சனி, 10 ஏப்ரல், 2021

எங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்பூர் ராஜு!

'' Our alliance will win '' - Minister Kadampur Raju!
nakkeeran : தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியே வெற்றிபெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளதாவது, ''அதிமுக 140 இடங்களில் வெற்றிபெறும், அதிமுக கூட்டணி மொத்தமாக எல்லாம் சேர்த்தால் 190 இடங்களில் வெற்றிபெறும். எங்களுக்கு இரட்டை தலைமை பழகிவிட்டது. இரட்டை தலைமை என்பது கூடுதல் பலம்தான்'' என்றார்.

கருத்துகள் இல்லை: