புதன், 7 ஏப்ரல், 2021

தமிழகத்தில் 72.78 சதவிகிதம் , கேரளா 73.58 சதவீதம் , அசாம் 82.28சதவீதம் , மேற்கு வங்கத்தில் 77.68 சதவீத ஓட்டுப் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
latest tamil news

dinamalar :கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, 140 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், 73.58 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

பகலில் விறுவிறுப்பாக ஓட்டுப் பதிவு நடந்தது. மதியத்துக்குப் பின், பரவலாக மழை பெய்ததால், ஓட்டுப் பதிவில் தொய்வு ஏற்பட்டது. இந்தத் தேர்தலில், மொத்தம், 957 பேர் போட்டியிடுகின்றனர்.

அசாம்:   முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள அசாமுக்கு, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கு, 12 மாவட்டங்களில் உள்ள, 40 தொகுதிகளுக்கு, மூன்றாம் கட்டமாக, நேற்று தேர்தல் நடந்தது.ஒரு சில சிறு சம்பவங்களைத் தவிர, மாநிலம் முழுதும் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக தேர்தல் நடந்ததாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


மொத்தம், 82.28 சதவீத ஓட்டுகள் பதிவாயின. பல ஓட்டுச் சாவடிகளில், முதலில் ஓட்டுப் போட வந்தவர்களுக்கு, மரக்கன்றுகள் வழங்கப் பட்டன. சில இடங்களில் முதியோருக்கு, அசாமில் பிரபலமான, 'கமோசாஸ்' சால்வை பரிசாக வழங்கப்பட்டது.

மேற்கு வங்கம்:

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ள மேற்கு வங்கத்துக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

முந்தைய இரண்டு கட்டங்களைப் போலவே, மூன்றாம் கட்டத் தேர்தலிலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.இரண்டு பெண்கள் உட்பட, ஐந்து வேட்பாளர்கள், மாற்றுக் கட்சியினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள, 294 தொகுதிகளில், 30 தொகுதிகளில், நேற்று ஓட்டுப் பதிவு நடந்தது.

வன்முறைச் சம்பவங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மொத்தம், 77.68 சதவீத ஓட்டுகள் பதிவானதாக, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ''ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக, மத்தியப் படைகளும், தேர்தல் கமிஷனும் செயல்படுகின்றன,'' என, மம்தா பானர்ஜி மீண்டும் குற்றஞ்சாட்டினார்

கருத்துகள் இல்லை: