Vasu Sumathi : டெல்லியில் நேற்று சுமார் 7 மணி நேரம் சிபிஐ-யுடன் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்த விஜய்,
இன்று அதிகாலை 12.30 AM அளவில் சென்னை வந்தடைந்தார்.
தவெக - NDA இடையிலான இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளில்,
தவெக-விற்கு 50 முதல் 70 தொகுதிகள், துணை முதலமைச்சர் பதவி, அமைச்சரவையில் எத்தனை இடங்கள், ஆட்சியில் பங்கு வேண்டாம் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் தேர்தலுக்கு முன் 'ஜனநாயகன்' திரைப்பட ரிலீஸ் போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாம்.
எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதில் விஜய்க்கும், விஜய்யை கூட்டணியில் சேர்க்க எடப்பாடிக்கும் இருக்கும் தயக்கங்களே அதிகாரப்பூர்வ அறிவிப்பு தாமதமாவதற்குக் காரணமாம். இதில் ஆகச்சிறந்த காமெடி என்னவென்றால் - டெல்லியில் இவ்வளவு நடப்பது இங்குள்ள தமிழ்நாடு பாஜகவினருக்கு ஒரு 'மானாவும்' தெரியாதாம்!
அப்போ, கையைத் தூக்கி வெற்றிக்கொடி கட்டுன்னு விஜய் வெளியே வந்ததற்கு என்ன அர்த்தம்? பேச்சு வார்த்தையின் முடிவாக எல்லாவற்றிற்கும் அவர் தயார் என்பதாலும், தயக்கம் எடப்பாடி தரப்பில் இருப்பதாலும், பாஜகவிற்கு கோபம் எடப்பாடி மேல்தானாம். "அதற்கு நான் பொறுப்பில்லை சார்" என்று விஜய் சொல்வதால், இப்போது விஜய் NDA-வின் 'குட் புக்ஸில்' இடம்பிடித்துவிட்டார்.
"சார், நான் ரெடி! அவர்கிட்ட பேசிட்டுச் சொல்லுங்க எப்போவேண்டுமானாலும் கூட்டணி முடிவு செய்துவிடலாம். எடப்பாடியும் நானும் சென்னையில்தான் இருக்கோம். அடுத்த கரூர் விசாரணை (தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை) சென்னையிலேயே வைத்தால் இரண்டு பேருக்கும் சுலபமாக இருக்கும்" என்று கேட்டதை ஏற்றுக்கொண்டார்களாம்.
சப்போஸ் எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லை என்றால், "பழைய பிளான்படி தனியாகவே நின்று வாக்குகளைப் பிரிக்கிறேன். அதே நேருத்துல செத்தாலும் சாவேனே தவிர பாஜக, அதிமுக மற்றும் உங்கள் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி மூச்சுக்கூட விடமாட்டேன்" என மூன்று முறை 'திரிசத்யம்' செய்தாராம் (திரிஷா மேல சத்தியம்னுதானே நினைச்சிங்க!). இதைக் கேட்டு "ச்சே விஜய் விஜய்தான்" என்று ஒரு சிபிஐ அதிகாரிக்கே கண்ணில் ஜலமே வந்துடுத்தாம்!
அந்த நேரத்தில் 'கைகட்டி வீடியோ'வில் வருவது போலவே கைகளைக் கட்டிக்கொண்டு, "சார் வெளியே கொஞ்சம் fans இருக்காங்க, அவங்களுக்கு மட்டும் கை காட்டிட்டுப் போகட்டுமா?" என்று கேட்க, அவர்களும் "ஓகே ஓகே பேஷா!" என்று டபுள் பெர்மிஷன் கொடுத்துவிட்டார்களாம்.
இப்போ நிலைமை என்னவென்றால்:
பாதி 'அணில்ஸ்' - டெல்லி அழுத்தத்திற்கு அடிபணியாதவர்கள், அன்று "அறிஞர் அண்ணா", இன்று "விஜய் அண்ணா" - அடுத்த முதல்வர் விஜய் என்று 🔥 விட...
இன்னொரு பாதி - "பாத்தியா எங்க தலைவர் NDAவுடன் கூட்டணி அமைத்துவிட்டு என்னா கெத்தாக வெளியே வராரு, தமிழ்நாட்டில் 220 சீட் தூக்குறோம்" என்று 🔥 வீட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இப்போது பந்து எடப்பாடியின் கோர்ட்டில்! இன்று சீரியஸ் பேச்சுவார்த்தை நடக்கும். இதில் இழுப்பறி நீடித்தால் எடப்பாடி டெல்லிக்கு ஓட வேண்டியிருக்கும். எடப்பாடியை ஆசை காட்டி கவிழ்க்க சங்கீ 'டைம்ஸ் நவ்' நேற்று ஒரு 'புருடா' ஒப்பீனியன் போல் போட்டிருக்கிறான். (திமுக 37-38%, NDA 39-40%, TVK 6%). அதாவது, "TVK வந்தால் நீங்கள் நிச்சயம் முதல்வர்" என அல்வா கொடுக்கிறார்கள். எடப்பாடியும் அதைப் பார்த்து ஜொள்ளு விடுவதாகச் செய்தி வருகிறது.
'Its not over until its over" ன்னு சொல்வாங்க, அது மாதிரி இன்னும் ஒரு கிளாரிட்டி வரவில்லை என்பதே நிஜம். அதற்குள் அணில்களுக்கும் அடிமைகளுக்கும் ஆர்கசம் அடைந்து விட்டார்கள். இதுல வேற உபிஸ் பீதின்னு திரியுதுங்க
ரயிலில் ஜன்னல் ஓரம் அமந்திருந்த ஒருத்தன் போன்ல, "மச்சான் ட்ரெயின் இன்னும் தென்காசிகிட்டகூட போகல, அதுக்குள்ள சிலுசிலுன்னு குற்றால அருவியின் சாரல் மாதிரி காத்து அடிக்குதுடா" ன்னு சொல்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக