செவ்வாய், 18 டிசம்பர், 2012

கலைஞர் : 928 கொலைகள், 768 கொள்ளைகள் 476 வழிப்பறி சம்பவங்கள்

கடுமையான மின்வெட்டை கண்டித்து, சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர், தமிழகத்தை ஆளுவது நேர்மையற்ற அரசு குற்றம்சாட்டினார். அதிமுக அரசு பொறுப்பு ஏற்றவுடன் தமிழக முழுவதும் 928 கொலைகள், 768 கொள்ளைகள் நடந்துள்ளதாகவும், இதனால் சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். கடுமையான மின்வெட்டை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. மாதவரத்தில் பொது செயலாளர் அன்பழகன், காஞ்சிபுரத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி கலைஞர் அரங்கத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டை கண்டித்தும் அதிமுக அரசுக்கு எதிராகவும் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்கள், நகர, ஒன்றிய பேரூராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளதாக கூறினார். அதுமட்டுமின்றி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்விக்குறியாகவே மாறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 928 கொலைகள், 768 கொள்ளைகள் மற்றும் 476 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளதாக பட்டியலிட்டு கூறினார். தமிழக மக்களுக்கு ஒரு நேர்மையான அரசுவை ஜெ தலைமையில் வழங்க முடியவில்லை என்று கூறிய அவர், திமுக-வை பழிவாங்கும் எண்ணத்துடன் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். எத்தனை பொய் வழக்குகள் போட்டாலம் திமுக வெல்லும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு இதுவரை எந்த வித நடவடிக்கையும் ஆளும் அதிமுக அரச எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், காவிரி விஷயத்திலும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி முடிவு எடுக்க தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்

கருத்துகள் இல்லை: