திங்கள், 5 ஏப்ரல், 2021

அறம் என்பது ஹைகோர்ட் அளவுக்கு கூட இல்லாத கூட்டம் தினத்தந்தி, தினமலர், தினமணி, தமிழ்இந்து The Hindu

இவர்களின் பாரம்பரியம் பொய்களை விற்பதுதான் .அன்றே சுட்டி காட்டி வழக்கு தொடுத்த பெரியார்

Karthikeyan Fastura
: கடந்த மூன்று தினங்களாக கடும் தலைவலி மற்றும் ஜலதோஷம் காரணமாக மாத்திரை சாப்பிட தூங்க என்று கழிந்தது . நடுநடுவே வேலைகள். இவற்றிற்கு மத்தியில் இணையத்தின் பக்கம் வராமல் இருந்தேன் . மதியம் தான் ஒரு நண்பர் பத்திரிக்கைகளில் வந்த முதல் பக்க
பெரியார்:தினமணி எக்ஸ்பிரஸ் இந்து 
 

அயோக்கியத்தனத்தை அனுப்பி வைத்ததை பார்த்தேன் . கோபம் எனக்கு அதிமுகவின் மீதல்ல . அறம் என்பது மயிரளவிற்கும் இல்லாத கூட்டம் அது . பத்திரிக்கைகள் மீது தான். தினத்தந்தி, தினமலர், தினமணி,தமிழ்இந்து , The Hindu என்று அனைத்து பத்திரிக்கைகளிலும் ஒரேநாளில் செய்தி போல வருவதன் மூலம் ஒரு பொய்யை எல்லாவகையிலும் உண்மைபோல காட்டுவது மிக மிக கண்டிக்கதக்க அயோக்கியத்தனம்.
பத்திரிக்கை தர்மத்தின் கடைசிபக்கத்தையும் காற்றில் பறக்கவிட்ட மொள்ளமாறித் தனம். இதில் THE HINDU மீது எனக்கிருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போய்விட்டது .
பணத்திற்காக மலத்தை தின்னச் சொன்னாலும் தின்று செறிப்பார்கள். இதை தேர்தல் தந்திரம் என்று கடந்து செல்ல முடியுமா..? நாளை பிரதமர் இறந்துவிட்டார் என்று ஒரு பொய்யை விளம்பரம் என்று காசு கொடுத்தால் கூட செய்வார்களா..?
இதை நீதிமன்றம் சென்று அனைத்து பத்திரிக்கைகள் மீதும் வழக்கு தொடுக்கவேண்டும். திமுக அதை செய்யுமா என எனக்கு தெரியாது. ஆனால் தமிழ் வாசகனாக வாசகர்களை ஏமாற்றிய அனைத்து பத்திரிக்கைகளையும் தண்டிக்க மனம் துடிக்கிறது. அவ்வளவு வசதி இருந்தால் கண்டிப்பாக செய்திருப்பேன். செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த அயோக்கியத்தனத்தை இன்னொரு முறை செய்ய தயங்குவார்கள் வெட்கக் கெட்ட பத்திரிக்கை பன்றிகள்
இப்போது என்னால் இயல்வது எனக்குள் ஊறிய அத்தனை எச்சிலையும் சேர்த்து வைத்து காறித்துப்புவதே. இந்த பத்திரிக்கைகளை இனிமேல் என் வாழநாளில் நான் காணும் போதெல்லாம் மனமார துப்புவதும் அவற்றிற்கு மயிரளவிற்கு மரியாதை கொடாதிருப்பதும் தான் பத்திரிக்கைவாசக தர்மமாக கொள்வேன்.

கருத்துகள் இல்லை: