
நாங்கள் ஏன் வணிக நோக்கத்திற்காக கடன் வழங்க வேண்டும்? வட்டியில்லாமல் கடன் வழங்கப்பட்டிருக்கும் போது, அதில் எப்படி வணிக நோக்கம் இருக்க முடியும்? மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரின் லட்சியங்களை பரப்பவே அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கப்பட்டது. எங்கள் அரசியல் கடமையைத்தான் செய்திருக்கிறோம்.
அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அதன் பங்குகளை யங் இந்தியா வாங்கியது. இதன்மூலம் அந்த நிறுவனம் உற்பத்தியை மீண்டும் தொடங்கியதுடன், அதன் பத்திரிகைகளும் விரைவில் வெளியாக உள்ளன. மேலும், நாங்கள் கடன் அளித்ததன்மூலம் அந்நிறுவனத்தின் 700 ஊழியர்கள் பயனடைந்துள்ளனர். எங்கள் அரசியல் பணி குறித்து எந்த கட்சியும் முடிவு செய்ய முடியாது. இந்த விஷயத்தில் எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். http://www.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக