வியாழன், 7 ஆகஸ்ட், 2014
ரயில்வேயில் 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி !
டெல்லி: பாதுகாப்புத் துறையில் 49 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை
அனுமதிப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும்,
ரயில்வே கட்டமைப்புத் துறையில் 100 சதவீத அளவுக்கு அன்னிய நிறுவனங்கள்
நேரடி முதலீடு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக்
கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. காப்பீட்டுத் துறையில் 26
சதவீதமாக இருந்த அன்னிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவீதமாக
உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இரு வாரங்களுக்கு முன்பு ஒப்புதல்
வழங்கியது. இந்த நிலையில் தற்போது பாதுகாப்பு, ரயில்வே ஆகிய துறைகளிலும்
அன்னிய முதலீட்டு உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி: மத்திய
அமைச்சரவை ஒப்புதல்
மாணவிகளை பாலியல் தொழிலில் இடுபடுத்திய பாதிரியார் அருள்தாஸ் உட்பட ஐவர் கைது ! கடலூரில் அதிர்ச்சி !
மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியார் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது
கடலூர்
மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த விவசாயி மகள், அதே பகுதியில் உள்ள அரசு
மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
கூத்தப்பன்குடிக்காடு பகுதியை சேர்ந்தவரின் மகள் அதே பள்ளியில் 9ம் வகுப்பு
படித்து வருகிறார்.
கடந்த
மாதம் 16ம் தேதி காலை பள்ளிக்கு சென்ற இருவரும் மாலை வீடு திரும்பவில்லை.
இது குறித்து மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி காவல் நிலையத்தில்
தனித்தனியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதாகர்,
சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிகளை
தேடி வந்தனர்.மாணவிகள்
வைத்திருந்த செல்போனில் தொடர்பு கொண்டபோது திருப்பூரில் உள்ள பனியன்
தொழிற்சாலையில் வேலையில் இருப்பதாகவும் கம்பெனியை விட்டு வெளியே
அனுப்பாததால் கம்பெனி பெயர் தெரியவில்லை. திருப்பூர் பேருந்து நிலையம்
அருகில் உள்ள பெரிய கம்பெனி என போலீசாரிடம் கூறியுள்ளனர்.
ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி ! Gangs of ஆன்மீக கிரிமினல்களின் கொள்ளை கொலை பட்டியல் காட்சிக்கு ?
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் –
இந்து ஆன்மீக கண்காட்சி என்றால் ஆன்மீகம்தானே
முக்கியமான விற்பனை சரக்கு? ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழக
மைதானத்தில் நடந்த இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ
காஞ்சி சங்கரராமன் கொலை புகழ் காஞ்சி காமகோடி சங்கராச்சாரி ஜெயேந்திரன்.
ஆன்மீகம் ஒரு ரியல் எஸ்டேட் தொழில் என்றால் அதில் இன்டர்நேஷனல்
கட்டப்பஞ்சாயத்து தாதா ஜெயேந்திரன்தான்.
இந்த கண்காட்சியை ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தவரோ காஞ்சி காமகோடி சங்கராச்சாரி, சங்கரராமன் கொலை புகழ் ஜெயேந்திரன்தான்.
கொலை கொள்ளைகளில் தமிழகம் 2 வது இடம் ! உத்தர பிரதேசம் முதாவது இடம் !
தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு
ஜெயலலிதா ஏன் பதில் அளிக்கவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறை மானிய கோரிக்கை விவாதம் மீதான
ஜெயலலிதாவின் பதில் ஏமாற்றம் அளிப்பதாகவும், கொலை, கொள்ளை குற்றங்களில்
தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் குற்றம்
சாட்டியுள்ளார்.தமிழகத்தில்
சட்டம் ஒழுங்கு சீல்குலைந்தது குறித்து நான் எழுப்பி வரும் கேள்விகளுக்கு
ஜெயலலிதா பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் காவல்துறை
மானிய கோரிக்கை மீதான அவரது பதில் உரை ஏமாற்றம் அளிக்கிறது. அனைத்துக்
கட்சி உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் அமர்ந்து பிரச்சனைகளை விவாதிப்பது
தான் மரபு. இந்த ஆட்சியில் அந்த ஜனநாயக மாண்பு இல்லை. எதிர்க்கட்சிகளை
புறக்கணிக்கும் போக்குடன் செயல்படும், சபாநாயகர் தனபால் அந்த பதவிக்கே
கரும்புள்ளியாக விளங்குகிறார்.
புதன், 6 ஆகஸ்ட், 2014
சவூதி அரேபியா ஆண்கள் பாகிஸ்தான் வங்கதேச பெண்களை திருமணம் செய்ய தடை !
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஆண்கள், பாகிஸ்தான்,
வங்கதேசம், சாட் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நான்கு நாடுகளைச் சேர்ந்த
பெண்களை திருமணம் செய்த கொள்ளவதற்கு தடை விதித்து அந்நாட்டில் இருந்து
உத்தரவு வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் பெண்கள் வசித்து வருகிறார்கள்
இந்தத் தடை குறித்து மெக்கா காவல்துறை உயர் அதிகாரி அஸ்ஸாப் அல் குரேஷி கூறுகையில், வெளிநாட்டு பெண்களை மணப்பது தொடர்பாக கூடுதல் கட்டுப்பாடுகள் வரப்பட்டுள்ளன. திருமணத்திற்கு முன்பு தாங்கள் மணக்கப் போகும் பெண்கள் குறித்த விவரத்தை சமர்ப்பிப்பதோடு, ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை சமர்பிக்க வேண்டும் .

தலையில் தேங்காய் உடைத்து முட்டாள்கள் வழிபாடு ! பலருக்கு மண்டையில் தையல் !
தலையில் தேங்காய் உடைப்பதா? கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்: கி.வீரமணி அறிவிப்பு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,கரூர்
மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி
கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா என்ற பெயரில் இருபால்
பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் கொடுமை நடந்து கொண்டு வருகிறது.நூற்றுக்கணக்கானவர்களின்
தலைகளில் அக்கோவில் பூசாரி தேங்காய் உடைக்கிறார். குழந்தைகள், முதியவர்கள்
என்று பாராமல் தேங்காய் உடைக்கப்படுகிறது. இவ்வாண்டும் இது
நடைபெற்றுள்ளது.நூற்றுக்கணக்கான
பக்தர்களின் மண்டைகள் பிளந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்பியுள்ளது. பலருக்கு
மண்டையில் தையல் போடும் அளவுக்கு விபரீதமாகியிருக்கிறது.
30 வருஷங்களாக சத்துணவு காய்கறிக்கு ஒதுக்கப்படுவது 81 பைசா மட்டுமே ?
தமிழகத்தில், கடந்த 1984-ம் ஆண்டு முதல் சத்துணவு சாப்பிடும் ஒவ்வொரு
குழந்தைக்கான காய்கறிசெலவுக்கு 81 பைசா மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கடந்த 30 ஆண்டு களாக காய்கறி செலவுக்காக அரசு ஒதுக்கும் குறைந்த தொகையைக்
கொண்டு கழிவு காய்கறிகளை சாப்பிடும் நிலைக்கு மாணவ, மாணவிகள்
தள்ளப்பட்டுள்ளதாக ‘தி இந்து’ தமிழ் அறிமுகப்படுத்தியுள்ள ‘உங்கள் குரல்’
தொலைபேசி எண்ணில் வாசகர் ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவு
திட்டத்தை செயல் படுத்தினார். கடந்த 1984-ம் ஆண்டு இத்திட்டத்தை
மேம்படுத்தி சத்துணவுத் திட்டமாகக் கொண்டு வந்தார் முன்னாள் முதல்வர்
எம்.ஜி.ஆர்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போதெல்லாம் சத்துணவுத் திட்டம் பல்வேறு
பரிமாணங்களாக மாற்றம் செய்யப்பட்டது. வாரத் துக்கு ஒரு முட்டை என்றும்
பின்னர் வாரத்துக்கு ஐந்து நாள் என்றும் வழங்கப்பட்டது.
Chennai அரசு மருத்துவமனையில் ஆயிரம் சிறு நீரக அறுவை சிகிச்சை!சாதனை !
சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆயிரம் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
மாற்று சிறுநீரகஅறுவை சிகிச்சை
உலக உடல் உறுப்புகள் தானம் செய்யும் தினம் இன்று (புதன்கிழமை)
அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின்
முதல்வர் டாக்டர் விமலா, சிறுநீரக இயல் துறை தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன்
ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள்
கூறியதாவது:-
சிறுநீரகம் செயல் இழந்த நோயாளிகளுக்கு அவர்களுடைய நெருங்கிய
உறவினரிடமிருந்து தானம் பெற்றும் மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடம் இருந்து தானம்
பெற்றும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் கடந்த 1987-ம்
ஆண்டு முதல் தொடர்ச்சியாக மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு
வருகிறது. பணம் புடிங்கி தனியார் மருத்துவ மனைகளுக்கு எல்லாம் இது ஒரு சாட்டை அடி! வாழ்க பணியாளர்கள் அனைவரும்
அடுத்த சிலுக்கு நம்ப அஞ்சலியாமே ?இயக்குனர் கருத்து !
கோவிந்தாச்சாரியா : Facebook twitter சமூக தளங்களை மோடி அரசு பயன்படுத்துவது சட்டவிரோதம்!
அதில், மோடி அரசில் 19 அமைச்சகங்கள் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளன. 5 அமைச்சகங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளன. பிரதமர் அலுவலகமும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளது. மத்திய அரசின் முறையான அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஆவணத்தையும் இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்கிறது பொது ஆவண சட்டம். இதனால் அரசாங்கம் இ மெயில்களைப் பயன்படுத்துவது கூட சட்டப்படி தவறு. மேலும் இந்த சமூக வலைதளங்கள், இ மெயில்களின் சர்வர்கள் அனைத்தும் வெளிநாட்டில்தான் இருக்கின்றன. அப்படியான நிலையில் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எப்படி மற்ற நாடுகளுக்கு பரிமாறிக் கொள்ள முடியும்?
அழகிரி மகள் கயல்விழி கலைஞரை சந்தித்தார் ! சமரசம் வருமா ?
தி மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை,
மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கான, சமரச பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது.
அதன் ஒரு கட்டமாக, சென்னையில் நேற்று முன்தினம், தி.மு.க., தலைவர்
கருணாநிதியை, அழகிரி யின் மகள் சந்தித்து பேசி உள்ளார்.
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பெங்களூருவுக்கு சென்றிருந்த நேரத்தில், இந்த சந்திப்பு சென்னையில் நடந்துள்ளது. இந்த சந்திப்பு நடந்தபோது, அழகிரியும் சென்னையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தாயார் தயாளுவை சந்திக்க, அழகிரி சென்னை வரும் தகவல், 2ம் தேதி வெளியாகியது. அதன்படி, 3ம் தேதி இரவு, 10:00 மணிக்கு அழகிரி சென்னை வந்தார். 4ம் தேதி காலையில் அவர், தயாளுவை சந்திக்க, கோபாலபுரம் வீட்டுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஸ்டாலினை தளபதி தலைவர் என்றெல்லாம் உசுப்பேத்தி விட்டவர்கள்தான் திமுகவின் முதல் எதிரிகள் . அவர்கள் தொகை கழகத்தில் அதிகமானது கழகத்தின் வரலாற்று சோகம் வாழ்ந்தாலும் ஏசும் வீழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா என்ற பாடல் சரியாக பொருந்துகிறது தி்முக விற்கு

மரண தண்டனையை நீக்கப்பட மாட்டாது ! மத்திய அரசு தீர்மானம் ?
மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரென் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மரண
தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. மரண தண்டனைக்கு
வகை செய்யும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 1890யை திருத்தும் ஆலோசனைகள்
ஏதும் அரசிடம் இல்லை.குற்றவியல்
வழக்குகளை விரைந்து விசாரித்து, கால தாமதங்களை தவிர்க்க, குற்றவியல்
நடைமுறைச் சட்டங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. குறித்த காலத்தில் விசாரணை
நடத்தி, விரைவில் நீதி வழங்கும் வகையில் 2008ம் ஆண்டே சட்ட திருத்தங்கள்
கொண்டுவரப்பட்டுள்ளன என்றார்.தற்கொலை
முயற்சிகளுக்கு தண்டனைகளில் இருந்து விலக்கு அளிப்பது பற்றி குறிப்பிட்ட
அவர், தற்கொலை முயற்சியை குற்றமாக அறிவிக்கும், இந்திய தண்டனை சட்டத்தின்
309வது பிரிவை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்கிறது
என்று தெரிவித்துள்ளார்.ஏற்கனவே
வேதனையில் உள்ள ஒருவரை மீண்டும் தண்டிப்பது மனிதாபமற்ற செயல் என்று சட்ட
ஆணையம் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது nakkheeran.in
தமிழர்களே தமிழர்களே இந்தி படியுங்கோ ! சொல்வது மார்கண்டேய கட்ஜு ! இனி படிசாப்போலதாய்ன் !
தமிழர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும்' என, இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் இருந்தவர் மார்கண்டேய கட்ஜு. இவர், தற்போது, இந்திய பிரஸ் கவுன்சில் தலைராக உள்ளார்.
பரபரப்பு :தன், 'பேஸ்புக்' பக்கத்தில், திடீர் திடீரென பல கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருபவர்.இவர் நேற்று தன், 'பேஸ் புக்' பக்கத்தில், தமிழர்கள் இந்தி கற்பது குறித்து, ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார்.அக்கட்டுரையில் கூறியிருப்பதாவது:அனைத்து தமிழர்களும் இந்தி மொழி கற்க வேண்டும் என, கேட்டுக் கொள்கிறேன். நான் இந்தியை திணிக்கிறேன் என எடுத்துக் கொள்ளக் கூடாது.நான் எதையும் திணிப்பதை எதிர்ப்பவன். இது ஜனநாயகத்தின் காலம் என்பதால், எதையும் திணிக்க முடியாது. அதான் ரொம்ப வருத்தமோ ? ஹிந்தி பேசும் மக்கள் தமிழ் படிக்க தயாரா?......ஹிந்தி எல்லாம் பள்ளியில் படிக்க அவசியம் இல்லை.....மாலையில், விடுமுறையில் படித்தால் போதும்.....ஹிந்தி மொழியை பள்ளியில் படித்து எவனும் கவிதை, கட்டுரை எழுதப்போவதில்லை.......கொஞ்சம் பேசணும், கொஞ்சம் போர்ட் படிக்கணும்......இதுக்கெல்லாம் பள்ளியில் ஹிந்தி படிக்க தேவையே இல்லை.......தமிழை, ஆங்கிலத்தை நல்லா படித்தால் போதும்......ஹிந்தி படிக்கிறேன் என்று நேரத்தை வீணடிக்க வேண்டாம்.....

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014
தாராபுரத்தில் 11 கொத்தடிமைகள் மீட்பு !
IAS IPS மத்திய அரசு பணியாளர் தேர்வுக்கு ஆங்கிலம் தேவையில்லை !
புதுடில்லி:நாடு முழுவதும், மாணவர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பை
அடுத்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பொறுப்புகளுக்கு, மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., நடத்தும், முதல்நிலை தேர்வில்
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
'முதல்நிலை தேர்வின், திறனறித் தேர்வு - 2ம் தாளில் இடம்பெறும், ஆங்கில மொழிப்புலமை குறித்த கேள்விகளுக்கான மதிப்பெண், தகுதிப் பட்டியல் அல்லது கிரேடு தயாரிக்க சேர்க்கப்படாது. அதே நேரத்தில், 2011ம் ஆண்டில், யு.பி.எஸ்.சி., தேர்வு எழுதியவர்களுக்கு, 2015ல் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்' என, மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் அறிவித்தார். இது இந்தி வெறியர்களால் தூண்டப்பட்டது. சுருங்கி வரும் உலகில் ஆங்கிலம் தெரியாமல் உலக நடப்பு, அறிவியல், மேலாண்மை போன்றவற்றை இந்திகார அதிகாரிகள் எப்படி அறிவார்கள்? இந்தி பேசாத மாநிலங்களில் இவர்கள் எப்படி குப்பை கொட்டுவார்கள்? இது அப்பட்டமான இந்தி திணிப்பு. மேலும் இந்தி பேசுபவர்களுக்கு அதிகப்படியான சலுகை, இந்தி பேசாதவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஆங்கிலம், இந்தி இரண்டும் நல்லது. ஆங்கிலம் வேண்டாமெனில் இந்தி வெறியர்கள் தமிழ், தெலுங்கு போன்ற வேறு ஏதேனும் ஒரு பிராந்திய மொழியையும் கற்கட்டும். மத்திய அரசு பணிக்கு ஏதேனும் இரண்டு மொழிகள் கட்டாயம் என்று இருக்க வேண்டும். அதில் ஆங்கிலம் அவசியம். இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் சும்மா விடக்கூடாது. முளையிலேயே இந்தியை விரட்டுங்கள் இல்லையேல் அலுவலக நடை முறையில் இல்லாத மற்ற மொழிகள் மெல்ல சாகும்.

தனிநாயகம் அடிகள் ! 1554 ஆம் ஆண்டில் போர்த்துகல்லில் அச்சிடப்பட்ட லூசோ-தமிழ் மறைக்கல்வி (Cartilha)நூல் கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது இனவெறி தாக்குதல் ! தலைப்பாகையை கண்டால் பயங்கரவாதிகள் என சந்தேகமோ ?
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கை சேர்ந்தவர் சந்தீப் சிங் (29).
சீக்கியரான இவர் தனது நண்பர் பல்தே சிங்குடன் நியூயார்க்கில் ரோட்டோரம்
நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர்கள் மீது இடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சந்தீப் சிங் லாரி டிரைவரிடம் தட்டி கேட்டார். உடனே அந்த நபர் சீக்கிய இளைஞர்களிடம் இனவெறியுடன் பேசினார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து லாரியை செல்ல விடாமல் சந்தீப் சிங் அதன் முன்னால் நின்று மறியல் செய்தார். போலீசாரை அழைத்தார். ஆனால் மனிதாபிமானம் இல்லாத அந்த டிரைவர் லாரியால் சந்திப் சிங் மீது மோதினார்.

சமந்தா : திரை உலகில் படு மோசமான ஆணாதிக்கம் ! இதில் யாரும் விதி விலக்கில்லை !
கமர்ஷியல்
படங்களில் நடித்து சலித்துவிட்டதா என்பதற்கு பதில் அளித்தார்
சமந்தா.கவர்ச்சிக்கு இடம் தராமல் ஆரம்ப கால படங்களில் நடித்து வந்த சமந்தா
தற்போது படு கவர்ச்சிக்கு ஓகே சொல்கிறார். கமர்ஷியல் படங்களில் நடிப்பது
போர் அடிக்கிறதா என்றபோது பதில் அளித்தார்.அவர் கூறியதாவது:
திரையுலகில் ஆணாதிக்கம்தான் அதிகம். இந்த சூழலில் ஹீரோயின்களுக்கு நல்ல
வேடம் என்பது அரிதுதான். தனிப்பட்ட முறையில் ஹீரோயினை மையமாக வைத்து
எழுதப்படும் கதைகளில் வேண்டுமானால் அதுபோன்ற கதாபாத்திரங்களை
எதிர்ப்பார்க்கலாம். மற்றபடி கமர்ஷியல் படங்கள் என்பது தவிர்க்க முடியாதது.
>வெளியான ‘குயின் ரீமேக்கில் நடிக்காதது ஏன் என்கிறார்கள்.
ஒரிஜினல் கதையில் கொண்டுவரப்பட்ட உணர்வுகள் ரீமேக்கில் வருமா என்ற சந்தேகம்
எனக்கு எழுந்தது. அதனால் ஏற்கவில்லை. இதுபோல் ஹீரோயினை மையமாக வைத்து
வலுவான கதை வந்தால் அதில் நடிப்பேன்.திருமணம் எப்போது, காதலை பற்றி
கூறுங்கள் என சிலர் கேட்கும்போது வருத்தம் ஏற்படுகிறது. பெண் என்றாலே
திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்றுதான் சமூகம்
விரும்புகிறது. திருமணத்தை தாண்டி சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.
அது ஆண்களுக்கு மட்டும்தான் என்ற நினைப்பு மாற வேண்டும். -.tamilmurasu.orgஜெயலலிதா அரசுக்கு நீதிபதி சாட்டை அடி ! விசாரணைக்கு ரகுபதியை விட்டால் வேறு ஆளே இல்லையா ?
சென்னை: மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் பலியான சம்பவம்
தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும்
என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, அரசு வக்கீலை பார்த்து
சரமாரி கேள்வி எழுப்பினார். சென்னை உயர்நீதிமன்றத்தில், தி.மு.க.
பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியிருப்பதாவது:
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், ஜூன் 28ந் தேதி 11 அடுக்கு மாடி கட்டிடம் சீட்டு கட்டுப்போல இடிந்து சரிந்து விழுந்ததில் பலர் பலியாகியுள்ளனர். சரிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளை தேசிய பேரிடர் மீட்பு படையினர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என்று 3 ஆயிரத்து 750 பேர் 8 நாட்கள் போராடி அகற்றியுள்ளனர். என்னதான் சாட்டை பம்பரம்னு சுழற்றினாலும் கடைசில ஊத்திதான் மூடப்போறீகளா?

பிரியங்கா காந்தி உத்தர பிரதேஷ் காங்கிரஸ் தலைவராக ! பராக் !
காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக, பிரியங்கா தீவிர
அரசியலில் குதிக்கிறார். அவர் உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவராக
நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்,
காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. ஆளுங்கட்சியாக இருந்த அக்கட்சி,
வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பிடிக்க
முடியாத நிலை ஏற்பட்டது.கட்சியின் படுதோல்விக்கு துணைத் தலைவர் ராகுல் காந்தியே காரணம் என்று மூத்த தலைவர்கள் பலர் முணுமுணுத்து வருகிறார்கள்.
மாநிலங்களில் கட்சி நிர்வாகிகளை மாற்றும் பணியும் நடந்து வருகிறது.பிரியங்கா இருப்பினும், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு தரப்பினர் விரும்புகிறார்கள். வாழ்த்துக்கள் ஆனால் ஒரேஒரு ஆலோசனை அம்மணீ உங்க கணவன் பக்கா பிராடாக இருக்கிறார் ! அவரை எங்க தேடி பிடிச்சீங்களோ பெனாசிருக்கு வாய்ச்ச சர்தாரி மாதிரி தெரியராருங்கோ ! ஜாக்கிரதையா இருங்கோ ! உங்க பெயரையும் கெடுத்து ஊரை அடிச்சு உலைல போட்ட ஆசாமி !
மேனகா காந்தி : வருண் காந்தி உபியின் நல்ல முதலமைச்சராக இருப்பார் !
வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது: மேனகா காந்தி<;வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிட்டுள்ளது என மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இது குறி்த்து லக்னோவில் அவர் கூறியதாவது: தற்போது
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், மத்தியில் பா.ஜ.கவும்
ஆட்சியில் உள்ளன. மக்களவை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றதையடுத்து உத்தரப்
பிரதேசத்தில் சமாஜ்வாதி அரசு வளர்ச்சிப் பணிகளை நிறுத்தி விட்டது. பா.ஜ.க
வளர்ச்சிப் பணிகளை செய்ய விரும்புகிறது.உத்தரப்
பிரதேசத்தில் சாலை, மின்சாரம், பள்ளி, போன்றவற்றின் வளர்ச்சிப் பணிகள்
எப்படி நடக்கிறது என்பதை காண நீங்கள் ஒரு வருடம் காத்திருங்கள். 2017ம்
ஆண்டு தேர்தலில் வருண் காந்தியை முதல்வர் வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க
திட்டமிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க அரசு அமைந்து வருண் முதல்வராகப் பதவியேற்றால் அவர் சிறந்த முதல்வராக இருப்பார் என தெரிவித்தார் nakkheeran in , இவரு அப்பன் சஞ்சே காந்தியின் அடாவடி அலங்கோலம் எல்லாம் பலருக்கும் மறந்திருக்கும் பழைய Flashback ஐ மாத்திரம் அல்லாமல் இந்த வருண் மட்டும் என்னவாம் ?ஒரு பேட்டை ரவுடிக்குரிய சகல தகுதியும் உள்ளவர்தான் . கொஞ்சம் பேச்சை கேட்டு பாருங்க ,
முதியோர் இலவச பஸ்பாஸ் ஞாபகம் இருக்கா ?
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து, மூன்றாண்டுகள் முடிந்து விட்ட நிலையில்,
முதியோருக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் குறித்து அறிவிப்பு
வெளியாகவில்லை. சட்டசபையில், முதல்வர் இத்திட்டம் குறித்து அறிவிப்பாரா
என்ற எதிர்பார்ப்பில், முதியோர் காத்திருக்கின்றனர்.
இலவசமாக...'ஆட்சிக்கு வந்தால், முதியோருக்கு, அரசு பஸ்களில் பயணிக்க, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்' என, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. இத்திட்டத்தின் படி, 58 வயதுக்கு மேற்பட்ட முதியோர், அரசு பஸ்களில், பிற நகரம் மற்றும் கிராமங்களுக்கு, இலவசமாக சென்று வர முடியும் என்பதால், முதியோர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது.ஆதரவற்ற முதியோர், மருத்துவமனை, கோவில், நுாலகம், உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களுக்கு, இலவசமாக சென்று வர முடியும் என்பதால், இந்த அறிவிப்பு, முக்கியத்துவம் பெற்றது. வோட்டு போட கொடுத்த ரூ 200 னால் கவிழ்ந்த தமிழக மக்களுக்கு, முதியர், முடியாதவர்கள் மற்றும் விவசாயி பற்றி கவலை எதுக்கு இன்னும் இரண்டு வருடத்தில் எதனை முதிய்யோர் மேலோகம் செல்ல்வர்கள் என்று கணக்கு எடுத்து அடுத்த தேர்தலில் கள்ள வோட்டு போடலாம்

திங்கள், 4 ஆகஸ்ட், 2014
உயர்சாதிகளின் கூட்டணிதான் இந்து ஆன்மீக சேவா கண்றாவி ! வாங்கோ நீங்க அய்யரா அய்யங்காரா ?
இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 2
ஹிந்து ஆன்மீக கண்காட்சிக்கு சென்று முதல் அரங்கை பார்த்ததுமே ‘ஆன்மீக’ பரவசம் மெய்சிலிர்க்க வைத்தது.
நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொளுத்தி, சொத்துக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறியர்களின் அரங்கம் தான் முதல் அரங்கம். இந்துமதவெறி வேறா, வன்னிய சாதிவெறி வேறா என்று எண்ணிக்கொண்டே அரங்கில் நின்று கொண்டிருந்தவர் அந்த அரங்கிற்கு வந்திருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்ததை கவனித்தோம்.
அக்கினி குண்டத்திலிருந்து பிறந்த வன்னிய குல ஷத்திரியர்களின் ஆண்ட
பரம்பரை கதையை பெருமை பொங்க கூறிக்கொண்டிருந்தார். அவர் கூறிய அக்கினி
குண்டத்திலிருந்து பிறந்த ஆண்டபரம்பரையினர் நத்தம் காலனியில் எப்படி
குக்கர் விசிலைக் கூட விட்டுவைக்காமல் கொள்ளையடித்தனர் என்பதை
விளக்குவதற்கும் ஒரு தனி ஸ்டாலை போட்டிருந்தால் இந்து ஆன்மீக சேவை
நடைமுறையில் செய்து வரும் சேவை குறித்த பிராடிகல் கிளாசாகா
இருந்திருக்கும்.
ஹிந்து ஆன்மீக கண்காட்சிக்கு சென்று முதல் அரங்கை பார்த்ததுமே ‘ஆன்மீக’ பரவசம் மெய்சிலிர்க்க வைத்தது.
நத்தம் காலனியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை கொளுத்தி, சொத்துக்களை சூறையாடிய வன்னிய சாதி வெறியர்களின் அரங்கம் தான் முதல் அரங்கம். இந்துமதவெறி வேறா, வன்னிய சாதிவெறி வேறா என்று எண்ணிக்கொண்டே அரங்கில் நின்று கொண்டிருந்தவர் அந்த அரங்கிற்கு வந்திருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்ததை கவனித்தோம்.
நீதிபதியே பாலியல் சேஷ்டை , ரிசர்வ் வங்கி கேள்வியோ கோச்சடையன் ரஜினி, காமன்வெல்த் அதிகாரியோ குடித்துவிட்டு கார் ஒட்டி ஜெயில் !
administrative judge had asked the additional judge to "perform dance on an item song" at a function at his home and influenced her transfer to a remote location despite her requests.நிதி, நீதி, விளையாட்டு ஆகிய முக்கிய துறைகளின் சிறப்பினை விளக்கி இன்றைய நாளிதழ்களில் மூன்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் காமன்வெல்த் விளையாட்டு நடந்து
வருகிறது. இதில் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா,
மல்யுத்த நடுவர் வீரேந்தர் மாலிக் ஆகிய இருவரை ஸ்காட்லாந்து போலீசார்
நேற்று (02.08.2014) கைது செய்தனர். மது அருந்திவிட்டு மேத்தா வாகனம்
ஓட்டியதாகவும், மாலிக் பாலியல் புகாரில் சிக்கியதாகவும் ஊடக செய்திகள்
தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் காலனிய நாடுகளைக் கொண்ட அமைப்பான காமன்வெல்த்தில் இருப்பதே அவமானம்.கடந்த டில்லி காமன்வெல்த் (2010) போட்டியில் வெடித்த ஊழலில் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரவர்க்கத்தின் கொள்ளை தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக ஸ்காட்லாந்து அத்தியாயத்தை பார்க்க வேண்டும்.
கிளாஸ்கோவில் கைது செய்யப்பட்ட இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ராஜீவ் மேத்தா.
இங்கிலாந்தின் காலனிய நாடுகளைக் கொண்ட அமைப்பான காமன்வெல்த்தில் இருப்பதே அவமானம்.கடந்த டில்லி காமன்வெல்த் (2010) போட்டியில் வெடித்த ஊழலில் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரவர்க்கத்தின் கொள்ளை தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக ஸ்காட்லாந்து அத்தியாயத்தை பார்க்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)