சன் டிவி விஷயங்களை அம்பலப்படுத்துவேன் : சக்சேனா ஆவேசம்
சன்
குழுமத்தில் வேலை பார்த்தவரும், சினிமா பட விநியோகஸ்தருமான அய்யப்பன்
நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை
கொடுத்தார். அவருடன் சன் பிக்சர்ஸின் முன்னாள் செயல் அலுவலர் சக்சேனாவும்
வந்திருந்தார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’சன் டிவி
நெட்வொர்க் நிறுவனத்தில் கலாந்திமாறனுக்கு அடுத்த நிலையில் முதன்மை
நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வந்தேன். பொது நிகழ்ச்சிகளில்
கலாந்திமாறன் தலைகாட்டமாட்டார் என்பதால் சினிமா உலகில் பெரும் சக்தியாக
இருந்து வந்தேன். கலாநிதிமாறனுக்காக இரவு, பகலாக உழைத்திருக்கிறேன்.இருவரும்
ஒன்றாக படித்தோம். நண்பன் என நினைத்து பசியும், பட்டினியுமாக கிடந்து 50
ஆயிரம் கோடிக்கு அதிபதி என்று சொல்லும் அளவுக்கு கலாநிதியை கொண்டு
வந்தோம். ஆனால், 10 நிமிடத்தில் பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை
பூதாகரமாக்கி 79 நாட்கள் என்னை சிறையில் தள்ளி வேடிக்கை பார்த்தார்.
செவ்வாய், 18 டிசம்பர், 2012
Delhi Bus Rape குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வேண்டும்: சுஷ்மா
ஓடும் பஸ்சில் மாணவி கற்பழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார்.
அவர், ‘’இதை போன்ற சம்பவங்களுக்கு கண்டனம்
தெரிவிக்க வார்த்தைகள் மட்டும் போதாது கற்பழிப்பு சம்பவங்களால்
பாதிக்கப்பட்ட பெண்கள், இருப்பதும் இறப்பதும் ஒன்றுதான். அந்த பெண்ணின்
உடல் காயங்கள் ஆறிப் போனாலும், மனக்காயங்களினால் அவள் நடைப்பிணமாக தான் வாழ
முடியும்.மத்திய
அரசும், டெல்லி முதல் மந்திரியும் இதை போன்ற சம்பவங்கள் மீண்டும்
நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்? என்பதை இந்த அவையில்
தெரிவிக்க வேண்டும். இரவு நேரங்களில் தனியாக வீட்டை விட்டு வெளியே
வராதீர்கள் என்பது போன்ற அறிவுரையை தான் அரசு வழங்குகின்றது.தங்களிள்
குடும்பத்தை காப்பாற்றும் எண்ணத்தில், கால் சென்டர்களில் வேலை
செய்துவிட்டு, நள்ளிரவு நேரங்களில் வீடு திரும்பும், நடுத்தர வர்க்கத்தை
சேர்ந்த பெண்களின் கதி என்ன? ஆண் நண்பர் ஒருவரின் துணையுடன் இரவு 9.30
மணிக்கு பஸ்சில் பயணித்த மாணவிக்கு இந்த நிலை ஏற்பட்டிருப்பதை நாம்
அனைவரும் கண்டிப்பதுடன் நிறுத்தி விடக்கூடாது.குற்றவாளிகளை
விரைவாக கண்டுபிடித்து, கடுமையாக தண்டிக்க வேண்டும். குற்றம்
நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்’’ என்று
பேசினார்<
ஓட்டலில் குடிபோதையில் ரகளையில் திருச்சி சிவா MP மகன் உதயநிதி ரசிகர் மன்ற சூர்யா
ஓட்டலில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட திமுக எம்.பி., மகன் சரணடைந்தார்
திருச்சி கண்டோண்மென்ட் பகுதியை சேர்ந்தவர்,திருச்சி
சிவா. தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கிறார்.
இவரது மகன் சூர்யா, 20, என்பவர், உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்றத்தில்,
மாவட்ட நிர்வாகியாக உள்ளார். சூர்யாவும்,
அவரது நண்பர்கள் நால்வரும், திருச்சி கண்டோண்மென்ட் பகுதியில் உள்ள சங்கம்
ஓட்டலில், கடந்த, 3ம் தேதி மாலை நடந்த மது விருந்தில் பங்கேற்றனர்.
"உற்சாகம்' தலைக்கேறிய நிலையில், சூர்யாவுக்கும், பார் ஊழியர்களுக்கும்
வாய் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள், பார்
ஊழியர்களை சரமாரியாக தாக்கி, ரகளையில் ஈடுபட்டனர்.இதுகுறித்து,
ஓட்டல் செக்யூரிட்டி மேலாளர் நவாஸ், திருச்சி நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில்
புகார் கொடுத்தார். இதையடுத்து, சூர்யா உள்ளிட்ட ஐந்து பேர் மீது, ஆபாசமாக
பேசுதல், சட்ட விரோதமாக கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுகாயங்களை
ஏற்படுத்துதல் ஆகிய, நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து,
தலைமறைவாகிய, ஐந்து பேரையும் தேடினர். எம்.பி.,
சிவாவின் மகன் சூர்யா, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் பெற்றார்.
திருச்சி, ஜே.எம்., 2, நீதிபதி, ராஜேந்திரன் முன்னிலையில், நேற்று
முறைப்படி சரணடைந்து, ஜாமின் பெற்றார். மற்ற நால்வரை, போலீசார்
தேடுகின்றனர்
கலைஞர் : 928 கொலைகள், 768 கொள்ளைகள் 476 வழிப்பறி சம்பவங்கள்
கடுமையான மின்வெட்டை கண்டித்து, சென்னையில் நடக்கும்
ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர், தமிழகத்தை ஆளுவது நேர்மையற்ற அரசு
குற்றம்சாட்டினார். அதிமுக அரசு பொறுப்பு ஏற்றவுடன் தமிழக முழுவதும் 928
கொலைகள், 768 கொள்ளைகள் நடந்துள்ளதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு
தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கடுமையான மின்வெட்டை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில்
ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மாதவரத்தில் பொது செயலாளர் அன்பழகன்,
காஞ்சிபுரத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
நடைபெறுகிறது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம்
கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி கலைஞர் அரங்கத்தில் நடந்தது.
ஒழிமுறி..பெண்களுக்கு சொத்துரிமை இருந்த காலகட்டத்து
tamilpaper.net
ஒழிமுறி (டாக்குமெண்ட் ஆஃப் செப்பரேஷன்). தாணுபிள்ளை : லால்
/ மீனாட்சியம்மா : மல்லிகா / காளி பிள்ளை : ஸ்வேதா மேனன் / பாலா : பாவனா / சரத் சந்திரன் : அசிஃப் அலிபாதி மலையாளியான எனக்கு மலையாளப்படங்கள்மீது எப்போதுமே ஒரு மென் சாய்வு உண்டு. போதாதகுறையாக நம் ஜெயமோகனின் கதை திரைக்கதை வசனத்தில் வெளிவந்த படம். ஏற்கெனவே அது பற்றி மிகவும் நேர்மறையான விமர்சனங்களையும் படித்திருந்தேன். எனவே, மிகுந்த நம்பிக்கையுடன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், படம் மிகப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. அதிகம் எதிர்பார்த்ததால் வந்த ஏமாற்றம் அல்ல. காரணம் என்ன என்பதை எனக்கு நானே அலசிப் பார்க்கிறேன்.
படத்தின் மிகப் பெரிய குறை அதன் சிக்கலான திரைக்கதை.
ஒழிமுறி (டாக்குமெண்ட் ஆஃப் செப்பரேஷன்). தாணுபிள்ளை : லால்
/ மீனாட்சியம்மா : மல்லிகா / காளி பிள்ளை : ஸ்வேதா மேனன் / பாலா : பாவனா / சரத் சந்திரன் : அசிஃப் அலிபாதி மலையாளியான எனக்கு மலையாளப்படங்கள்மீது எப்போதுமே ஒரு மென் சாய்வு உண்டு. போதாதகுறையாக நம் ஜெயமோகனின் கதை திரைக்கதை வசனத்தில் வெளிவந்த படம். ஏற்கெனவே அது பற்றி மிகவும் நேர்மறையான விமர்சனங்களையும் படித்திருந்தேன். எனவே, மிகுந்த நம்பிக்கையுடன் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், படம் மிகப் பெரிய ஏமாற்றத்தையே தந்தது. அதிகம் எதிர்பார்த்ததால் வந்த ஏமாற்றம் அல்ல. காரணம் என்ன என்பதை எனக்கு நானே அலசிப் பார்க்கிறேன்.
படத்தின் மிகப் பெரிய குறை அதன் சிக்கலான திரைக்கதை.
ஜெயலலிதா: 4,000 கோடிரூபாய் கிரானைட் கற்கள் பறிமுதல்
சென்னை :தமிழகத்தில், சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்பட்ட, 4,000 கோடி
ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கற்களை
விற்ற வகையில், 9,783 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஜப்தி செய்யவும்,
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.சென்னை,
தலைமைச் செயலகத்தில் நடந்த, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள்
மாநாட்டில், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக,
முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு நன்கு
பராமரிக்கப்பட்டு வருகிறது. அமைதிக்கு அச்சுறுத்தலான, பெரிய பிரச்னைகள்,
இடதுசாரி தீவிரவாதம், மதவாதம், தமிழகத்தில் இல்லை. இனப் பிரச்னைகள் விரைவாக
கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.நில அபகரிப்பு தொடர்பாக, இதுவரை, 1,627
வழக்குகள் பதியப்பட்டு, 835.94 கோடி ரூபாய் மதிப்பு, சொத்துகள் உண்மையான
உரிமையாளர்களுக்கு திருப்பித் தரப்பட்டுள்ளது.
ரூ.4,000 கோடி கிரானைட்:
பொய் புகார் கூறி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்குவதால், தமிழகம் முடங்கிவிடும். வேலை கிடைக்காமல் பலர் தெருவில் பிச்சை எடுக்கும் நிலை இருண்ட தமிழகத்தில் வர போகிறது.
பொய் புகார் கூறி அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்குவதால், தமிழகம் முடங்கிவிடும். வேலை கிடைக்காமல் பலர் தெருவில் பிச்சை எடுக்கும் நிலை இருண்ட தமிழகத்தில் வர போகிறது.
Direct Deposit உங்கள் பணம் உங்கள் கையில் பிரதமர் சுறுசுறுப்பு
புதுடில்லி: நேரடி மானிய தொகை வழங்கும் ‘உங்கள் பணம் உங்களை கையில்’
திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது
தொடர்பாக பிரதமர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.. இதில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வரப்போகும் 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை குறி வைத்து , மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நேரடி மானிய தொகையினை வழங்கிட முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2013) ஜனவரியில் இத்திட்டத்தை நிறைவேற்றிட பிரதமர் மற்றும் மத்திய அமைச்சகங்கள் சுறுசுறுப்பு காட்டி வருகின்றன. வழக்கம்போல ஆளுங்கட்சி செய்வதை எல்லாம் எதிர்க்கவேண்டும் இன்று கூச்சல் அரசியல் நடத்தாமல் இந்த திட்டத்தை சகல கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் .இது இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு பெரிதும் முடிவு கட்டும் மக்களின் கையில் நுகர்வு சக்தியை அதிகரிக்கும்
வரப்போகும் 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை குறி வைத்து , மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு நேரடி மானிய தொகையினை வழங்கிட முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு (2013) ஜனவரியில் இத்திட்டத்தை நிறைவேற்றிட பிரதமர் மற்றும் மத்திய அமைச்சகங்கள் சுறுசுறுப்பு காட்டி வருகின்றன. வழக்கம்போல ஆளுங்கட்சி செய்வதை எல்லாம் எதிர்க்கவேண்டும் இன்று கூச்சல் அரசியல் நடத்தாமல் இந்த திட்டத்தை சகல கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் .இது இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு பெரிதும் முடிவு கட்டும் மக்களின் கையில் நுகர்வு சக்தியை அதிகரிக்கும்
5D Camera குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கலாம். பாண்டியராஜன் பேச்சு
மருத்துவமனையில் நகைச்சுவை மன்றம் : நடிகர் பாண்டியராஜன் பேச்சு
மதுரை
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் நகைச்சுவை மன்றத்தின்
22-ம் ஆண்டு தொடக்க விழா மருத்துவமனையில் நடை பெற்றது. மன்ற தலைவர்
பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக
திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனருமான பாண்டியராஜன் கலந்து கொண்டார்.
அவர் பேசியபோது, ‘’நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நோயாளிகளை
சிரிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மருத்துவ மனையில் நகைச்சுவை
மன்றம் தொடங்கியிருப்பது உலகத்திலேயே இங்குதான் நடக்கிறது. சினிமாத்துறையில்
தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல முன்னேற்றங்கள் நடந்துள்ளன. புதிதாக
அறிமுகமான 5டி கேமரா புதிய தலைமுறை கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக
அமைந்துள்ளது.
திங்கள், 17 டிசம்பர், 2012
பாரதியின் இருட்டடிப்பு .டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

;பாரதி வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்து பாரதியின் புதுமை பெண் போன்ற பிரசார கவிதைகளுக்கு உதாரணமாகவே வாழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியை பற்றி எந்த இடத்திலும் பாரதி குறிப்பிடாமைக்கு அவரின் உள்ளத்தில் ஒழிந்திருந்த ஜாதி துவேஷம் தான் காரணம் என்று பலரும் குறிப்பிடுவது உண்மையோ என்று நம்பத்தோன்றுகிறது&;
நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைப் பற்றி. ஆனால் அந்த ஆலமரத்தின் ஆனி வேர் யார் என்று சிலருக்கு தெரிந்திருக்காது. ஆம். இந்த கட்டுரையைப் படிக்கும் முன்பு எனக்கும் தெரியாது.இந்தியத் திருநாட்டில் முதல் சட்டசபை பெண் உறுப்பினர், முதல் பெண் மருத்துவர் என்கிற பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்களில் இடம்பிடித்த இவரின் வாழ்வியல், ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு. அதற்காகவே இங்கு நான் அதனை வெளியிடுகிறேன். ஒரு நாள் தமிழக சட்டசபையில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக, கோயில்களில் பொட்டுக்கட்டுதல் என்கிற 'தேவதாசி'முறை வழக்கத்திலிருந்தது. அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அனல் பறக்கும் விவாதத்திற்குக் காரணமாக இருந்தது. பிற்படுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து.. தனது நெஞ்சுரத்தால் பெண் விடுதலைக்காகவும் தேவதாசி ஒழிப்புக்காகவும் தன்னை போராடிய அந்த வீரப்பெண், " 'தேவதாசி'முறை தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டே தீரவேண்டும்.. வரும் காலத்தில் 'தேவதாசி' என்கிற பெயர் சரித்திரத்தில்கூட இடம்பெறக் கூடாது" என்று ஆவேசமாக முழக்கமிட்டார். அந்தப்பெண்ணின் வீரமுழக்கத்தை மறுக்கும் விதமாக.. சத்தியமூர்த்தி அவர்கள், "தேவதாசிகள் என்பவர்கள் ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள், அவர்கள் தேவர்களின் அதாவது தெய்வங்களின் அடிமை என்கிற புனிதத்தன்மை பெற்றவர்கள். அதை ஏன் ஒழிக்க வேண்டுமென்கிறீர்கள்?" என்று கேட்டார். < சற்றும் தாமதிக்காமல்.. அந்தப் பெண், "தேவதாசி முறை புனிதமானது என்றால், தேவதாசி முறை ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டது என்றால், அந்தத் தொழிலை பிற்படுத்தப்பட்ட எங்கள் குலத்துப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டுமா? உங்கள் உயர்ஜாதிக் குடும்பத்திலிருந்து எந்தப் பெண்ணையாவது தேவதாசி ஆக்குங்களேன்!" என்று அனல்தெறித்தார். சட்டசபையே ஒரு நொடி ஆடிப்போனது.
அந்தக் கனல் பொழிந்த குரலுக்குச் சொந்தக்காரர்தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி!
Delhi Bus gang rape குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது
பாதிக்கப்பட்ட மாணவி இன்னும் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை
Delhi gang-rape victim battles for life, four held
டில்லியில் நேற்றிரவு திரைப்படம் பார்த்துவிட்டு, பஸ்சில் வீடு திரும்பிக்கொண்டிருந்த பெண்4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இச்சம்பவம், டில்லி மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பலாத்காரத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் அடையாளம் தெரியவந்துள்ளது.
The Delhi Police said this evening that it has identified a group of four men who allegedly raped a young medical student in a bus last night. The bus, which was run by a private operator, was also found in Noida. The chartered bus is used by schools in Delhi and Noida, say police sources.
Along with a male friend, the student was hit with an iron rod before being thrown onto the road. A passer -by who saw them phoned the police, which then moved the young couple to hospital a little after 11 pm.
Police sources said that the attackers were most likely drunk and hit the victim and her friend repeatedly with brute force for nearly 90 minutes.
The 23-year-old victim is struggling for her life. She is on a ventilator after multiple surgeries, doctors said. Her friend is being treated for head injuries.
Security cameras on the main highway NH8 allegedly furnished footage which is helping the police.
சென்னை மெட்ரோ ரயிலின் தொழிலாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?
இந்தத் தொழிலாளர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி
வாழ்கிறார்கள்? நம்முடைய எதிர்காலக் கனவுகளை படைத்துக் கொண்டிருக்கும்
இவர்களது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
இன்றிலிருந்து 5 ஆண்டுகள் என எதிர்காலத்துக்குள் பயணிப்போம்.அதற்குள் சென்னை மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து
==வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்ட்ரல், அண்ணா சாலை வழியாக கிண்டி கத்திப்பாரா வரை
==சென்ட்ரலிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, அண்ணா நகர், திருமங்கலம் வழியாக கோயம்பேடு வரை
==கோயம்பேட்டிலிருந்து வட பழனி, அசோக் நகர், கலைமகள் நகர் வழியாக கத்திப்பாரா வரை
==கத்திப்பாராவிலிருந்து விமான நிலையம் வரை
என மெட்ரோ ரயில் ஓட ஆரம்பித்து விட்டிருக்கும். vinvavu.com
Delhi ஓடும் பஸ்ஸில் மாணவி கற்பழிப்பு
டெல்லி . ஓடும் பஸ்ஸில் வைத்து மருத்துவக்கல்லுரி மாணவி குண்டர்களால் கற்பழிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் ஞாயிறு இரவு நடந்து உள்ளது. இவரது பாதுகாப்பிற்காக வந்த சாப்ட்வேர் வேலை செய்யும் இவரது நண்பர் குண்டர்களால் தாக்கப்பட்டு இச்சம்பவம் மகிலபூர் பகுதியில் நடைபெற்று உள்ளது பாதிக்கப்பட்ட மாணவி தற்போது ஆபத்தான கட்டத்தில் சப்தர்ஜுங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டு உள்ளார் இதுவரை சந்தேகத்தின் பேரில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை தலை நகரிலேயே பாது காப்பு இந்த லட்சணத்தில் .
As per reports, the victim
and her male friend were travelling in a White line bus when the
horrific incident occurred in the Vasant Vihar area of South Delhi. The
male friend registered a complaint with the Vasant Vihar police station
past midnight. A case under section 376 has been registered.
According to the FIR filed, the duo boarded a bus to Dwarka from Munirka
last night and the incident took place when the bus reached Mahipalpur.
After the assault, the men took off the clothes of the girl and her
friend and threw them out of the bus near the Mahipalpur flyover.
The victims’ friend works in a software firm and was escorting the girl
home. The girl has been admitted in the Safdarjung hospital and is said
to be in a critical condition.
No arrests have been made so far in the incident. Meanwhile the police have seize the two buses in question.
கிருஷ்ணகிரி: பெண்களை கடத்திய கைதி தப்பி ஓடும்போது லாரி மோதி பலி!
கிருஷ்ணகிரி
மாவட்டம், .சூளகிரி அருகே உள்ள பீரேபாளையத்தை சேர்ந்த திருமணமாகாத
அக்காள், தங்கைகள் இருவர் கடந்த மாதம் கல்லூரி சென்றவர்கள் வீடு
திரும்பாமல் மாயமாகினர்.இவர்கள்
படித்து வந்த கல்லூரியில் முன்பு படித்த வாலிபர் ஒருவருடன் சென்னையில்
பதுங்கியிருப்பதாக சூளகிரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து,
இந்த வழக்கை விசாரித்த சூளகிரி எஸ்.ஐ.,க்கள் பேபி, முருகன் ஆகிய இருவர்
சென்னை சென்று அங்கு தலைமறைவாக இருந்தவர்களை மீட்டுகொண்டு வந்து சகோதரிகள்
இருவரையும் அவர்களது பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.அவர்களை
கடத்தி சென்ற வாலிபர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரை விசாரணைக்காக
சூளகிரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, கைது செய்து அழைந்த
வந்த வாலிபர் காவல் நிலையத்தின் முன்பாக போலிஸ் பிடியிலிருந்து இருந்து
தப்பி ஒடினர். <சாலையை
கடந்த வேகமாக ஓடிய அந்த நபர் எதிரில் வந்துகொண்டிருந்த லாரியை கவனிக்காமல்
சாலையை கடந்து ஒடியிள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மோதி அவர் அந்த
இடத்திலேயே உயிரிழந்தார்.
தமிழக இளைஞர் காங்கிரஸ் ஐஸ்வர்யா தற்கொலை
Her family said Aishwarya had lost consciousness after lunch on December 5, and they took her to the hospital. Police sources said that they suspected suicide. The body was sent to the Government Royapettah Hospital for autopsy. Uthiramerur police have registered a case under the Section 174 (unnatural death) of the Code of Criminal Procedure. "We are probing the case. Inquiries revealed that Aishwarya had consumed sleeping pills to end her life," an investigation officer said.
தமிழக இளைஞர் காங்கிரஸை உலுக்கியிருக் கிறது இளம்பெண் ஐஸ்வர்யா தற்கொலை மரணம். இந்த மரணத்தின் பின்னணி பற்றி இளைஞர் காங்கிரஸ் வட்டாரங்களில் உலவும் சில தகவல்கள் ஜீரணிக்க முடியா தவைகளாக இருக்கின்றன. மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசனின் ஆதரவாள ராக இருப்பவர் நெடுஞ்செழியன். ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவ ரது மகள் ஐஸ்வர்யா, 22 வயது இளம்பெண். சில மாதங்களுக்கு முன்பு நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர் தலில் காஞ்சிபுரம் நாடாளு மன்றத் தொகுதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இளைஞர் காங்கிரஸில் கடுமையான உழைப்பாளி என்றும் சோம்பல் இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக அரசியல் பணிகளை செய்பவர் என்றும் பெயரெடுத்திருக் கிறார். இந்தச் சூழலில்,கடந்த வாரம் அவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைய, அந்த மரணம் இளைஞர் காங்கிரஸை அதிர வைத்திருக்கிறது.
Tasmac டாஸ்மாக் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு
மதுரை:"மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும்,' பா.ம.க.,வின் போராட்ட அறிவிப்பைத்
தொடர்ந்து, மதுரையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு, நேற்றிரவு
முதல், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இரவு 7 மணி முதலே, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், கடைக்கு வருவோர், ஒருவித பீதியுடன் சென்றனர். சிலர், போலீஸ் சோதனைக்கு பயந்து, "சரக்கு' வாங்காமல், திரும்பிச் சென்றனர். "போராட்டம் நடக்கும் இன்றும், பாதுகாப்பு தொடரும்,' என, போலீசார் தெரிவித்தனர்.
இரவு 7 மணி முதலே, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், கடைக்கு வருவோர், ஒருவித பீதியுடன் சென்றனர். சிலர், போலீஸ் சோதனைக்கு பயந்து, "சரக்கு' வாங்காமல், திரும்பிச் சென்றனர். "போராட்டம் நடக்கும் இன்றும், பாதுகாப்பு தொடரும்,' என, போலீசார் தெரிவித்தனர்.
இலங்கையில் விண்கல்லொன்று விழுந்து உள்ளது
பாஜகவின் அடுத்த தலைவராக சுஷ்மாசுவராஜ்?
பாஜகவின் அடுத்த தலைவராக சுஷ்மாசுவராஜ் தெரிவாகலாம் எனும் யூகம் வலுப்பெற்றுள்ளது.
தற்போது நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக சுஷ்மா சுவராஜ் இருந்து வருகிறார்.
பாஜகவின் தற்போதைய தலைவரான நிதின் கட்கரியின் பதவிக் காலம் இந்த மாதம் முடிவடைய உள்ளது. மேலும் கட்காரி மீது பல முறைகேடு புகார்களும் எழுதுள்ளதால் இரண்டாம் தர நிலை பதவி கொடுப்பதற்கு கூட இவருக்கு கட்சி உள்மட்டத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் கட்சி மற்றும் ஜஸ்வந்த் சிங், யஸ்வந்த சின்ஹா போன்ற மூத்த அரசியல் தலைவர்கள், சுஷ்மா சுவராஜ் பாஜகவின் அடுத்த தலைவராக வருவதையே விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக சுஷ்மா சுவராஜ் இருந்து வருகிறார்.
பாஜகவின் தற்போதைய தலைவரான நிதின் கட்கரியின் பதவிக் காலம் இந்த மாதம் முடிவடைய உள்ளது. மேலும் கட்காரி மீது பல முறைகேடு புகார்களும் எழுதுள்ளதால் இரண்டாம் தர நிலை பதவி கொடுப்பதற்கு கூட இவருக்கு கட்சி உள்மட்டத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் கட்சி மற்றும் ஜஸ்வந்த் சிங், யஸ்வந்த சின்ஹா போன்ற மூத்த அரசியல் தலைவர்கள், சுஷ்மா சுவராஜ் பாஜகவின் அடுத்த தலைவராக வருவதையே விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
GMR 800 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு மாலைதீவிடம் கோருகிறது
800 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்கும் ஜி.எம்.ஆர் நிறுவனம் !
மேம்படுத்தல்
திட்டத்தை இரத்து செய்து, அந்நாட்டின் சர்வதேச விமான நிலையத்தை மீண்டும்
மாலைதீவு அரசே பொறுப்பேற்றுக்கொண்டதால் தமக்கு 800 மில்லியன் அமெரிக்க
டாலர்கள் நஷ்ட ஈடாக தரவேண்டுமென ஜி.எம்.ஆர் நிறுவனம் கூறியுள்ளது. இது எமது
முதலாவது உத்தேச கணக்கு தான். ஜி.எம்.ஆர் நிறுவனத்திற்கு ஏற்பட்ட லாப நஷ்ட கணக்குகளை கொண்டு இறுதி கணக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் என ஜி.எம்.ஆர் நிறுவன இயக்குனர் சித்தார்த் கபூர் கூறியுள்ளார்.
எனினும் இது உண்மையான நஷ்ட ஈட்டு தொகையை விட இருமடங்குக்குக்கு மேல் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள மாலைதீவு அரசு தாம் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஊடாக சட்டரீதியாக கணக்காய்வினை மேற்கொள்ள போவதாக கூறியுள்ளது.
எனினும் இது உண்மையான நஷ்ட ஈட்டு தொகையை விட இருமடங்குக்குக்கு மேல் இருப்பதாக குற்றம் சுமத்தியுள்ள மாலைதீவு அரசு தாம் சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஊடாக சட்டரீதியாக கணக்காய்வினை மேற்கொள்ள போவதாக கூறியுள்ளது.
ஞாயிறு, 16 டிசம்பர், 2012
திருமா, அரசியல் நாகரீகத்துடன் பதில் கொடுத்திருக்கிறார்.
திருமா ஆச்சரிய பதில்: “ராமதாஸ் முகத்தை மீண்டும் பார்க்க ஆசை”
Viruvirupu
அட.. பரவாயில்லையே!<
“விடுதலை சிறுத்தைகள் ஒரு கட்சி அல்ல, அது ஒரு ரவுடி இயக்கம்” என்று
டாக்டர் ராமதாஸ் அதிர வைத்ததற்கு அமைதியாக பதில் கொடுத்த திருமாவளவன்,
“நான் வார்தைகளை அளந்து பேசுகிறேன். காரணம், மறுபடியும் டாக்டர் ராமதாஸின்
முகத்தை பார்க்கவேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அடித்த காமென்ட் பற்றி கருத்து கேட்கப்பட்டது.
“விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இல்லை, ஒரு அமைப்பும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் பேசி உள்ளதாக நிருபர்களாகிய நீங்கள் சொல்கின்றீர்கள். சரி. ஆனால், அதே ராமதாஸ், ‘தொல்.திருமாவளவன் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன். அவர் தமிழகம் முழுவதும் வலம் வரவேண்டும் அதற்கு நான் துணையாக இருக்கிறேன்’ என்று மேடை தோறும் முழங்கியதை நான் எண்ணிப் பார்க்கிறேன் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவனிடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அடித்த காமென்ட் பற்றி கருத்து கேட்கப்பட்டது.
“விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இல்லை, ஒரு அமைப்பும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் பேசி உள்ளதாக நிருபர்களாகிய நீங்கள் சொல்கின்றீர்கள். சரி. ஆனால், அதே ராமதாஸ், ‘தொல்.திருமாவளவன் வடிவத்தில் பெரியாரை பார்க்கிறேன். அவர் தமிழகம் முழுவதும் வலம் வரவேண்டும் அதற்கு நான் துணையாக இருக்கிறேன்’ என்று மேடை தோறும் முழங்கியதை நான் எண்ணிப் பார்க்கிறேன் அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
ராமதாஸ்: விடுதலை சிறுத்தைகள் பக்கா ரவுடி கும்பல்!
Viruvirupu
ஸ்டெத்தில் வன்முறை சத்தம் கேட்குதா டாக்டர்?
சென்னை, மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் பா.ம.க. சார்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் வைத்தே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஒரு பிடி பிடித்தார் டாக்டர். இந்த கருத்தரங்கம், “காதல் நாடக திருமணங்களால் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகள்” குறித்து நடைபெற்றது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியபோது, “தர்மபுரியில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு யார் காரணம்? என்ற பின்னணியை இன்னும் யாரும் சொல்லவில்லை. ஆய்வும் நடத்தப்படவில்லை. ஆனால், நாங்கள் தான் இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசியல் பண்ணுவதாக கூறுகிறார்கள்.
மதுரை ஆதீனத்தை அரசு ஏற்க தடை கோரிய மனு தள்ளுபடி
மதுரை ஆதீன மடத்தை அரசு ஏற்கும் வழக்குக்கு தடை கேட்ட அருணகிரிநாதரின்
மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அறநிலையத் துறையையும், மதுரை
தெற்கு சார்பதிவாளரையும் எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என
நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து
உத்தரவிட்டார்.மதுரை ஆதீன மடம் நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடக்
கோரி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால் மதுரை முதன்மை சார்பு
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், இந்த மனு மீதான விசாரணை
முடியும் வரை, ஆதீன மடம் நிர்வாகம் தொடர்பாக அருணகிரிநாதரும்,
நித்தியானந்தாவும் சேர்ந்து ஏற்படுத்திய அறக்கட்டளைக்கு தடை விதிக்க
வேண்டும். ஆதீன மட சொத்துக்களில் அருணகிரிநாதர் மற்றும் அவரது ஆட்களால்
வில்லங்கம் ஏற்படுத்த கூடாது என இடைக்கால உத்தரவிட வேண்டும் என்றும்
மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது
அருணகிரிநாதர் சார்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மருத்துவர் ராமதாசுக்கு சோ வக்கீலா?
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு. ச.
இராமதாசு அவர்கள் தலித் - தலித் அல்லாதார் என்ற அமைப்பினை உருவாக்கி வரும்
இந்தக் கால கட்டத்தில் அவருக்கு ஒரு வக்கில் கிடைத்துள்ளார். அவர்தான்
திருவாளர் துக்ளக் சோ ராமசாமி அய்யர்வாள்!
அதுதானே பார்த்தோம். ஜாதிக்கு எள் மூக்கு அளவுக்கு எங்கேனும் உத்வேகம் கிடைத்தால் விட்டு விடுவார்களா சங்கராச்சாரியாரின் சீடர்கள்?
இந்த வார துக்ளக் இதழில் (19.12.2012) நினைத்தேன் என்று எழுதுகிறாராம். திருவாளர் சோ.
எடுத்த எடுப்பிலேயே பொய்யான தகவல் ஒன்றை
முதலாகப் போட்டு அதற்கு மேல் அடுக்கடுக்காக தனக்கே உரித்தான பித்தலாட்ட
பின்னல் கணக்குகளைப் போட்டுக் கொண்டே போகிறார்!
சில ஜாதி அமைப்புகளைச் சேர்த்துக் கொண்டு
தலித்களுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க வாருங்கள் _ தாழ்த்தப்பட்ட
ஜாதியினருக்கு எதிராக ஒரு அணி அமைப்போம் என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ்
கூறவில்லை. ஆனால் பல ஜாதிகளை இணைத்து, ஒரு கூட்டு அமைப்பை உருவாக்க அவர்
முன்வந் துள்ளது இந்த எண்ணத்தில் தான் என்பது எல்லோருக்கும் புரிகிறது!
அந்த அடிப் படையில் பல கட்சிகளைச் சார்ந்த தலை வர்கள் அவருடைய முயற்சிகளைக்
கண் டித்துள்ளனர். ஆனால் ராமதாஸ் செய்கிற முயற்சிக்கு ஒரு பின்னணி
இருக்கிறது. இவ்வாறு திருவாளர் சோ எழுதி யுள்ளார்.
பெனசிர் கொலை வழக்கில் முஷாரப்பை கைது செய்ய இன்டர்போலுக்கு 2வது கடிதம்
இஸ்லாமாபாத்: முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கைது செய்ய, சர்வதேச
போலீஸ் இன்டர்போலுக்கு பாகிஸ்தான் அரசு 2வது முறையாக கடிதம் அனுப்பி
உள்ளது. கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது
முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை
தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. Ôபெனசிருக்கு கொலை
மிரட்டல் இருந்தும் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. விசாரணைக்கு
ஒத்துழைக்கவில்லைÕ என்று அப்போதைய அதிபர் முஷாரப் மீது குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தானில் இருந்து லண்டனில்
தஞ்சம் அடைந்தார் முஷாரப். அவரை தேடப்படும் குற்றவாளியாக பாகிஸ்தான்
அறிவித்தது. மேலும், அவரை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று
பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டது. ஆனால், குற்றவாளிகளை பரஸ்பரம்
ஒப்படைக்கும் ஒப்பந்தம் இல்லை என்று கூறி கோரிக்கையை இங்கிலாந்து அரசு
நிராகரித்து விட்டது. இதனால், பெனசிர் புட்டோ வழக்கில் முஷாரப்பை கைது
செய்ய வேண்டும் என்று கோரி பிரான்சில் உள்ள சர்வதேச போலீஸ் தலைமை
அலுவலகத்துக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பியது.
சத்துணவில் பாலையும் சேர்க்க வேண்டும்!
சத்துணவில் பாலையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக பால் உற்பத்தியாளர் நல சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சேலத்தில்
செங்கோட்டுவேல் தலைமையில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் இந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது. பசும்பால் விலையை லிட்டருக்கு ரூபாய் 20ல் இருந்து
ரூபாய் 25ஆக உயர்த்திதர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எருமைப்பால்
விலையை ரூபாய் 28ல் இருந்து ரூபாய் 35ஆக உயர்த்தர வேண்டும் என்றும், கலப்பு
தீவனத்தை உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும்
பால் உற்பத்தியாளரின் நலனை உயர்த்த சத்துணவில் பாலையும் சேர்க்க வேண்டும், மேலும் கலப்பு தீவனவிலை 50 சதவீதம் அதிகரித்துள்ளதால் பால் விலையை உயர்த்தி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.nakkheeran.in/
பெஷாவரில் குண்டு வெடிப்பு: 7 பேர் பலி : 50 பேர் படுகாயம்
பெஷாவர்: பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள விமான நிலையத்தின் மீது
நடத்திய தாக்குதல் சம்பவத்தி்ல் 7 பேர் பலியாயினர். 50பேர்
படுகாயமடைந்தனர். இச்சம்பவம் பற்றிய விபரம் வருமாறு: பாகிஸ்தானின் முக்கிய
நகரங்களுள் ஒன்றான பெஷாவரில் உள்ள விமான நிலையம் மீது தீவிரவாதிகள்
ராக்கெட் வெடி குண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். மேலும்
துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் திருப்பி
சுட்டினர். இரு தரப்பினரிடையே தொடர்ந்து பயங்கர மோதல் நடைபெற்றது.
இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ஐந்து பேர் பலியாயினர் என கைபர்
மாகாணத்தை சேர்ந்த தகவல் தொடர்புத்துறை அமைச்சர் இப்திகார் ஹூசைன்
தெரிவி்த்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



.jpg)





