ஞாயிறு, 4 நவம்பர், 2012

ஒரு கோடிக்கு மணமேடை அமைத்து மகளுக்கு திருமணம் ஆந்திர அமைச்சர்

wedding that has been ultra-glam covered in superfluity and can easily be claimed the mammoth marriage of Andhra Pradesh is the Congress Chief Botsa Satyanarayana daughter’s marriage.It has been reported that there had been almost 35 DSPs, 120 SHOs and 700 constables who were set out to ensure that the marriage ceremony was conducted smoothly. ஐதராபாத்:அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி, கோடிக் கணக்கான பணத்தை செலவழித்து, ஆந்திர மாநில போக்குவரத்து அமைச்சர், பொஸ்தா சத்யநாராயணா மகளுக்கு நடத்தப்பட்ட ஆடம்பர திருமணம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த திருமணத்தில், மணமக்கள் அமரும் மேடைக்காக மட்டுமே, ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல், அனைவரையும், ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்துள்ளது.

ஆந்திராவில், முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர், பொஸ்தா சத்தியநாராயணா. இவர், ஆந்திர மாநில காங்., தலைவராகவும் உள்ளார். இவரது மகளும், டாக்டருமான, அனுஷாவுக்கும், ரியல் எஸ்டேட் அதிபரின் மகன், சோமிக்கும், நேற்று முன்தினம் இரவு விசாகபட்டினம் அருகே திருமணம் நடந்தது.
திருமண விழாவில் பங்கேற்பதற்காக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 300க்கும் மேற்பட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் வந்திருந்தனர். ஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண் குமார் ரெட்டி, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், தமிழக கவனர் ரோசய்யா, கர்நாடகா கவர்னர் பரத்வாஜ், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், காங்., கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.இவர்களுக்காக, விசாகபட்டினத்தில் உள்ள, அனைத்து நட்சத்திர ஓட்டல்களும் முன் கூட்டியே "புக்' செய்யப்பட்டிருந்தன. வி.ஐ.பி.,க்களை, திருமணம் நடக்கும் இடத்துக்கு வரவழைப்பதற்காக, நூற்றுக்கணக்கான சொகுசு கார்கள் பயன்படுத்தப்பட்டன.
திருமண விழாவில், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்காக, 700 போலீசார், 35 டி.எஸ்.பி.,க்கள் உட்பட, நூற்றுக்கணக்கான அதிகாரிகள், திருணம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.மணமக்கள் அமரும் மேடை மற்றும் பந்தல் ஆகியவற்றை அமைப்பதற்காக மட்டும், ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தெலுங்கு திரைப்பட ஆர்ட் டைரக்டர், இதற்காக பணியமர்த்தப்பட்டிருந்தார்.
திருமண மேடை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மாநிலம் முழுவதும், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, திருமண அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. திருமண விருந்தாக, அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் ஸ்ரீகாந்த் ரெட்டி கூறியதாவது:அமைச்சர் மகளின் திருமணத்துக்காக, ஒட்டு மொத்த அரசு இயந்திரமும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிதி இதற்காக செலவிடப்பட்டுள்ளது. திருமண ஏற்பாடுகளை, அரசு அதிகாரிகள் செய்துள்ளனர்.
வி.ஐ.பி.,க்களை அழைத்து வருவதற்காக சொகுசு கார்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த கார்களுக்கான வாடகை கொடுக்கப்படவில்லை என, சம்பந்தபட்டோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சத்யநாராயணாவை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.இவ்வாறு ஸ்ரீகாந்த் ரெட்டி கூறினார்.

கருத்துகள் இல்லை: