![]() |
Sharmila Seyyid : அன்பார்ந்த மக்களே, என் முக்காட்டை 2001 ஆம் ஆண்டு ஏறாவூரிலேயே கழைந்துவிட்டேன்! என்னம்மோ அமெரிக்கா வந்த பிறகு தான் முக்காட்டைக் கழற்றினாற் போலவும்,
எனக்கு சுதந்திர தாகம் வந்தது போலவும்,
இங்குவந்த பிறகுதான் பிறந்த நாட்டிலும் அந்நிய நாட்டிலும் முஸ்லிம் பெண்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பேசும் ஞானதோயம் வந்ததென்றும் உங்கள் பாட்டுக்குப் பிதற்றாதீர்கள்.
நான் அமெரிக்கா வந்து நான்கரை ஆண்டுகள் தான் ஆகிறது.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெண் உடல் மீது நிகழும் பல வித வன்முறைகள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அமெரிக்கா வருவதற்கு முன்பு இஸ்தான்புல்லில் வசித்தபோதும் பள்ளிவாசல்களில் பெண்களுக்கு இருக்கும் புழங்கு வெளிகளை சிலாகித்துப் பலமுறை எழுதியிருக்கிறேன்.
இவ்வளவு ஏன் இலங்கையில் வாழ்கையில்கூட பல கட்டுரைகள், எழுத்துக்களை தேடி ஆராய்ந்து எழுதிக் கொண்டுதான் இருந்தேன். இனியும் தொடர்ந்து எழுதுவேன்.
என் அனுபவம் ஒருபோதும் உங்களது ஆகப்போவதில்லை.
நான் பார்க்கும் பார்வையும் சிந்தனையும் உங்களுக்கு ஒருபோதும் வரப்போவதுமில்லை.
அதற்கான பயணமும் தேடலும் உங்களுக்கு இல்லை.
உங்களைப் போல சமூகத்தை, ஆண்களை, வேறெந்த தனிநபர்களையுமோ அல்லது நாட்டையோ (அமெரிக்கா உள்ளிட) தலாட்டும் ஒட்டுண்ணி வாழ்க்கையிலும் நானில்லை.
முறையாக நாள் தோறும் வேலைக்குப் போய் உழைத்துதான் சோறு தின்கிறோம்.
வருடந்தோறும் டெக்ஸ் செலுத்துகிறோம்.
இங்கே எங்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் சோறு போடவில்லை.
அவருக்கு என் போன்ற People of color மக்களை ஆகாது. முக்கியமாக முஸ்லிம் என்றால் கூடுதல் அலர்ஜி அவருக்கு!
வெள்ளக்காரன் பொய் சொல்லமாட்டான், கோட் போட்டவன் தப்புபண்ணமாட்டான் வகை அரசியல் , கிடைக்கின்ற கெப்பில் தாராளவாதம் பேசும் அரசியலும் எனதல்ல. எனக்கு நான் யார் என்று தெரியும். என் அரசியல் நிலைப்பாடு என்ன என்று யாருக்கும் லெக்சர் அடிக்க நான் இங்கு முகநூலில் எழுதவில்லை. என்னைப் பற்றி நீங்கள் எப்படிவேண்டுமென்றாலும் எழுதிக் கொள்ளுங்கள். அது என்னை எதுவும் செய்யாது.
உங்களுக்கு என்னில் வெறுப்பு உள்ளதென்பது எனக்குப் புதிய தகவல் இல்லை. நான் யார் என்பதும், என் செயற்பாட்டுத்தளம், என் எழுத்து, நான் பேசும் சுதந்திரம் இதெல்லாம் அறிந்த, என்னை நன்கு தெரிந்த சிலரும்கூட முகநூலில் உங்கள் மேதமையை நிலைநிறுத்த என்னை சாய்த்துவிட்டு ஏறிநின்று கை உயர்த்துகிறீர்கள். நானும் உங்களைப் பார்த்துக் கொடுப்புக்குள் சிரித்துத்தான் கடக்கிறேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக