திங்கள், 17 டிசம்பர், 2012

பாஜகவின் அடுத்த தலைவராக சுஷ்மாசுவராஜ்?

பாஜகவின் அடுத்த தலைவராக சுஷ்மாசுவராஜ் தெரிவாகலாம் எனும் யூகம் வலுப்பெற்றுள்ளது.
தற்போது நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவராக சுஷ்மா சுவராஜ் இருந்து வருகிறார்.
பாஜகவின் தற்போதைய தலைவரான நிதின் கட்கரியின் பதவிக் காலம் இந்த மாதம் முடிவடைய உள்ளது. மேலும் கட்காரி மீது பல முறைகேடு புகார்களும் எழுதுள்ளதால் இரண்டாம் தர நிலை பதவி கொடுப்பதற்கு கூட இவருக்கு கட்சி உள்மட்டத்தில் கடும் எதிர்ப்பு வலுத்து வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் கட்சி மற்றும் ஜஸ்வந்த் சிங், யஸ்வந்த சின்ஹா போன்ற மூத்த அரசியல் தலைவர்கள், சுஷ்மா சுவராஜ் பாஜகவின் அடுத்த தலைவராக வருவதையே விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குஜராத் தேர்தல் முடிவுகள் மற்றும் ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் 2013 ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு மேல், பாஜக தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுஷ்மா சுவராஜ் அவ்வாறு பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சுஷ்மாவை பிரதமர் வேட்பாளரில் இருந்து தவிர்க்கலாம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. சுஷ்மா சுவராஜ் பாஜகவின் தலைவராக நியமிக்கப் பட்டால், பஜகவின முதல் பெண் தலைவர் சுஷ்மா சுவராஜ் எனும் பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் இல்லை: