வெள்ளி, 8 ஜனவரி, 2021

Intaxseva மூலமாக Income Tax தாக்கல் செய்த... நிம்மதியான மகிழ்ச்சியான Feel வரும்பாருங்க!

Image may contain: one or more people, people standing, sky, grass, outdoor and nature
Karthikeyan Fastura : · Intaxseva மூலமாக கடந்த இரண்டு வாரங்களாக Income Tax தாக்கல் செய்து கொடுக்கும்போது ஒரு விஷயம் எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தங்களது நிறுவனத்தில் கொடுக்கும் Declaration Formஐ Fill பண்ணிவிட்டாலே தங்கள் நிறுவனம் தங்களுக்காக ஐடி தாக்கல் செய்கிறார்கள் என்று மிகவும் புத்திசாலி இளைஞர்கள் கூட தவறான புரிதலை கொண்டிருக்கிறார்கள். நிறுவனம் நமது வருமானத்திற்கான வரியை பிடிக்கும்போது அதில் எங்கெல்லாம் வரிவிலக்கு பெற உங்களுக்கு வழி இருக்கிறது என்று கேட்டு அதில் நீங்கள் எவ்வளவு திட்டமிட்டிருகிறீர்கள் என்ற கணக்கு மட்டும் தான் Declarationல் கேட்கிறார்கள் எவ்வளவு வரி பிடிக்கவேண்டும் என்பதற்காக. வருமானவரி தாக்கலை நாம் தான் செய்யவேண்டும். சம்பளம் தாண்டி உங்களுக்கு வந்த வருவாய், முதலீடு, பிற செலவுகள் நமக்கு தான் துல்லியமாக தெரியும். அதனால் அதை நாம் தான் தாக்கல் செய்ய வேண்டும்.
வேறு என்னெல்லாம் தவறான கற்பிதங்கள் கொண்டிருக்கிறோம். எது சரி என்று பார்ப்போம்
1) 5 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் கொண்டவர்கள் ஐடி தாக்கல் செய்ய தேவை இல்லை என்பது தவறு. உங்களுக்கு கிடைக்கும் சம்பளத்தை தவிர Incentive, Bonus, Variable Pay ஆகியவை கொடுக்கும்போது பெரும்பாலும் TDS பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். ஆகையால் உங்களுக்கு எவ்வளவு வரி பிடித்து இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதை தாக்கல் செய்யும்போது தான் தெரியும்.
மேலும் உங்கள் கம்பெனி உங்களிடமிருந்து வரி பிடித்துக்கொண்டு அரசிற்கு செலுத்தாமல் உங்களையும் அரசையும் ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது. ஆகவேதான் அரசு வருமான வரி வரம்பிற்குள் வந்தாலும் வராவிட்டாலும் Tax File பண்ண சொல்கிறது.
2) TDS பிடித்து விட்டால் அதை திரும்ப பெற முடியாது என்பது தவறு. உங்கள் நிறுவனம் உங்களிடமிருந்து கூடுதலாக வரி பிடித்திருக்கலாம். அந்த நிதி ஆண்டில் நீங்கள் செய்த முதலீட்டிற்கு வருமான வரி விலக்கு இருக்கும். அதையெல்லாம் முறைப்படி அந்தந்த பிரிவில் தாக்கல் செய்யும் போது உங்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட வரி மொத்தமாக திரும்பக் கிடைக்கும்.
3) பெரிய நிறுவனங்களுக்கு Consultant ஆக Service கொடுக்கும்போது அதற்காக பெறும் தொகையில் வருமானவரி பிடித்தே கொடுப்பார்கள். அதை Claim பண்ண முடியாது என்பது தவறான கருத்து. உதாரணத்திற்கு நீங்கள் ஒரு மென்பொருள் வல்லுனர். Freelancer ஆக வேலை செய்து கொடுக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்கான இத்தொகையை Tax பிடித்துக் கொண்டுதான் கொடுப்பார்கள். அதை நீங்கள் மிக எளிதாக Claim செய்து வாங்க முடியும்.
4) Form16 இருந்தால்தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பது தவறு. நிறுவனம் உங்கள் கணக்கில் அரசிற்கு செலுத்திய வரி எவ்வளவு என்று Consolidated Report தான் Form16 என்பது. உங்கள் மாதாந்திர சம்பளபில் இருந்தால் கூட வருமான வரி தாக்கல் செய்ய முடியும். Form16 அத்தியாவசியம் இல்லை.
5) நீங்கள் செய்த எல்லா முதலீட்டிற்கும் வருமான வரிவிலக்கு கிடையாது. அதேபோல உங்கள் முதலீட்டிற்கு உங்களுக்கு கிடைக்கும் வருவாய்க்கும் Capital Gain என்று வரி பிடித்த பின்பே வரும் என்பதால் அதற்காக பிடிக்கப்பட்ட வரியையும் சரியான கணக்கு தாக்கல் செய்யும்போது உங்களுக்கு திரும்ப கிடைக்கும்
6) Startup நிறுவனம் நடத்தி வருபவர்களும், இனி நடத்தும் ஐடியா உள்ளவர்களும் வருமான வரி தாக்கல் செய்தல் நலம். உங்களுக்கு தொழில் கடன் கிடைப்பதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும்
7) Term Insurance எடுக்க விரும்பும் தனிநபர்கள் ஏதேனும் தொழில் செய்பவர்கள் கண்டிப்பாக மூன்று வருடங்களுக்கு வருமான வரி தாக்கல் செய்தாக வேண்டும்.
8) Term Insurance என்றில்லை ஆண்டிற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் இன்சூரன்ஸ் தொகை கட்டும் அது எந்த இன்ஷூரன்ஸ் என்றாலும் கண்டிப்பாக வருமான வரி தாக்கல் செய்ய கேட்பார்கள்
9) அரசின் நியமன பதவிகள் எதுவென்றாலும் அதற்கு விண்ணப்பிக்கும் போது வருமான வரி தாக்கல் செய்த படிவம் கேட்கிறார்கள்.
10) சில வெளிநாட்டு தூதரகங்கள் விசா கொடுப்பதற்கு வருமான வரி தாக்கல் செய்த படிவம் கேட்பார்கள். அந்த நேரத்தில் அவசரஅவசரமாக நீங்கள் செய்தாலும் இரண்டு வருடங்களுக்கு மேல் இப்பொழுது செய்ய முடியாது. அதற்குமேல் செய்யும்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு அந்த நோட்டீஸ் விளக்கத்திற்கு வரி தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். இதனால் உங்களது பயணம் தள்ளிப் போகலாம்.
ஆகவே இன்னும் மூன்று தினங்களுக்குள் உங்கள் வருமான வரியை அரசின் incometaxindiaefiling.gov.in தளத்திற்கு சென்று தாக்கல் செய்து கொள்ளுங்கள். அதில் சிரமம் என்றால்
Intaxseva
இதற்கு குறைவான சேவை கட்டணத்தில், மிக தரமாக, மிக விரைவாக செய்து கொடுக்கிறோம். உங்களது குழப்பங்கள் எதுவென்றாலும் அதை தீர்க்கவும் உதவுகிறோம்.
இப்போதெல்லாம் வருமானவரி துறை ஈமெயில், மொபைல் sms என்று எல்லாவற்றிலும் வளச்சுகட்டி IT File பண்ணிட்டியா..பண்ணிட்டியா என்று அரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதேபோல எல்லா முதலீட்டு திட்டங்களிலும் IT Returns கேட்க சொல்லியிருக்கிறார்கள். இதை தவிர்க்கவே முடியாது.
IT File பண்ணியபிறகு உங்களுக்கு ஒரு நிம்மதியான மகிழ்ச்சியான Feel வரும்பாருங்க. செம்மையா இருக்கும்.

கருத்துகள் இல்லை: