இதை
எதிர்த்து ஐகோர்ட்டில் புதுவை அரசு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து
அரவிந்தர் ஆசிரமம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ஓய்வு பெற்ற
நீதிபதி ராமன் தலைமையிலான குழுவினர் விசாரித்து அறிக்கை தாக்கல்
செய்வார்கள் என்று நீதிபதி அறிவித்தார். இதன்படி அரவிந்தர் ஆசிரமம் மீது
கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
புதுவை
ஆனந்தா இன் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு இந்த விசாரணை கமிஷனின் விசாரணை
தொடங்கியது. அரவிந்தர் ஆசிரம நிர்வாக இயக்குனர் மனோஜ்குப்தா, செயலாளர்
மேட்ரி பிரகாஜ் மற்றும் ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் உள்பட 27 பேர் விசாரணைக்கு
அழைக்கப்பட்டனர். ஓய்வு பெற்ற நீதிபதி ராமன் அவர்களிடம் விசாரணை
நடத்தினார்.
புதுவை
அரவிந்தர் ஆசிரமத்தின் மீது கூறப்படும் பாலியல் புகார், மனித உரிமை மீறல்,
ஆசிரமவாசிகளுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட பிரச்சினை, நிதி மற்றும்
சொத்தில் நடந்த முறைகேடு ஆகியவை குறித்து அவர்களிடம் விசாரிக்கப்பட்டன.
அப்போது விசாரணை குழு உறுப்பினர் சத்திய பிரியா ஈஸ்வரன் மற்றும் குழுவினர் உடன் இருந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக