திங்கள், 5 ஏப்ரல், 2021

இதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவில் முன்னிலை வகிக்கும் சென்னை, கோவை, சேலம்!

இதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவில் முன்னிலை வகிக்கும் சென்னை, கோவை, சேலம்!
kalaignarseithigal.com :அதிக பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்! .>சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, “நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், வாக்குச்சாவடி அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு என அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் 58 ஆயிரத்து 957 வாக்குப் பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாகவும், இவற்றில் மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 165 மிண்ணணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் பணிகளில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 551 ஊழியர்கள் பணிபுரிய இருப்பதாக தெரிவித்தார். காவல்துறை தரப்பில் இருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார். 50 சதவிகித வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை சிசிடிவி கேமராக்கள் மூலம் இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பணம், தங்கம், மது உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 428 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலானவை பறக்கும் படை சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் வாக்களிக்கக் கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கோப்புப்படம்

மாற்றுத்திறனாளிகள் தனி செயலி மூலம் வாக்களிக்க வசதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பணப்பட்டுவாடா புகார் எழுந்த சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவது தேர்தல் நடத்துவதை ஒத்திவைப்பது உள்ளிட்டவை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கிடைக்கக்கூடிய புகார்களின் தன்மையைப் பொருத்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தெரிவித்தார்

பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையிலும் இரண்டாம் இடத்தில் கோயம்புத்தூர் மூன்றாம் இடத்தில் சேலம் நான்காமிடத்தில் திருப்பூர் மாவட்டங்களில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: