ஞாயிறு, 15 மார்ச், 2026

கரூர் துயரம்: டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ 7 மணி நேரம் விசாரணை

 மின்னம்பலம் - Mathi :  கரூரில் 41 பேர் பலியான துயரம் தொடர்பான வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு முதல் கட்ட விசாரணையை நடத்தினர்.


இதனையடுத்து டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு தவெக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

தவெக தலைவரான விஜய்யிடமும் டெல்லியில் 2 முறை விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைகளைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி விஜய்யை மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு சிபிஐ சம்மன் அனுப்பியது. அன்றைய தினம் ஆஜராகாத விஜய் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

இன்று காலை முதல் மாலை 6 மணி வரை சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நிறைவடைந்த பின்னர் வெளியே வந்த விஜய், காரில் ஏறி நின்று தவெக தொண்டர்களுக்கு உற்சாகமாக கையசைத்துவிட்டு புறப்பட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel

கருத்துகள் இல்லை: