செவ்வாய், 17 மார்ச், 2026

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் திராவிட இயக்ககங்கள் கட்சிகளின் களப்பணிகள்

 Loganayaki Lona  :  எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் குடும்பக் கொலை ,ஜாதியக்கொலை கலவரம் நடந்துகிட்டு இருக்குது.
இதுக்கு எல்லாம் திமுக  காரணமெனில் வேற யார் இருந்தப்ப அங்க கொலை நடக்கல?
சமூகமாகவே ஆதிக்க ஜாதியவாதிகளும்,அந்த வளர்ப்பு முறைகளும் ,ஆயுதப்புழக்கமும் அங்க இருக்குது.
அதற்கான திருத்தப்பணி பெரியார் இயக்கங்கள்,கம்யூனிஸ்ட் அமைப்புகள் சார்ந்து அங்கு பிற மாவட்டங்களில் நடப்பது போல் நடப்பதில்லை.நடத்தவேண்டும்.அந்த அளவு பண்பட்டு இன்னும் அந்தபகுதி மேம்படவில்லை.
ஜாதியக்கலவரம் என்பதிலிருந்து ஜாதியக்கொலை என தனிநபர் கொலைவழக்காகவும், 
ஜாதியவாதிகள் என்பதிலிருந்து ஜாதி அரசியல் கட்சிகளாகவும்,அமைப்புகளாகவும் மாறியிருக்கு.

திமுக,விசிக,கம்யூனிஸ்ட்திக,திவிக போன்ற முற்போக்கு கட்சிகளிலும் இந்தப்பகுயில் இருக்கும் பலர் இருக்க அங்க வேலை என எதுவும் பெரிதாக நடந்ததில்லை.
குடும்ப வன்முறை பொறுத்தவரை தினமும் ஒரு ஸ்டவ் வெடித்த நியூஸ் இல்லாமல்  திருநெல்வேலி,தூத்துக்குடி செய்திப்பிரிவு 1990-2005 வரை இருக்காது. அப்படி சில நாள் இருந்தால் அது அதிசயம்.குடும்பவன்முறைச்செய்தி இல்லாத ஒரு நாள் பத்திரிக்கையை காட்டுங்க .

திமுக தான் ,குறிப்பாக அமைச்சர் கீதா ஜீவனின் சமூக நலத்துறை செய்ல்பாடு  அங்கு 6 ஆம் வகுப்பிலும் ,8 வகுப்பிலும் கட்டிக்கொடுக்கப்பட்ட  பெண்களை( ஆதிக்க ஜாதிக்கும் பொருந்தும்) தொடர்ந்து படிக்க வை என 3 மாதத்துக்குள் அரசு உதவிகள் அனைத்தும் மக்களை சென்றடைய அயராது உழைத்தார்.
அந்தப்பகுதி பெண்களுக்கு சுய உதவிக்குழு மூலம் அரசு நிதி வழங்கி சிறு தொழிலுதவிகள் செய்ய வைத்து என் கண் முன்னால் ஏதுமற்ற பெண்களின் மகன்கள்,மகள்கள் நல்லா படித்து வெளிநாடுகளில் பணி செய்ய வைத்தது சென்ற திமுக ஆட்சியின் திட்டங்களும் ,அது கிராமங்களுக்குள் சென்றடைந்த வீச்சும் தான் காரணம்.
இன்னும்  அங்கு மாற்றம் தேவை.அதுக்கு அந்த சமூகம் ஒத்துழைப்பு தர வேண்டும்..ஆனால் அங்க எதுவுமே மாறவில்லை என்பது அந்தப்பகுதி குறித்த அறியாமை.
 

இரவில் ஊர் புகுந்துகுடிசை  எரிப்புகளும், படுகொலைகளும்,அதிகாரிகளின் அட்டகாசங்களும் ,ஊரடங்குகளும் நடந்த பகுதிகளில் இன்று எல்லோரும் பள்ளிக்கு அனுப்புறாங்க. படிக்கிறாங்க.ஒரு சில அதிகாரி அதே ஆதிக்கசாதித்தனத்தோட இருக்கின்றனர்.
மாற்றம் ஒன்றே மாறாதது.தேர்தல் அரசியலில் திமுக தலைமையிலும்,பிற முற்போக்கு இயக்கங்களின் செயல்பாட்டுக்கான காலம் கூடும்போதும் ,ஆளுமைகளாக வரும் நல்ல அதிகாரிகள் உதவியிலும்  அங்கும் மாற்றங்கள் வரும்.


கருத்துகள் இல்லை: