Her family said Aishwarya had lost consciousness after lunch on December 5, and they took her to the hospital. Police sources said that they suspected suicide. The body was sent to the Government Royapettah Hospital for autopsy. Uthiramerur police have registered a case under the Section 174 (unnatural death) of the Code of Criminal Procedure. "We are probing the case. Inquiries revealed that Aishwarya had consumed sleeping pills to end her life," an investigation officer said.
தமிழக இளைஞர் காங்கிரஸை உலுக்கியிருக் கிறது இளம்பெண் ஐஸ்வர்யா தற்கொலை மரணம். இந்த மரணத்தின் பின்னணி பற்றி இளைஞர் காங்கிரஸ் வட்டாரங்களில் உலவும் சில தகவல்கள் ஜீரணிக்க முடியா தவைகளாக இருக்கின்றன. மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசனின் ஆதரவாள ராக இருப்பவர் நெடுஞ்செழியன். ரியல் எஸ்டேட் தொழிலதிபர். இவ ரது மகள் ஐஸ்வர்யா, 22 வயது இளம்பெண். சில மாதங்களுக்கு முன்பு நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர் தலில் காஞ்சிபுரம் நாடாளு மன்றத் தொகுதி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.இளைஞர் காங்கிரஸில் கடுமையான உழைப்பாளி என்றும் சோம்பல் இல்லாமல் எப்போதும் சுறுசுறுப்பாக அரசியல் பணிகளை செய்பவர் என்றும் பெயரெடுத்திருக் கிறார். இந்தச் சூழலில்,கடந்த வாரம் அவர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைய, அந்த மரணம் இளைஞர் காங்கிரஸை அதிர வைத்திருக்கிறது.
சென்னை அடையாறு இந்திரா நகர் வீட்டில் கடந்த 7-ந் தேதி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி யும் தூக்குப் போட்டும் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார் ஐஸ்வர்யா. அவரை மலர் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோதே ஐஸ்வர்யாவுக்கு சுயநினைவு இல்லை. டாக்டர்கள் போராடினர்.ஆனால், 11-ந் தேதி இறந்துவிட்டார் ஐஸ்வர்யா. தூக்குப் போட்டுக்கொண்டதால் மரணம் சம்பவித் திருக்கிறது என்று சொல்லி, பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக