சுப்ரமணியம் சுவாமி சொல்வது உண்மை என்றால், அது பெரிய விஷயம்!” -பா.ஜ.க.<
“சோனியா
காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி மீது சுப்ரமணியம் சுவாமி
சுமத்திய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி உரிய விளக்கம் அளிக்க
வேண்டும்” என பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.முன்னாள் பிரதமர்
ஜவஹர்லால் நேருவால் நிறுவப்பட்ட அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பல
கோடி மதிப்புள்ள சொத்துகளை சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல்
காந்திக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்கி
உள்ளதாக சுவாமி குற்றம் சாட்டியது தொடர்பாகவே பாரதீய ஜனதா கட்சியின் மூத்த
தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜேட்லி, அவ்வாறு
தெரிவித்துள்ளார்.
சிம்லாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை
சந்தித்த அருண் ஜேட்லி, “சுவாமியின் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ்
கட்சி விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும். அதைவிடுத்து, இந்தக்
குற்றச்சாட்டு ஆதாரமற்றது, உண்மைக்குப் புறம்பானது என மேலோட்டமாகக்
கூறப்படும் கருத்தை ஏற்க முடியாது.
அசோசியேட்டடு நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்ததாக சுவாமி கூறியிருப்பது உண்மையானால், அது தேர்தல் விதிமுறை மற்றும் வருமான வரித் துறையின் விதிமுறைகளை மீறிய செயல் ஆகும். அரசியல் கட்சி வர்த்தக நோக்கத்தில் ஒரு நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருப்பது இதுவே முதன்முறை. இது உண்மையாக இருந்தால் காங்கிரஸ் கட்சிக்கான வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக