வியாழன், 8 ஏப்ரல், 2021

திராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்டுவிட்டது.

திராவிட அரசியல் வரலாறு பற்றிய அறிவு பட்டிதொட்டி எல்லாம் பரவவேண்டும் !

திராவிட அரசியல் சமூக நீதி சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களின் அன்றாட பேசுபொருளாக வேண்டும்
1967 இற்கு முன்பாக அப்படித்தான் இருந்தது . அதனால்தான் திராவிட இயக்கம் அரசியல் அரங்கில் அதிரடிகள் நிகழ்த்தியது
எம்ஜியாரின் அரசியல் ஆசைக்கு பின்பு அதில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டு விட்டது
அதன் விளைவாகத்தான் இன்று பார்ப்பனீயம் பார்ப்பனர்கள் அல்லாத மக்களிடம் வேரூன்றி உள்ளது
சீமானும் அர்ஜுன் சம்பத்தும் இதர ஜாதி அரசியல்வாதிகளும் வெறும் நோயின் அறிகுறிகளே.
நோயின் ஊற்று மக்களின் அறியாமையே! திராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்டுவிட்டது.
வெற்றிடம் வெற்றிடம் என்று கூறுகிறார்களே உண்மையில் வெற்றிடம் மக்களின் அறிவியலில் இருக்கிறது.
படிப்பறிவு இல்லாத சீமான் கூட்டம் ஒருபுறம் என்றால்
அதற்கு சற்றும் குறையாத ஒரு மேல்தட்டு  ஐ டி எஞ்சினியர் டாக்டர்கள் பேராசிரியர்கள் போன்ற தொழில் தகுதியை மட்டுமே கொண்ட பெரிய முட்டாள் கூடடம் மறுபுறமுமாக வளர்ந்துள்ளது   
புலம் பெயர் நாடுகளில் நான் சந்திக்கும் என் ஆர் ஐக்கள் பெருவாரியானோர் வெறும் பூச்சிகளாக உள்ளார்கள் இவர்கள்தான் பாஜக மற்றும் தமிழ் தேசிய வியாதிகளின் ரசிகர்கள் .
இவர்களோடு இந்திய தமிழக அரசியல் பேசும்பொழுது உண்மையில் பயமாக இருக்கிறது


பஞ்சாப் விவசாயிகள் சீனாவின் அடியாட்கள்  . நரேந்திர மோடியை பார்த்து உலகம் பிரமிக்கிறது சீமான்தான் அடுத்த தமிழ்நாடு முதல்வர்
இவர்களின் தலைக்குள் நுழைந்திருப்பது வெறும் ஜூனியர் விகடன் சுய சார்பு ரங்கராஜ் பாண்டேக்கள் கமலதாசன் போன்றவைதான்.
திராவிடம் என்று கூட இவர்கள் கூற மாட்டார்கள் திராவிடம் என்றாலே தவிர்க்கவே முடியாமல் ஒரு கேவலமான அழுக்கு சொல்லையும் சேர்த்தே சொல்வார்கள்  
அவ்வளவு தூரம் அறியாமை நோய் முற்றி போயிருக்கிறது     
இதற்காகவே அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு இயக்கத்தையே முன்னெடுக்கலாம் 

செல்லபுரம் வள்ளியம்மை

கருத்துகள் இல்லை: