள், 400 பேருக்கு, ஆண்களுக்கான கட்டாய குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது; குர்மித் ராம் ரஹீம் சிங் மீது, இன்று வழக்கு பதிவு செய்ய உள்ளது.சீக்கிய மதத்தினர் அதிகம் வாழும், பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், அந்த மதத்தின் ஒரு பிரிவு என, தேரா சச்சா சவுதா என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராக தன்னைத் தானே அறிவித்து, 'நானே கடவுள்' என கூறி வருகிறார்,  இதுவெல்லாம் ஆஷ்ரமம் என்று ஒன்று ஏற்படுத்தி கூட்டு கும்மாளம் போடுவதற்கு தயார் செய்தது..

சவுக்கு : 2000 கோடிக்கு குன்ஹாவின் தீர்ப்பு என்று ஒரு16 பக்க ஆவணத்தை .... நம்பிய மன்னார்குடி மாபியா

வெங்கடாச்சலம், சசிக்கலா, இளவரசி ஆகியோர் எப்படியாவது பெங்களுரு சிறப்பு நீதிபதி குன்ஹாவை விலைக்கு வாங்கி விடலாம் என்று கடும் முயற்சி எடுத்ததாகவும், அவர்களின் விரக்தியை பயன்படுத்திக் கொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மோசடிப் பேர்வழி, 2000 கோடி வாங்கிக் கொண்டு, குன்ஹாவின் தீர்ப்பு இதுதான் என்று ஒரு 16 பக்க ஆவணத்தை வழங்கியதாகவும், அதை அப்படியே நம்பிய மன்னார்குடி மாபியா கூட்டம், அதை ஜெயலலிதாவிடம் காண்பித்ததாகவும், உலகில் பணத்துக்கு விலைபோகாத நபர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது என்ற இறுமாப்பிலேயே வளர்ந்த ஜெயலலிதா, அதை அப்படியே நம்பியதாகவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, 27 செப்டம்பர் அன்று பரப்பன அக்ரஹாரா சென்று நீதிமன்ற வாசலில் இறங்கியதும், கைக்கடியாரத்தில் மணியைப்பார்த்து விட்டு, நாம் 12.30 மணிக்கு கிளம்பப் போகிறோம் என்று வாகன ஓட்டுனரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் சரியாக 11.04 மணிக்கு நீதிபதி குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்ததும், அடுத்த வினாடி, சசிகலாவை பார்த்து முறைத்திருக்கிறார். அப்போது நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு, அது வரை, தாம் தண்டிக்கப்படப் போகிறோம் என்பதே ஜெயலலிதாவுக்கு தெரியாது என்பதையும் ....
 தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? என்றான் பாரதி. இதே போன்ற வேதனையான நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது. இந்தியாவில் எங்கும் காணப்படாத வகையில் ஒரு அசாதாரண சூழல் தமிழத்தில் நிலவுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர், முதல்வர் பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றம் செல்கிறார்.

தமிழர்களுக்கு எதிராக என்னால் செயல்படவே முடியாது தந்தி டி.வி.க்கு ராஜபக்சே சிறப்பு பேட்டி

‘‘தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை’’ என்றும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் தந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.
ராஜபக்சே பேட்டி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெற உள்ள பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை தந்தி டி.வி.யின் சிறப்பு செய்தியாளர் எஸ்.ஏ.ஹரிஹரன் சிறப்பு பேட்டி கண்டுள்ளார்.
அவர் கேட்ட சுறுசுறுப்பான கேள்விகளுக்கு, ராஜபக்சே விறுவிறுப்பாக பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:–
நரேந்திரமோடிக்கு நன்றி கேள்வி:– சமீபத்தில், சார்க் மாநாட்டின்போது நீங்களும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் சந்தித்தீர்கள். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவித்ததற்கு மோடி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையாகக்கூட இது கருதப்பட்டது. மீனவர்களும் வரவேற்றார்கள். ஆனால், இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மீனவர் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.

ரயில்வே தொழிலாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ய முடிவு

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.ரயில்வேயில் அந்நிய நேரடி முதலீடு, தனியார்மயம், ஆட்குறைப்பு, 100 சதவீத அக விலைப்படி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எஸ்.ஆர்.இ.எஸ். தொழிற்சங்கம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வது பற்றி பெரம்பூர் ஒற்றுமை நிலையத்தில் பணிமனை கோட்ட செயலாளர் எம்.சூரியபிரகாஷ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

தமிழகம் முழுவதும் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

மதுரை மாட்டுத்தாவணியில் கல்வீசி அரசு விரைவுப் பேருந்தின்  கண்ணாடி உடைக்கப்பட்டது.    பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே  வந்த பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.  சென்னைக்கு புறப்பட்ட பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலால்  பயணிகள் தவித்து வருகின்றனர். நெல்லையிலும் பேருந்து மீது கல்வீச்சு நெல்லை: நெல்லையிலும் வடக்கு புறவழிச்சாலையில் 2 அரசு விரைவுப் பேருந்துகள் மீது கல்வீசப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரிக்கு சென்ற பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் பெண் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றத்தை நிறுத்த முடியாது: பாகிஸ்தான் திட்டவட்டம்

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைகளின் நிறைவேற்றத்தை நிறுத்த முடியாது என அந்நாடு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் தஸ்நீம் அஸ்லாம் தனது சுட்டுரை வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்தில், பயங்கரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவது எந்த சர்வதேச சட்டத்தையும் மீறும் செயலாக கருத முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
"உலக நாடுகளின் கருத்துக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கிறது. பாகிஸ்தான் தற்போது மிகவும் அசாதாரணமான சூழலைக் கண்டு வருகிறது. இதனை எதிர்கொள்ள அசாதாரணமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

பெங்களூரில் குண்டு வெடிப்பு: சென்னையை சேர்ந்த பெண் பலி

பெங்களூரு:பெங்களூரில், நேற்று இரவு, குண்டு வெடித்ததில், சென்னையை சேர்ந்த பெண் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு, பிரிகேட் ரோடு அருகிலுள்ள சர்ச் தெருவின் நடைபாதையில், நேற்றிரவு, 8:30 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், சென்னையை சேர்ந்த பவானி, 38 என்ற பெண், பலத்த காயமடைந்தார்; உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார். பெங்களுருவை சேர்ந்த கார்த்திக் என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குண்டு வெடித்த பகுதியில், ரெஸ்டாரெண்டு, பார், 'பப்'கள் அதிகமாக உள்ளன. தினமும், நள்ளிரவு முதல், அதிகாலை, 3:00 மணி வரை, இப்பகுதி பரபரப்பாக காணப்படும். நேற்று, ஞாயிற்றுகிழமை என்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. குண்டு வெடித்தவுடன், ரெஸ்டாரெண்ட், 'பப்'களில் இருந்தவர்கள், பதட்டத்துடன் வெளியேறினர். அப்பகுதி முழுவதும், போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

மைனா கும்கி கயலை விட பிரபு சாலமன் இயேசு அழைக்கிறார் எடுக்கலாம்

கயல்: கதறுகிறது காதல்; காப்பாற்றுங்கள் சினிமாக்காரர்களிடமிருந்து.. இந்திரனின் பொம்பள பொறுக்கித் தனத்தினால், அவனைக் கவுதம முனி, ‘உடலெல்லாம் பெண்குறியாகப் போகட்டும்’ என்று சபித்தான். அதுபோல் தமிழ் சினிமாவை, ‘காலம் முழுவதும் காதலை மட்டும் தான் சொல்லித் தொலைக்க வேண்டும். வேறு எதையாவது சொன்னாலும் அதையும் காதல் வழியாகத்தான் சொல்லவேண்டும்’ என்று எந்த முனிவன் சபித்தானோ தெரியவில்லை. இந்திய மற்றும் உலகச் சினிமாக்கள் எவ்வளவோ மாற்றங்களைக் கடந்து மக்களின் அரசியல், எளிய மக்களின் வாழ்க்கை; காதலன் – காதலி, கணவன் – மனைவி, சகோதர-சகோதரிகள், தாய் – மகன் இப்படியாக ‘ஆண்-பெண்’ உறவில் சமூகம் மற்றும் பொருளாதராத்தை ஒட்டி எழுகிற பிரச்சினைகள், மனப் பிரச்சினைகள், சிக்கல்கள், தீர்வுகள் என்று பயணிக்கிறது; ஆனால், தமிழ் சினிமாக்காரர்களோ, ‘காதல் கோடு’ தாண்ட முடியாமல் தவிக்கிறார்கள். இதிகாசகாலத்திலேயே, ‘பத்தினி சீதை’ கூடத் தன் ‘அவதாரபுருஷன்’ போட்ட ‘கோட்’ டை தாண்டியிருக்கிறார். இந்த நவீன காலத்தில் இதிகாசகாலத்தை விடப் பிற்போக்காக இருக்கிறார்கள் நம்ம சினிமாக்காரர்கள விடலைத் தனமான ரசிகர்களின், காதல் குறித்த அறியாமையை நியாயப்படுத்தி,

AirAsia விமானம் ஜாவா கடலில் விழுந்தது? இந்தோனேஷியா விமானம் மீட்பு பணியில் தீவிரம்!

Indonesian military is deploying forces to search for the plane, after alleged report of plane crashing in the sea between Java and Kalimantan, military sources said.
Meanwhile, AirAsia said in a statement that the search and rescue operations were in progress and promised to "keep all parties informed as more information becomes available."

மாயமான விமானம் ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்தது என்று சி.சி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பெலிடன் கடற் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமானம் இந்தோனேசியா ஜுவான்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் ஏசியாவிற்கு சொந்தமான ஏர்-பஸ் A320-200 விமானம் காலை 5:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்திவிமானத்தில் 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பயணத்தினர். ஏர்ஏசியா விமனத்தின் எண் QZ8501 ஆகும். விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வழக்கமாக காலை 8;30 மணிக்கு சென்றடையும்.  ஆனால் இன்று வழகத்திற்கு மாறாக விமானத்தின் தொடர்பு துண்டித்தது.

மோடி மனைவிக்கு பதில் அளிக்க போலீஸ் மறுப்பு ! பாதுகாப்பு பற்றி கேள்வி தகவல் அறியும் உரிமை சட்டம் ஜசொதாவுக்கு இல்லையே?

Modi's wife Jashodaben denied information under RTI  பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென். இவர் மோடியுடன் திருமணமான சில நாட்களில் பிரிந்து விட்டார். குஜராத்தில் ஆசிரியையாக வேலை பார்த்தார். மோடியுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார்.
இதற்கிடையே மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்பு அவருக்கு மனைவி இருப்பது பற்றிய தகவல் நாடு முழுவதும் தெரிய வந்தது. மோடி பிரதமரானதால் ஜசோதா பென்னுக்கு பிரதமர் மனைவி என்ற அடிப்படையில் குஜராத் போலீசார் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே ஜசோதா பென் தனக்கு எந்த அடிப்படையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தனக்கு எந்தெந்த சலுகைகள் உள்ளன என்பன உள்ளிட்ட தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் குஜராத் போலீசுக்கு மனு அனுப்பி இருந்தார்.

AirAsia 4.5 மணி நேரம் பறப்பதற்கு மட்டுமே எரிபொருள் ? 8 மணிநேரம் ஆகியும் தகவல் இல்லை?

ஏர்ஏசியா விமானம் மாயமாகி 8 மணிநேரம் ஆகியும் விமானம் குறித்து எந்தஒரு தகவலும் வெளியாகவில்லை. மீட்பு மற்றும் தேடுதல் பணிக்கு உதவி செய்ய இந்தியா தயார் நிலையில் உள்ளது. இந்தோனேஷியாவின் சுரபயா நகரில் இருந்து அதிகாலை சிங்கப்பூருக்கு 162 பேருடன் புறப்பட்டு சென்ற ஏர்ஏசியாவின் ஏர்-பஸ் A320-200 விமானம் நடுவானில் மாயமானது. காலை 8:30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய ஏர்ஏசியா விமானம், விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியது. காலை 7:24 மணியளவில் விலகி சென்றது. துண்டிப்பை அடுத்து மாயமான ஏர்ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையே மாயமான ஏர் ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது மாயமானது.

நிலம் கையகப்படுத்த வசதியாக அவசர சட்டம் ! இன்சுரன்ஸ், சுரங்கத்தொழில், நிலம் ! அந்நியரே Take India ! மோடியின் புதிய கோஷம்?

புதுடில்லி : காப்பீடு, நிலக்கரி ஆகிய துறைகளை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் துறை சார்ந்த, நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்தத்திற்கும் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபாவில் நிறைவேறிய காப்பீட்டு மசோதாவை, ராஜ்யசபாவில் தாக்கல் செய்ய முடியாத வகையில், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டை, 26 சதவீதத்தில் இருந்து, 49 சதவீதமாக உயர்த்துவது; நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது ஆகியவை தொடர்பான சட்ட திருத்த மசோதாக்களை அமல்படுத்த, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அவை நடைமுறைக்கு வந்துள்ளன.இதையடுத்து, நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதாவையும், அவசர சட்டம் மூலம் நடைமுறைக்கு கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  மக்களின் சொத்து கார்பொரேட்கையில..நிலம் அபகரிப்பை எளிதாக்கும் வழி..அப்புடியே அந்நியரும் இந்தியாவை பகுதி பகுதியா வாங்க அனுமதிப்பாங்க போல.."டேக் இந்தியா" இதுதான் மோடி அரசின் அடுத்த கோஷம்..

இன்னொரு வருங்கால தமிழக CM நிர்மலா சீதாராமன் : தமிழகம் எனக்கு செய்த சேவை என்ன ? இந்தி படிக்கவிடல்லையே?

எந்த சபையிலும், அன்னிய பாஷையான ஆங்கிலத்தில் பயமின்றி பேச முடிகிற என்னால், இந்திய மொழியான இந்தியில் பேச பயமும், தயக்கமும் ஏற்படுகிறது. இதற்கு யார் காரணம்; என்ன காரணம்?'' என, ஆவேசமாக கேள்வி எழுப்பிய மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ''தமிழகத்திற்கும், தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் இந்தி படிப்பது அவசியம்,'' என்றும் வலியுறுத்தினார். கோவையில் தொழில் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்த, நிர்மலா சீதாராமன், 'தினமலர்' நாளிதழுக்கு, அளித்த சிறப்பு பேட்டி: ஒவ்வொரு கட்சியும், தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்கிறது. அதன்படி பா.ஜ.,வும், தேசிய கட்சி என்ற முறையில், மொழிப் பிரச்னையை அணுகுகிறது.தமிழுக்கும், பா.ஜ.,வுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றனர். ஒரு தேசியக் கட்சி என்ற முறையில், தமிழக மக்களை, அவர்களது உணர்வை பார்க்கிறோம். தமிழுக்கும், தமிழ் கலாசாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, விரும்புகிறோம். அதற்கான நடவடிக்கைகளில் ஒன்று தான், வட மாநிலங்களில், திருவள்ளுவர் பிறந்த நாள் கொண்டாட்டம். தாய், தாய் மொழி, தாய் தேசம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது என வலியுறுத்துகிறோம். இந்த அய்யங்கார  அம்மணி இப்படியே பேசினால் இனி பொன் ராதாகிருஷ்ணன்  கூட வெற்றி பெறமுடியாதுல ?

சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது!

பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை பலாத்காரமாக கருத முடியாது: மும்பை ஐகோர்ட் திருமணம் செய்வதாக கூறி பெண்ணின் சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.புனேவைச் சேர்ந்த ஒரு பெண், இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி, பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காதலிக்கும்போது பரஸ்பர சம்மதத்துடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவது இந்தியாவின் பெரிய நகரங்களில் தற்போது இயல்பாகிவிட்டதாகவும், இந்த விதமான காதல் தோல்வியில் முடிவடைந்த பின்னர், காதலி தன்னை காதலன் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.nakkheeran.in

AirAsia இந்தோனிசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயம்?

An AirAsia flight travelling from the Indonesian city of Surabaya to Singapore has lost contact with air traffic control, the company has said.இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற பயணிகள் விமானம் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான ஏர் ஏசியா விமானத்தில் 155 பயணிகள் பயணம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.  காலை 8 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்றதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். dinakaran.com

பாரதரத்னா :யார் இந்த மண்ணுருண்டை மாளவியா? பார்ப்பான் கடல் தாண்ட கூடாது என்பதால் மண் உருண்டையுடன் கப்பலில் சென்ற கில்லாடி!

மண்ணுருண்டை மாளவியா!இந்து  மத வருணாசிரமவாதி - காந்தியைப் படுகொலை செய்த இந்து மகாசபையைத் தோற்றுவித்த - ஒரு சனாதனவாதிக்குப் பாரத ரத்னா  விருது கொடுக்கப்படலாமா என்ற அடிப்படை வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:
இந்திய அரசின் தலைசிறந்த விருதான பாரத ரத்னா விருது வழமையாக குடிஅரசு நாளான - ஜனவரி 26இல் தான் - முதல் நாள் இரவு அறிவிப்பார்கள்.
ஆனால் இம்முறை - பிரதமர் மோடி அரசால், மாற்றப்பட்டு, வாஜ்பாயின் 90ஆவது பிறந்த நாளில் அவருக்கு வழங்கப்பட அறிவிக்கப்பட்டுள்ளது.
(அவர் நீண்ட காலம் உடல் நலக் குறைவுடன் உள்ளதாக செய்திகள் வரும் நிலையில் அவர் உடல் நலம்தேற - மனிதநேய அடிப்படையில் வாழ்த்துகிறோம் - அவருக்கு வழங்கியது  எந்த அளவுக்குச் சரி என்பதை ஒருபுறம் நாம் ஒதுக்கி வைக்கவே விரும்புகிறோம்).
அவருடன் இணைந்து மற்றொருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்தான் பண்டிட் மதன்மோகன் மாளவியா; இவர் உத்தரப்பிரதேச காசிப் பகுதியைச் சார்ந்த உயர்ஜாதி  பார்ப்பனர் (வாஜ்பேயும் உயர்ஜாதி பார்ப்பனர்தான் - வாஜ்பேயம் என்ற யாகத்தை நடத்த உரிமை பெற்ற உயர் ஜாதியின் உயர் பரிஷத் இந்து சனாதன மதப்படி)

அரவிந்தரே உயிர்த்து வந்தாலும் கழுவ முடியாத பாவம் சூழ்ந்த அரவிந்தர் ஆஸ்ரம்?

- வா.மணிகண்டன் (எழுத்தாளர் )

லைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும்கூட, ஒரு செய்தி கடந்த சில நாட்களாக சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அது,  அரவிந்தர் ஆசிரமத்தின் பிரச்னைகள்.
1926-ம் ஆண்டு அரவிந்தரால் புதுச்சேரியில் அமைக்கப்பட்ட ஆசிரமம், இப்பொழுதுதான் இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்குகிறது. பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் இளைய பெண்ணான ஹேமலதா கர்ப்பம் அடைந்ததுதான் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி என்று ஆசிரம நிர்வாகிகள் சொல்கிறார்கள்.
அதே ஆசிரமத்தில் தங்கியிருந்த கிருஷ்ண பெல்லியப்பா என்பவருடன் ஹேமலதாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், இது ஆசிரம விதிகளுக்கு முரணானது என்பதால் வெளியேறச் சொன்னதாகவும் சொல்கிறார்கள்.
ஆனால், எல்லா செய்திகளுக்கும் இன்னொரு தரப்பு இருப்பதைப்போல, ஹேமலதாவின் குடும்பத்தினருக்கும் ஒரு தரப்பு இருக்கிறது. அந்தக் குடும்பத்தினர் ஆசிரமத்தின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டைச் சுமத்துகிறார்கள். நிர்வாகிகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள். உள்ளூர் அரசாங்கத்திலிருந்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், பெண்கள் கமிஷன் என்ற எந்த இடத்திலும் அவர்களால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. அவர்கள் முறையிட்ட ஒவ்வோர் இடமும், ‘நீங்கள் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டும்’ என்றே கெடு வைத்து உத்தரவிடுகிறார்கள்.  ஆசிரமம், பணம், அரசியல் சப்போர்ட், பாலியல் வக்கிரம், கொலை ! இந்த மாபியா கும்பலுக்கு அதிகார வர்க்கம் பாத பூஜை செய்திருக்கும் என்பதை யூகிக்க யாரும் ஒரு ஐன்ஸ்டீனாக இருக்க வேண்டியதில்லை ! பேசாம இழுத்து மூடுங்கப்பா உள்ளே போடுங்கப்பா

கராச்சியில் வசிக்கும் தாவுத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்’ மத்திய அரசு வற்புறுத்தல்

மும்பை தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் வசிப்பதற்கான புதிய ஆதாரம் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. புதுடெல்லி
1993–ம் ஆண்டு மார்ச் மாதம் 12–ந்தேதி மும்பை நகரில் அடுத்தடுத்து 13 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
தாவூத் இப்ராகிம் இந்த குண்டுவெடிப்புகளில் 350 பேர் பலியானார்கள். 1,200–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை பிடித்து தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்திய அரசு பலமுறை பாகிஸ்தானை கேட்டுக் கொண்டது. அதற்கான ஆதாரங்களையும் வழங்கியது.

கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா! பாட்டும் நானே பாவமும் நானே !

கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும்,திருவிளையாடல் படத்தில் வரும் பாட்டும் நானே பாவமும் நானே என்றபாடல் இவரது பாடல்தான் .
கா.மு.ஷெரீப்பின் நூற்றாண்டையொட்டி, (26-12-2014) வெள்ளி மாலை, சென்னை ராணி சீதை மன்றத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன், காவ்யா சண்முக சுந்தரம், வீரபாண்டியன், எம்.ஏ.முஸ்தபா, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.விழாவில், கா.மு.ஷெரீப் எழுதிய நூல்கள், நூற்றாண்டு மலர், கா.மு.ஷெரீப் திரை இசை முத்துக்கள் ஆடியோ குறுந்தகடு ஆகியன வெளியிடப்பட்டன.