வெள்ளி, 8 ஜனவரி, 2021

திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, கூடுதல் காட்சி- முதலமைச்சர் அறிவிப்பு

malaiamalar : சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.            கடந்த இரண்டு மாதங்களாக இதே நிலை நீடித்து வந்த நிலையில், திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. திரையங்குகளில் 100 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு பொதுமக்கள், மத்திய அரசு, மருத்துவத்துறையினர், நீதிமன்றம் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பல்வேறு தரப்பு விமர்சனங்களுக்கு பிறகு 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக வழங்கிய உத்தரவில் இருந்து தமிழக அரசு இன்று பின்வாங்கியுள்ளது.

100 சதவிகித இருக்கை அனுமதி தொடர்பாக பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு இன்று திரும்பப்பெற்றது. இதன் மூலம் மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்பட உள்ளது. 

50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் கூடுதல் காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி 

* 100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது

*மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* உயர்நீதிமன்ற உத்தரவின் படி கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி  

* முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தல் 

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: