ராதா மனோகர் : கவிஞர் வைரமுத்துவின் ஞானபீடமும் - Bennett, Coleman & Co. Ltd. (commonly known as The Times Group நிறுவனத்தின் ஞானபீடமும்!
2ஜி வழக்கின் போது தலைப்பு செய்திகளாக
நாள்தோறும் பச்சை பொய்களை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு கொண்டிருந்தது அல்லவா?
டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி வந்தால் அது வெறும் செய்தி அல்ல,
அதுவே தீர்ப்பு என்ற அளவில் அதன் நம்பகத்தன்மை கட்டமைக்கப்பட்டு இருந்தது.
![]() |
அதே டைம்ஸ் ஆப் இந்தியாவை வெளியிடுவது Bennett, Coleman & Co. Ltd. குழும நிறுவனம்தான்
இந்நிறுவனம் பல கம்பனிகளை தன்வசம் வைத்திருக்கிறது
ஷாஜி ஜெயின் குடும்பத்திற்கு சொந்தமானது
இதன் வருமானம் 2022 இல் Increase ₹4.57 billion (US$54 million!
Bharatiya Jnanpith பாரதீய ஞானபீடம் என்பது இவர்களின் நிறுவனம்தான்.
இவர்களின் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில்தான் ஆ.ராசா அவர்கள் அமெரிக்க வங்கியில் 3000 அமெரிக்க டாலர்களை வைத்துள்ளார் என்று தலைப்பு செய்தியாக முழு பொய்யை வெளியிட்டது
இந்த செய்தியை பார்த்துவிட்டுதான் 2 ஜி விசேஷ நீதிமன்ற அமர்வில்,
2 ஜி வழக்கை விசாரித்து கொண்டிருந்த நீதிபதி Special Judge OP Saini அவர்கள் ஆர் ராசாவை எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத ஒரு குற்றவாளியாகவே பார்த்தார்
இந்த சம்பவத்தை பற்றி ஆ ராசா பல மேடைகளில் கூறியிருக்கிறார்.
ஒரு நூற்றாண்டுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டிருந்த டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்தால் உலகமே அப்படியே நம்பிவிடும்.
திராவிட இயக்கத்தை எப்படியாவது அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்த கூட்டத்தின் சதி நாடகம்தான் 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு!
டைம்ஸ் ஆப் இந்தியாவின் திராவிட வெறுப்பு அம்பலமானது இந்த வழக்கில்தான்.
இதன் பொய்கள் மூலம் நாடு முழுவதும் திமுகவை ஊழல் கட்சி என்று நம்பவைத்தது.
இவர்களை போன்ற பொய்யர்களின் சேவையால் பாஜக பதவிக்கு வந்தது,
இந்த 2ஜி கதைவசனத்தில் காங்கிரஸ் சங்கிகளுக்கும் பங்கு உண்டு என்பது ஒரு வேதனையான உண்மையாகும்.
இந்த பின்னணியில் Shaji Jain ஞானபீட பரிசு என்பது சந்தேக கண்கொண்டு நோக்க வேண்டிய விடயம்தான்
அதுவும் தமிழக தேர்தல் சமயத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு இதை வழங்கி உள்ளார்கள்!
கவிஞர் வைரமுத்துவின் தமிழுக்கு இவர்கள் யாரும் புதிதாக அங்கீகாரம் தந்துதான் தீரவேண்டும் என்ற நிலையில் அவர் இல்லை
தமிழ் மொழியும் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற வியாபாரிகளின் அங்கீகாரத்திற்காக அலையவும் இல்லை!
![]() |


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக