
மணிரத்னம்.கடல் படத்துக்கு எழுந்த விமர்சனங்கள் அவரை சூடாக்கி உள்ளதாம். இதனால் அடுத்தது ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற தீவிரத்துடன் அவர் பணியாற்றி வருகிறார். அதே நேரம் பைனான்ஸ் பிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். காரணம், கடைசியாக இவர் இயக்கிய கடல், அதற்கு முன் எடுத்த ராவணன், இந்தியில் ராவண் ஆகிய படங்கள் கையை சுட்டன. இதையடுத்து அடுத்த படத்துக்கு பைனான்ஸ் பிடிப்பது மணிரத்னத்துக்கு சிக்கலாகி இருக்கிறது. அதுவும் பெரிய பட்ஜெட் படம் பண்ண அவர் பிளான் போட்டுள்ளாராம். இதுவும் சிக்கலுக்கு ஒரு காரணம். இந்தியா&பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான அந்த கதையை தமிழ், இந்தியில் இயக்க அவர் ஸ்கிரிப்ட் எழுதி வருகிறார்.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக