
அலைக்கற்றை ஊழலை
ஒட்டி, ராஜாவின் ராடியா கனெக்சன் பற்றி ரவுண்டு
கட்டிய சோ ராமஸ்வாமி அய்யர், டாடாவின் ராடியா கனெக்சன், மோடியின் ராடியா
கனெக்சன் பற்றி மூச்சு விடவில்ல
மோடியின் சந்நிதியில் கலெக்டரே மண்டியிட்டு வணங்கும்
மாநிலத்தில், ரொம்ப தெனாவெட்டாக கால் மேல் கால் போட்டு உக்காந்திருக்காகளே
ஒரு பொம்பிளை -
அது யாருன்னு தெரியுதா?
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ் நீரா ராடியாதான்.
இது 25 நவம்பர் 2010-ல் எடுத்த படம்.
- அலைக்கற்றை ஊழல் பற்றிய சி.ஏ.ஜி அறிக்கை வெளியான தேதி – நவம்பர் 10, 2010.
- “ராடியா டேப்புகளை” ஓபன் மாகசீன் வெளியிட்ட தேதி – நவம்பர் 20, 2010
- இந்த செய்தியும் புகைப்படமும் வெளியிடப்பட்டிருக்கும் தேதி நவம்பர் 25, 2010
இந்த படத்தை வெளியிட்டுள்ள “தேஷ் குஜராத்” இணைய தளம், அம்மையாரை
“குஜராத்தின் மருமகள்” என்று கொட்டேசனில் போட்டுள்ளது. எதுக்காக குசும்பா கொட்டேசன்ல போட்ருக்குன்னு விவரம் சொல்லணுமில்ல? சொல்லலியே!
நல்லாத் தர்றாங்கய்யா டீட்டெய்லு!
NaMo (நமோ) கறை படியாத கரமாச்சே! புரோக்கர், ஊழல், கமிசன்னு யாராவது
பேசினா சுட்டுத்தள்ளிடுவாருன்னு அர டவுசர் அம்பிக சொல்றாங்களே! ஒரு வேளை
அம்மா ஒரு புரோக்கர்னு அய்யாவுக்கு தெரிஞ்சிருக்காதோ!
“அட போய்யா, அம்மாவோட அய்யாவுக்கு பிசினஸ் கனைக்சன் 2004 இலேயே
உண்டு”ன்னு சொல்லியிருக்கிறார் கிங் சுக் நாக் என்ற டைம்ஸ் ஆப் இந்தியா
பத்திரிகையாளர்.
அவருடைய டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரை வெளிவந்திருக்கும் தேதி நவம்பர் 22, 2010.
இனி, கிங் சுக் நாக் எழுதியுள்ளதிலிருந்து சில பகுதிகள்:
“2003 இல் நான் டைம்ஸ் ஆப் இந்தியா அகமதாபாத்தின் ஆசிரியராக
இருந்தேன். நீரா ராடியா என்னைப் பார்க்க விரும்புவதாக என்னிடம் ஒரு நண்பர்
சொன்னார்…
அடுத்த முறை நான் டெல்லி வந்தபோது, ராடியாவின் அலுவலகத்தில் அவரை
சந்தித்தேன். போன, வந்த கதையையெல்லாம் கொஞ்சம் பேசி விட்டு, நைசாக
விசயத்துக்கு வந்தார் ராடியா. “நீங்கள் (பத்திரிகையாளர்கள்) எல்லாம் மோடியை
சித்திரவதை செய்து வருகிறீர்கள். அவரையும் அவருடைய கொள்கையையும் கொஞ்சம்
புரிஞ்சுக்கங்களேன்” என்றார்.
“டாடாவுக்கு அடுத்தபடி, மோடியும் உங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் சேர்ந்து விட்டாரோ” என்று நான் ராடியாவிடம் கேட்டேன்.
“சே சே குஜராத்தின் மருமகள் என்ற முறையில் என் கடமையை செய்கிறேன்” என்றார் ராடியா.
“குஜராத் அரசைப் பற்றி (இனப்படுகொலையைப் பற்றி) நாங்கள் எழுதுவது
எல்லாம் உண்மை விவரங்களின் அடிப்படையிலானது. அதை எப்படி நாங்கள் திரிக்க
முடியும்?” என்று நான் கேட்டேன்…
சில மாதங்களுக்குப் பின் 2004 இல் குஜராத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும்
நோக்கத்தில் “வைப்ரன்ட் குஜராத்” என்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில்
நடத்தினார் மோடி. அன்றைக்கு மோடியின் இமேஜ் பெரும் அடி வாங்கியிருந்தது…
பொதுவாகவே, தொழிலதிபர்களுக்கு மிகவும் சாதகமான சூழல் குஜராத்தில் நிலவிய
போதிலும், குஜராத்துக்கு வருவதையே முதலாளிகள் அன்று விரும்பவில்லை.
மோடியுடன் அவர்கள் ஒரே மேடையில் தோன்றுவது என்பதோ கற்பனைக்கு எட்டாததாக
இருந்தது. அன்று மோடியின் கொள்கைகளை விமரிசித்தவர்களில் முக்கியமானவராக
டாடா இருந்தார். அப்படியிருக்க, வைப்ரன்ட் குஜராத் நிகழ்ச்சியில்
ராடியாவுடன் டாடாவை பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை…