மதுரை : கூடங்குளம் தடியடிக்கு நீதி விசாரணை கோரிய மனு தள்ளுபடி
செய்யப்பட்டது. போராட்டகாரர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு
செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர். கூடங்குளத்தில்
செப்டம்பர் 10ம் நடந்த தடியடி சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு
உத்தரவிடக்கோரிய மனுக்கள் நீதிபதிகள் கே.சுகுணா, ஆர்.மாலா ஆகியோர்
முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கூடங்குளத்தில் பொது மக்களுக்கு பால், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது. அங்கு 144 தடை உத்தரவு இருந்த போதும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடியடியில் எத்தனை பொது மக்கள் காயமடைந்தனர், எத்தனை வீடுகள் சேதமடைந்தது என்பது தொடர்பான எந்த ஆதாரத்தையும் மனுதாரர் அளிக்கவில்லை.
இது தொடர்பாக காவல் நிலையத்திலும், உயர் போலீஸ் அதிகாரியிடம் பொது மக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. தடியடி சம்பவம் குறித்து நீதி விசாரணை உத்தரவிட வேண்டும் என்பதை ஏற்க முடியாது. மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் தடுக்கப்பட்டனர் என்ற குற்றச் சாட்டு உள்ளது. இது கடுமையான குற்றச்சாட்டு இது குறித்த ஆதாரம் தேவை. ஆனால் மனுதாரர் எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. தடியடியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்பதற்கான ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. கூடங்குளத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கான நடவடிக்கையில் நன்மை தீமைகளை கோர்ட்டு முடிவு செய்ய முடியாது.
மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று மனுதாரர் வக்கீல் அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டால் விளைவு கடுமையாக இருக்கும்.
ஆர்ப்பாட்டகாரர்கள் தடையே மீறி அணு உலையை சேதப்படுத்தும் நோக்கத்தில் ஊர்வலமாக சென்றுள்ளனர். இது கிரிமினல் குற்றம். இதை குற்றம் இல்லை என்றால் வேறு எந்த செயல் குற்றம் ஆகும். பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதுதான் ஆர்ப்பாட்டம் என்று கூறுவது ஏற்க முடியாது.
வியாபாரிகளை மிரட்டி கடைகளை மூடவைத்தும், மக்களை மிரட்டி போராட்டத்தில் கலந்து கொள்ள செய்வது எப்படி அமைதியான போராட்டம் என கூற முடியும். ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் உத்தரவுக்கு அடிபணியவில் லை. கூடங்குளம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை மதிக்கவில்லை. போராட்டக்காரர்கள் முறையற்று நடந்து கொண்டது சட்டவிரோதமானது. மனுதாரர்கள் ந¦தி விசாரணை கேட்க தகுதியில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக