![]() |
hirunews.lk : 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலின் போது, கையூட்டலாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா பணம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன தெரிவித்துள்ளார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (19) இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின்படி, தமக்குக் கிடைத்த 60 மில்லியன் ரூபா பணம் மூன்று தவணைகளாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் சிவில் வானூர்தி போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிடம் மேலதிகமாக 20 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக