ஞாயிறு, 4 நவம்பர், 2012

உயரதிகாரிகளின் வீடுகளில் 5,000 போலீசார் எடுபிடி வேலை

கோவை:தமிழக காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் 5,000 போலீசார், "ஆர்டர்லி' (எடுபிடி) வேலை செய்கின்றனர். போலீஸ் வேலையே செய்யாத இவர்களுக்கு, ஆண்டு தோறும் 120 கோடி ரூபாய் வரை, அரசு கஜானாவில் இருந்து ஊதியமாக வழங்கப்பட்டு, நிதி வீணடிக்கப்படுகிறது. தமிழக காவல்துறையில் காவலர், ஏட்டு, எஸ்.ஐ.,- இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., - கூடுதல் எஸ்.பி., - எஸ்.பி., - டி.ஐ.ஜி., - ஐ.ஜி., - ஏ.டி.ஜி.பி., - டி.ஜி.பி., பதவி நிலைகள் வரை, ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
இவர்களில் 5,000 காவலர்கள், போலீசார் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில், "ஆர்டர்லி' வேலை செய்கின்றனர். இவ்வேலையில் ஈடுபட்டுள்ள போலீசார், அன்றாட போலீஸ் நடவடிக்கைகளில் பங்கேற்பதில்லை. அதிகாரிகளின் வீடுகளில் எடுபிடி வேலை பார்த்துக்கொண்டே, பதவி உயர்வு, "காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்ததாக ரிவார்டு' களை பெற்றுக் கொள்கின்றனர். அதிகாரிகள் சிலரது வீடுகளில், எஸ்.ஐ., அந்தஸ்தில் உள்ளவர்களும் கூட, எடுபிடி வேலை செய்கின்றனர்.காவலர், ஏட்டு எஸ்.ஐ.,களின் மாத ஊதியம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை. தமிழகம் முழுவதும் பணியாற்றும் 5,000 போலீஸ் "ஆர்டர்லி'களுக்கு, அரசு கஜானாவில் இருந்து, மாதம்தோறும் 10 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. என்னமோ புதுசா சொல்வது போல சொல்கிறீர்கள் ?? காலம் காலமாக நடந்துவரும் வேலை தானே ... திமுக ஆட்சியில் 80 % இருந்தது , அதிமுக ஆட்சியில் 90 % ஆகியுள்ளது அவ்வளவே ... முதலில் தொந்தி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு இல்லை , வேலை பறிக்கப்படும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் ...

ஒரு கோடிக்கு மணமேடை அமைத்து மகளுக்கு திருமணம் ஆந்திர அமைச்சர்

wedding that has been ultra-glam covered in superfluity and can easily be claimed the mammoth marriage of Andhra Pradesh is the Congress Chief Botsa Satyanarayana daughter’s marriage.It has been reported that there had been almost 35 DSPs, 120 SHOs and 700 constables who were set out to ensure that the marriage ceremony was conducted smoothly. ஐதராபாத்:அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி, கோடிக் கணக்கான பணத்தை செலவழித்து, ஆந்திர மாநில போக்குவரத்து அமைச்சர், பொஸ்தா சத்யநாராயணா மகளுக்கு நடத்தப்பட்ட ஆடம்பர திருமணம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த திருமணத்தில், மணமக்கள் அமரும் மேடைக்காக மட்டுமே, ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல், அனைவரையும், ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்துள்ளது.

தே.மு.தி.க விலிருந்து 15 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வர தீவிரம்

நான்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்களை ஆளும் கட்சி வளைத்த பின்னணி இந்த உடைப்பு அசைன் மெண்ட்டில் தீவிரமாக உள்ள அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் டீமிடம் பேசிய ஜெ., புதிய திட்டம் ஒன்றையும் வகுத்துக் கொடுத்துள்ளாராம். தே.மு. தி.க.விலிருந்து குறைந்தது 15 எம்.எல்.ஏ.க்களையாவது வெளியே கொண்டு வரவேண்டும். அவர்கள் ஒன்று சேர்ந்து "நாங்கள்தான் உண்மையான தே.மு.தி.க.' என்று சொல்லி விஜயகாந்த்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அத்துடன், "முரசு சின்னம் எங்களுக்குத்தான்' என்று அவர்கள் உரிமை கோர வேண்டும். விஜயகாந்த்தும் அதே உரிமையைக் கேட் பார். வழக்கு நீதிமன்றத்திற்குப் போகும். இருதரப்பும் முரசு சின்னத்தை கேட்கும்போது நீதிமன்றம் அதற்குத் தடை விதிக்கும். எம்.பி. தேர்தலில் விஜயகாந்த் கட்சி, முரசு சின்னம் இல்லாமல் தவிக்கும் என்பதுதான் அ.தி.மு.க. தலைமையின் திட்டமாம்.ஜெயலலிதாவா? விஜயகாந்த்தா? என்ற ஃபைட்டில் தமிழக அரசியல் களம் விறுவிறுப் படைந்துள்ளது. தனது கட்சியை உடைக்கும் ஜெ.வுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை ஓரணியாகத் திரட்ட நினைக்கும் விஜயகாந்த், இது தொடர்பாக கலைஞர் உள்பட எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க ரெடியாகி வருகிறாராம்

சனி, 3 நவம்பர், 2012

இந்து, கிறிஸ்தவர்களுக்காக வாதாடும் பாகிஸ்தான் சமூக சேவகி மீது சரமாரி துப்பாக்கிச் சூடு

 Marvi Sirmed

Unidentified gunmen on Thursday attacked prominent rights activist Marvi Sirmed, who has received threats from extremist groups several times in the past, in the Pakistani capital though she escaped unharmed.
The gunmen, who were in a black car, fired at Sirmed's vehicle at Murree Road near Bani Gala on the outskirts of Islamabad while she was returning home from work this evening.
"They tried to target us twice and fired several shots at my car which missed. Luckily, my driver sped away and we escaped," Sirmed told PTI.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரபல சமூக சேவகி மீது மர்ம ஆசாமிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். எனினும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் புறநகரில் வசிப்பவர் மார்வி சிர்ம்ட். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்துக்கா கவும் வாதாடி வருகிறார். குறிப்பாக ஷியா முஸ்லிம் பிரிவினர், இந்துக்கள், கிறிஸ்தவர்களுக்கு முழு உரிமை கேட்டு போராடி வருகிறார். மேலும், இந்து பெண்களை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வதை கடுமையாக எதிர்த்து வருகிறார் மார்வி.
இதனால், இந்தியாவுக்கு ஆதரவானவர் என்று கூறி தீவிரவாதிகள் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஏற்கனவே பல முறை மார்வியை கொல்ல முயற்சி செய்தனர். இந்நிலையில், இஸ்லாமாபாத் புறநகர் பனிகலா பகுதியில் முர்ரி சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது நேற்று மர்ம ஆசாமிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

காந்தி-நேருவின் லட்சியங்களை பரப்பவே அசோசியேட்டட் ஜர்னலுக்கு கடன்: காங்கிரஸ் விளக்கம்


நடிகை லிசி தந்தை செலவுக்கு பணம் தர மறுப்பு

திருவனந்தபுரம் : கடந்த 1980ம் ஆண்டுகளில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் லிசி. இவர் மோகன்லால், மம்முட்டி உட்பட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவரது தந்தை வர்க்கி. 15 ஆண்டுகளுக்கு முன் பிரபல டைரக்டர் பிரியதர்ஷனை லிசி காதலித்து மணந்தார்.

திருமணத்துக்கு பிறகு கணவருடன் சென்னைக்கு லிசி குடி பெயர்ந்தார். அதன் பிறகு, அவர் தந்தையை கவனிக்கவில்லை. செலவுக்கு பணமும் தரவில்லை. இதனால், 2 ஆண்டுகளுக்கு முன் மூவாற்றுபுழா நீதிமன்றத்தில் லிசி மீது வர்க்கி வழக்கு தொடர்ந்தார். இதில், வர்க்கியின் செலவுக்கு மாதம்  5,500 கொடுக்கும்படி லிசிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், லிசி பணம் கொடுக்கவில்லை. மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து  கேரள உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், மூவாற்றுபுழா நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

நான் அதன் ரசிகை ...இது இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு

[படங்கள்;நன்றி,http://yazhsuthahar.blogspot.in/]
மயில்வாகனன்
நினைவு மலரத் தொடங்கிய குழந்தைப்பருவ நாட்களில் இலங்கையோடு எனக்கு ஏற்பட்ட முதல் பிணைப்பு இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பால் நேர்ந்தது. குடும்பத்தில் ஒற்றைக் குழந்தையாகத் தனிமையில் வளர்ந்த எனக்கு உற்ற துணையும் தோழியும் அதுவாக மட்டுமே இருந்த காலம்...’50களின் பிற்பகுதியும்,’60களும்... !
இலங்கை வானொலியின்  கூட்டுத்தாபன சேவையெல்லாம் தொடங்குவதற்கு முன் அது வெறும் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பாக இருந்த நாளிலிருந்தே நான் அதன் ரசிகையாக இருந்திருக்கிறேன். இன்றும் கூட, இனிமையான பழைய திரைப்பாடல்கள் காதுகளை வருடும்போது முதன்முதலாக இலங்கை வானொலி வழி அவை எனக்கு அறிமுகமான அந்த நாள் நினைவுகளே நெஞ்சில் அலையடிக்கின்றன.பாடல்களை வறட்டுத்தனமாக ஒலிபரப்பாமல் ரசனையோடும் அவை பற்றிய பின்னணியோடும் உற்சாகமான தொனியில் விவரிக்கும் மூத்த அறிவிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்களின் தமிழும்,குரல்வளமும் இன்னமும் கூட என்னுள் ஒலிப்பதை என்னால் உணர முடிகிறது. தொடர்ந்து பிற அறிவிப்பாளர்களான திருமதி ராஜேஸ்வரி..., அட்டகாசமான ஆக்கத்திறன் கொண்ட கே.எஸ். ராஜா,முன்னோடிகளின் பாதையில் பயணப்பட்டாலும் தனக்கென ஒரு பாணியைத் தேர்ந்து கொண்ட அப்துல்ஹமீத்,மயில்வாகனன் சர்வானந்தா எனப்பலரையும் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை நான் தொடர்ந்து வந்திருக்கிறேன்.
இலங்கை வானொலி, திரைப்பாடல்ரசனையை மட்டும் எனக்கு அளிக்கவில்லை...’இசையும் கதையும்’ போன்ற நிகழ்ச்சிகளின் வழி என்னுள் இருந்த கதைசொல்லியை வளர்த்தெடுத்ததிலும் அதற்குப்பங்குண்டு.[பள்ளி நாட்களில்..’இசையும் கதையும்’ மீது பெரும் மோகம் கொண்டிருந்த நான்..ஒரு கதையை எழுதி அதற்கேற்ற பாடல்களைப் பொருத்தமாக இயைத்து அந்நிகழ்ச்சிக்கும் கூட அனுப்பி வைத்திருக்கிறேன்.]

கனடாவில் தமிழ் மாணவி காணாமற் போயுள்ளார்

கனடாவில் தமிழ் மாணவி ஒருவர் காணாமற் போயுள்ளார். ஸ்காபரோ நகரில் வசிக்கும் 16 வயதான காயத்திரி வைத்திலிங்கம் என்ற மாணவியே நேற்று முன்தினம் காணாமற் போயுள்ளார். இது குறித்து டொரொண்டோ பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமக்கு தகவல் தந்து உதவுமாறு டொரொண்டோ பொலிஸார்  கோரியுள்ளனர்.
41 Division
416-808-4100
The Toronto Police Service is requesting the public’s assistance locating a missing girl.
Kayathiri Vaithilingam, 16, was last seen on Thursday, November 1, 2012, at 3 p.m., in the Neilson Road/Ellesmere Road area
She is described as brown, 5’5”, 150 lbs., with brown eyes and long, black wavy hair.
Police are concerned for her safety.
Anyone with information is asked to contact police at 416-808-4100, Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477), online at www.222tips.com, text TOR and your message to CRIMES (274637), or Leave A Tip on Facebook. Download the free Crime Stoppers Mobile App on iTunes, Google Play or Blackberry App World.
http://www.torontopolice.on.ca/newsreleases/24911

Diana டயானா பயன்படுத்திய கார் விற்பனைக்கு வருகிறது


பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஏலம் விடப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கார் 2 லட்சம் அமெரிக்க டொலர் வரை ஏலம் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மறைந்த இளவரசி டயானாவும், பிரிட்டன் இளவரசர் சார்லஸசும் 1985ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது, அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன் அவரது மனைவி நான்சி ஆகியோரைச் சந்தித்தனர்.
அப்போது இந்தக் காரைப் பயன்படுத்தினர். அமெரிக்காவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தால் 1979ஆம் ஆண்டு இந்தக் கார் வாங்கப்பட்டது. பின்னர், நிபுணர்கள் 3 ஆண்டுகள் உழைத்து இந்தக் காரை குண்டு துளைக்காத, ஆயுதங்கள் பொருத்தப்பட்ட காராக மாற்றினர். இதற்காக சுமார் ரூ.1.07 கோடி செலவிடப்பட்டுள்ளது.

நித்தி மிரட்டியதால் போலீஸில் புகார் அளிக்கவில்லை நிலமோசடி வழக்கு

சேலம் மாவட்டம், சீரகாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கி.குணசேகரன். இவர் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னீஸிடம் அளித்த மனு விவரம்:
2005-ஆம் ஆண்டில் சென்னகிருஷ்ணன், சக்தி, செல்வம் ஆகியோர் மூலம் நித்யானந்தாவிடம் அறிமுகமானேன். அவரது செயலர் சதானந்தா உள்ளிட்டோர் சீரகாப்பாடி பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் அமைக்க விரும்புவதாகவும், எனவே, கடத்தூர் முக்கோணம்பாளையம் பகுதியில் உள்ள எனது நிலத்தை தானமாக கொடுக்குமாறு கேட்டனர். மேலும், நித்யானந்தரும் இதுகுறித்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து, 50 சென்ட் நிலத்தைத் தானமாகக் கொடுக்க ஒப்புக் கொண்டேன்.2006-ஆம் ஆண்டு பத்திரப் பதிவு அலுலகத்துக்கு சென்ற என்னிடமும், எனது மனைவி, சகோதரி ஆகியோரிடமும் அவர்கள் ஆங்கிலத்தில் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். ஆனால், நிலத்துக்கான பணம் குறித்து அவர்கள் பேசவில்லை.

கப்பலில் இருந்து 5-வது ஊழியர் உடல் கரை ஒதுங்கியது

 நாம் தமிழர்கள் பண்பை பற்றி மனிதாபிமானத்தை பற்றி எல்லாம்  உலகிற்கே பாடம் எடுத்தவர்கள் ஆனால் நமது வீட்டில் அல்லது நாட்டில் இதெல்லாம் கண்டுக்கவே மாட்டோம் சினிமா ஷூட்டிங் முக்கியமா இது முக்கியமா விபரம் இல்லாம பேசப்படாது 
சென்னை: நிலம் புயலின் போது சென்னை பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் கரை ஒதுங்கிய சரக்குக் கப்பலில் இருந்து குதித்தவர்களில் 5-வது ஊழியரின் உடலும் கரை ஒதுங்கியது.
தரை தட்டிய கப்பல்
மத்திய அமைச்சர் சரத்பவார் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனத்துக்கு சொந்தமானது பிரதிபா காவிரி என்ற சரக்குக் கப்பல். இக்கப்பல் சென்னையில் சரக்கை இறக்கிவிட்டு மும்பை செல்ல முடியாமல் சென்னை கடற்பரப்பில் நின்று கொண்டிருந்தது. தங்களுக்கான எரிபொருள் மற்றும் உணவு வழங்க கப்பலில் இருந்த 37 பணியாளர்கள் பலமுறை துறைமுக, காவல்துறையினருக்கு கோரிக்கைவிடுத்தும் யாரும் கேட்பாரில்லை. ஏஜெண்டும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் வங்கக் கடலை வலம்வந்த நிலம் புயல் இந்த சரக்குக் கப்பலையும் பதம் பார்த்தது.

தா.பாண்டியன்: நாங்கள் உங்களுக்காக நல்ல கலையை ரசிக்கும்

புயல் நிவாரணம்... முதல்வர் மனம் நோகாமல் அறிக்கை வெளியிடும் . தா.பாண்டியன்

சென்னை: புயல் மழை வந்தால் உரிய நிவாரணம் கோரி அறிக்கை வெளியிடுவது அரசியல் கட்சிகளின் வழக்கமான நடவடிக்கைகளில் ஒன்றுதான்! ஆனால் இத்தகைய அறிக்கையிலும் கூட தமிழக முதல்வரின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் அப்படி ஒரு 'அக்கறை' காட்டியிருக்கிறார்.
சென்னையில் தா. பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், நிலம் புயல் காற்றாலும், அதற்கு முன்னதாக தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி இல்லாத நிலையில் ஒரு போக சாகுபடி செய்திட நேரடி விதைப்பின் மூலமும் நடவு செய்தும் பயிரிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் அபாய நிலை உள்ளது. இப்பாதிப்பை சரியாக கணக்கிட்டு உரிய நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும்.  எப்படி எப்படியெல்லாம் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களை துதி பாடலாம் என்று அதிமுக இவரிடம் பாலபாடம் எடுக்கவேண்டும் . நாங்கள் உங்களுக்காக நல்ல கலையை ரசிக்கும் அம்மாவுக்காக 

1600 கோடி மோசடி- காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய கோருகிறார் சு.சுவாமி

Posted by:  Subramanian Swamy Move Ec Seeking
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் பொது நிறுவன சொத்துகளை அபகரிக்க கடன் கொடுத்த காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடப் போவதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்
சோனியா-ராகுல் மீதான புகார் என்ன?
சோனியாவும் ராகுல் காந்தியும் 76% பங்குகளை வைத்திருக்கும் யங் இந்தியா என்ற தனியார் நிறுவனம் பொது நிறுவனமான அசோசியேட் ஜேர்னல் லிமிடெட்டின் ரூ1600 கோடி சொத்துகளை அபகரித்திருக்கிறது. யங் இந்தியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடன் கொடுத்திருக்கிறது என்பதுதான் சுப்பிரமணிய சுவாமி கூறும் புகார்.

சென்னை தரைதட்டிய கப்பல் சரத் பவாருக்கு சொந்தமானது

 grounded ship cannot be moved of chennai கப்பலில் பசிக்கொடுமையால் எலிக்கறி தின்ன வைத்த சரத்பவார் குடும்பம்!

சென்னை: சென்னை  பட்டினப்பாக்கம் கடற்பரப்பில் தரைதட்டிய கப்பல் சென்னையில் இருந்து வெளியே செல்வதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் சரத் பவார் குடும்பத்தினருக்கு சொந்தமான இக்கப்பல் 80 நாட்களாக சென்னை கடற்பரப்பில் தத்தளித்த நிலையில் உரிமையாளரும் ஏஜெண்ட்டும் கைவிட்டுவிட்டடதால் பசிக் கொடுமைக்குள்ளாகி கப்பலில் இருந்த எலிகளைப் பிடித்து சாப்பிட வேண்டிய நிலைக்கு பணியாளர்கள் தள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. http://tamil.oneindia.in/
Sharad Pawar with daughter Supriya Sule
His Record As Minister Of Agriculture...
  • Food inflation at its highest in two decades—16-20%
  • Draft of Food Security Act problematic, not yet passed
  • He aggressively pursued the introduction of controversial GM food in the country
...And His Family’s Business Interests
  • Sugar, grapes, horticulture
  • Cooperatives—sugar and other mills and factories; marketing federations; credit institutions
  • Partnerships in distilleries
  • Stakes in holding companies of some construction and infrastructure majors
  •  http://www.outlookindia.com/article.aspx?265791

சுவாமியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும்

சுப்ரமணியம் சுவாமி சொல்வது உண்மை என்றால், அது பெரிய விஷயம்!” -பா.ஜ.க.< “சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது சுப்ரமணியம் சுவாமி சுமத்திய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்கி உள்ளதாக சுவாமி குற்றம் சாட்டியது தொடர்பாகவே பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி, அவ்வாறு தெரிவித்துள்ளார். சிம்லாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜேட்லி, “சுவாமியின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சி விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும். அதைவிடுத்து, இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, உண்மைக்குப் புறம்பானது என மேலோட்டமாகக் கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது.

பீட்சா திறமைசாலிகளுக்கு குளுகோஸ் கொடுத்திருக்கிறது.

பீட்சா திரைப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவில் உள்ள திறமைசாலிகளுக்கு குளுகோஸ் கொடுத்திருக்கிறது. புதுமுக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா ரசிகர்களிடையே பெற்றுள்ள பெரும் வரவேற்பு ஆரோக்கியமானது. சமீபகாலத்தில் இதுபோன்ற துல்லியமான திரைக்கதையுடன் எந்தவொரு தமிழ் படமும் வந்ததாக ஞாபகமில்லை.
படத்தில் உள்ள அட்டகாசமான ட்விஸ்ட்டுகள், காட்சிகளுக்கு தேவையான பயமுறுத்தும் இசை, துல்லியமான கேமரா கோணங்கள், என அனைத்து டாப்பிங்குகளும் போட்ட டபுள் சீஸ் பீட்சாவை டெலிவரி செய்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படம் வெளியான போது 100 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டார்கள். வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இது 180 திரையரங்குகளாக அதிகரித்தது.
இப்போது அதைவிட மகிழ்ச்சியாக பீட்சா கேங் சொல்லும் விஷயம், இந்தப் படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது என்பதுதான்.
 தமிழ் சினிமாவின் ‘ட்ரென்ட் செட்டர்கள்’ என்று கூறப்படும் மெகா டைரக்டர்களின் எந்தப் படத்தையும் ஆங்கிலத்தில் ரீமேக் செய்ய முடியாது. காரணம், அவை ஏற்கனவே மற்றொரு வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்டதுதானே!

திக்விஜய்சிங்? நரேந்திர மோடிக்கு மனைவி (யசோதா) இருக்காங்க தெரியுமா?

 Digvijaya Singh Asks Narendra Modi நரேந்திர மோடிக்கு மனைவி இருக்காங்க தெரியுமா?: திக்விஜய்சிங் பரபரப்புப் பேச்சு Digvijay Singh said: "Why is Modi is silent about his wife's name? If you can visit You Tube and search Narendra Modi's wife, you will find the name Yashoda Ben as his wife."



சிம்லா: மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியை கிண்டலடித்து சர்ச்சையை தொடங்கி வைத்திருக்கும் நரேந்திர மோடியின் பேச்சு இப்பொழுது அவருக்கே பூமராங்காக திரும்பியிருக்கிறது.
மோடியின் கிண்டல்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவையில் மீண்டும் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு "ரூ. 50 கோடி காதலி" இருக்கிறார். இவ்வளவு வேல்யூவான காதலி உண்டா? எனக் கேள்வி எழுப்பினார்.
ஐ.பி.எல். விவகாரத்தில் சசிதரூரின் காதலியாக இருந்த சுனந்தாவை மனதில் வைத்துக் கொண்டுதான் மோடி இப்படிப் பேசியிருந்தார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சசி தரூரோ, என் மனைவி விலை மதிப்பற்றவர் எனப் பதிலடி கொடுத்திருந்தார்.
இப்போது மோடியை இதே மனைவி விவகாரத்தை வைத்து மடக்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங்.

விஜயகாந்தை கேட்டது போல் ஜெயலலிதாவை கேட்டால்???//

முட்டைக்கு மொட்டை அடிப்பதுபத்திரிகையாளர்கள் என்று ஒரு இனம் தமிழ்நாட்டில் இருக்கிறதா
சென்னை விமானநிலையத்தில் விஜயகாந்த் நடந்துகொண்ட முறை அநாகரிகமானது. பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்றால் எதுவும் பேசாமல் ஒதுங்கிச் சென்றிருக்கலாம். மாறாக தன்னுடைய கட்சிக்காரர்களை நடத்துவதைப் போல பத்திரிகையாளர்களை நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதே நேரம், புரட்சித்தலைவியை இதேபோல விமானநிலையத்தில் மடக்கி, குறுக்கிட்டு, இதே பத்திரிகையாளர்கள் பேச ‘தில்’ இருக்கிறதா என்று பொதுமக்கள் ஊருக்குள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ கணக்காக, கொஞ்சம் கிராமத்து மனிதர் மாதிரியாக வெள்ளந்தியாக பழகுகிறார் என்பதற்காக மனைவியோடு கைபிடித்துச் சென்றுக் கொண்டிருந்தவரை குறுக்கிட்டு எகனைமொகனையாய் பேசியதை என்னவென்று சொல்ல?

ஞாநி: விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள் சின்மயி

“ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் ‘நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தை, என்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா? 
அன்புள்ள சின்மயிக்கு
வணக்கம்.
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.

பிரதமர்: சமூக, பொருளாதார சாதனைகள் படைத்திருக்கிறோம்

நாம் மிகுந்த மன வலிமையுடனும், கடமை உணர்வுடனும் பணியாற்றுகிறபோது, இந்த நாடு அடைய வேண்டிய இலக்குகளை அடைய முடியும். என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கடந்த 28 ஆம் தேதி பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.  இந்த மாற்றத்துக்கு பின்னர் முதன்முதலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியபோது கூறியதாவது:

விஜயகாந்துக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்

நிருபரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்துக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், மதுரைக்கு செல்வதற்காக கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் கேள்வி கேட்டதாகவும், அவர்களை விஜயகாந்த் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாள பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர் நீதி விசாரணை தேவையில்லை

மதுரை : கூடங்குளம் தடியடிக்கு நீதி விசாரணை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. போராட்டகாரர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். கூடங்குளத்தில் செப்டம்பர் 10ம் நடந்த தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய  மனுக்கள் நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கூடங்குளத்தில் பொது மக்களுக்கு பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. அங்கு 144 தடை உத்தரவு இருந்த போதும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடியடியில் எத்தனை பொது மக்கள் காயமடைந்தனர், எத்தனை வீடுகள் சேதமடைந்தது என்பது தொடர்பான எந்த ஆதாரத்தையும் மனுதாரர் அளிக்கவில்லை.

7,100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்தது திமுக ஆட்சிதான்

சென்னை : தமிழகத்திற்கு 7,100 மெகாவாட் மின்சாரம் கிடைக்க திமுக ஆட்சியில்தான் வழி வகை செய்யப்பட்டது என்று ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில் அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தற்போதுள்ள மோசமான மின்வெட்டுக்குக் காரணமே முந்தைய திமுக அரசுதான் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவையில் சொல்லியிருக்கிறார். திமுக ஆட்சி நடத்தியபோது தற்போது உள்ளதைப் போல 15 மணி நேரம் மின் வெட்டா இருந்ததா என்று கேட்டால் இல்லை, இல்லவே இல்லை.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்ட மின் பற்றாக்குறைக்கு, ஏற்கனவே இருந்த திமுக அரசுதான் காரணம் என்கிறாரே முதலமைச்சர், அப்படியென்றால் 1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 1,302 மெகாவாட் மின் நிறுவு திறனும், 2001 முதல் 2006ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் 2,518 மெகாவாட் மின் நிறுவு திறனும் ஏற்படுத்தப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே, இதற்கு மட்டும் அவருடைய அந்த ஆட்சிக் காலத்திற்கு முன்பு நடைபெற்ற திமுக ஆட்சி காரணம் இல்லையா?

தமிழ் மக்களுக்கு எது கிடைத்தாலும் குழப்பியேதான் தீருவோம், TNA

தீர்வை மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு எது கிடைத்தாலும் தமிழ் மக்களுக்காக யாரென்ன செய்தாலும் அதைக் குழப்பியேதான் தீருவோம் என்று வெளிப்படையாகவே செயற்பட ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். “இனி தமிழ்மக்களுக் கான தீர்வுக்கு என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்தியாவையும் சர்வதேசத்தையுமே சார்ந்ததாகும்” என்று அண்மையில் தங்களது கையாலாகாத்தனத்தை அறிவித்து விட்டு, இங்கு எது நடந்தாலும் அதைக் குழப்புவதன் மூலம் தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கலாம் என்று முடிவெடுத்துவிட் டார்கள் என்று தெரிகிறது.

ஆசிரியர்களின் பிரம்புக்கு தடை அடித்தால் "ஜெயில்'

மதுரை:மாணவர்களை அச்சுறுத்தும்விதம், பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள் மற்றும் சாட்டைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளருக்கு, சி.இ.ஓ., நாகராஜ முருகன் அனுப்பிய உத்தரவு:
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு சட்டத்தின்படி மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்துக்காகவும் பிரம்பால் அடிக்க கூடாது. உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தும் வகையில் தண்டனை வழங்க கூடாது. உடற்கல்வி ஆசிரியர்கள் பிரம்பு கம்புகள், சாட்டைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அடித்தாலோ, தகாத வார்த்தையால் திட்டினாலோ சட்டப்படி குற்றம். தவறு செய்தவர்களை அழைத்து "கவுன்சிலிங்' கொடுத்து நல்வழிப்படுத்த வேண்டும். இதை மீறும் ஆசிரியர் மீது மாணவர்கள் புகார் அளித்தால் அந்த ஆசிரியருக்கு சிறை தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.