ஞாயிறு, 28 டிசம்பர், 2014

AirAsia விமானம் ஜாவா கடலில் விழுந்தது? இந்தோனேஷியா விமானம் மீட்பு பணியில் தீவிரம்!

Indonesian military is deploying forces to search for the plane, after alleged report of plane crashing in the sea between Java and Kalimantan, military sources said.
Meanwhile, AirAsia said in a statement that the search and rescue operations were in progress and promised to "keep all parties informed as more information becomes available."

மாயமான விமானம் ஏர் ஏசியா விமானம் ஜாவா கடலில் விழுந்தது என்று சி.சி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பெலிடன் கடற் பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் விமானம் இந்தோனேசியா ஜுவான்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் ஏசியாவிற்கு சொந்தமான ஏர்-பஸ் A320-200 விமானம் காலை 5:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்திவிமானத்தில் 155 பயணிகளும், 7 ஊழியர்களும் பயணத்தினர். ஏர்ஏசியா விமனத்தின் எண் QZ8501 ஆகும். விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வழக்கமாக காலை 8;30 மணிக்கு சென்றடையும்.  ஆனால் இன்று வழகத்திற்கு மாறாக விமானத்தின் தொடர்பு துண்டித்தது.


தொடர்ப்பு துண்டிப்பு

காலை 5:30 மணிக்கு இந்தோனேஷியாவில் புறப்பட்டு சென்ற விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதுதொடர்பான தகவல்கள் வெளியாகி பெரிதும் அச்சை ஏற்படுத்தியது.

சிங்கப்பூர் சென்றடைய வேண்டிய ஏர்ஏசியா விமானம், விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியது. தகவல் பறிமாற்றம் துண்டிக்கப்பட்டது. விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகிச் சென்றுவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே "இந்தோனேஷியாவின் சுராபாயா நகரில் இருந்து சிங்கப்பூர் நகருக்கு சென்ற ஏர்ஏசியா விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து காலை 7:24 மணியளவில் விலகி சென்றதை உறுதிசெய்வதில் நாங்கள் மிகவும் வருத்தம் அடைகிறோம்" என்று ஏர்ஏசியா டூவிட்டரில் தகவல் தெரிவித்தது.

தேடும் பணி தீவிரம்

சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் ஜாவா கடற்பகுதிக்கு மேல் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்தது என்று போக்குவரத்து துறை அதிகாரி ஹாதி முஸ்தபா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விமானம் காலிமன்டான் மற்றும் பெலிடங் தீவிற்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது தொடர்பை இழந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை விட்டு விலகியதை அடுத்து மாயமான ஏர்ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  "இந்தோனேஷியா அதிகாரிகளால் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகிறது," என்று ஏர்ஏசியா தெரிவித்தது.

இந்தோனேஷியா கடற்படைக்கு சொந்தமான சி-130 விமானங்கள் மாயமான விமானத்தை தேடுதல் பணியை தொடங்கியது. கடற்படை, விமானப்படையும் விமானத்தை தேடும் பணியில் இறங்கியுள்ளது.

149 இந்தோனேஷியர்கள்

மாயமான விமனத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

7 ஊழியர்கள் உள்பட 162 பேர் மாயமான விமானத்தில் பயணம் செய்தனர் என்று இந்தோனேஷியா டி.வி. செய்திகள் வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பயனம் செய்தவர்களில் 149 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள். கொரிய நாட்டை சேர்ந்த 3 பேரும், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிரிட்டனை சேர்ந்த தலா ஒருவர் பயணம் செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் குழந்தைகளும் இதில் அடங்கும்.

ஜாவா கடற்பகுதியில் விழுந்தது

மாயமான விமானம் ஜாவா கடற்பகுதியில் விழுந்து விபத்துக்கு சிக்கியது என்று சி.சி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


பெலிடன் கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகவல் அரசு தரப்பிலோ, ஏர்ஏசியா தரப்பிலோ உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து விமானத்தை தேடும் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

3 வது மிகப்பெரிய விமான விபத்து

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்றது. இருப்பினும், அதன்கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜூலையில் ரஷியா அருகே கிழக்கு உக்ரைனில் ஒரு மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதை கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு கூறியது. விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகினர். இந்நிலையில் ஏர்ஏசியா விமானமும் மாயமாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.dailythanthi.com

கருத்துகள் இல்லை: