சனி, 28 செப்டம்பர், 2013

திமுக BJP யுடன் கூட்டணியா ? நடக்கும் என்பார் நடக்காது ! நடக்காது என்பார் ?

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான திமுக நிலைப்பாட்டைத் தற்போது தெரிவிக்கப் போவதில்லை என்று கருணாநிதி கூறினார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: காங்கிரஸ் அரசு மொழி ரீதியாகச் செயல்படுவதாக திருச்சியில் நரேந்திர மோடி கூறியுள்ளாரே?
பதில்: மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டிருப்பதைச் அவர் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
கே: திருச்சியில் மத சார்பான பாஜகவின் கூட்டம் நடைபெற்றதற்கு திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
ப: இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு கூட்டம் நடத்தும் உரிமை, பேசும் உரிமை போன்றவை தடுக்கப்படவில்லை. அதனால் அவரவர் கருத்துகளைத் தெரிவிப்பதில் எந்தத் தடையும் இல்லை.
கே: திமுகவையோ, அதிமுகவையோ மோடி குற்றம்சாட்டிப் பேசவில்லை. அதைக் கொண்டு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்புவதாகக் கூறப்படுகிறதே?
ப: இந்தக் கருத்தைப் பொருத்தவரை நாங்கள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. எடுத்தாலும் இப்போது அதை வெளியிட விரும்பவில்லை.என்று கூறினார்.
 என்னா பண்றது தலீவா   திமுகவை சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் அழிக்க முயற்சிப்பது தான் இந்திரா காந்தி  மொரார்ஜி  தொடக்கம் அத்வானி ராகுல் வரை நடக்கிறதே?  தினமணி.com

கருத்துகள் இல்லை: