ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

இன்று இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் பிரச்சாரம்!

May be an image of 1 person, standing and outdoors
Dr,அரியலூர் அனிதா

நக்கீரன் : தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடக்கும் நிலையில், இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
பிரச்சாரத்திற்காக வந்த வெளி மாவட்ட கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது....
சொந்த தொகுதிகளில் தலைவர்கள் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரம்!....
கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று (04/04/2021) தங்களது சொந்த சட்டமன்றத் தொகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியிலும்,  

அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிலும்,
அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியிலும்,


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியிலும்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
..அதேபோல், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று (04/04/2021) நிறைவு செய்கிறார். 

 

2017 அரியலூர் அனிதா
2018 சென்னை ஏஞ்சலின்
2018 திருச்சி சுபஸ்ரீ
2018 விழுப்புரம் பிரதிபா
2019 தஞ்சை வைஷ்யா
2019 திருப்பூர் ரிதுஸ்ரீ
2019 விழுப்புரம் மோனிஷா
2020 கோவை சுபஸ்ரீ
2020 மதுரை ஜோதிஸ்ரீ துர்கா
2020 அரியலூர் விக்னேஷ்
2020 தருமபுரி ஆதித்யா
2020 திருச்செங்கோடு மோதிலால்
2021 நீட் கொலைகள் நடப்பதற்குள்,
நீட் தடை செய்யப்பட வேண்டும். தமிழக பினாமி பாஜக(அதிமுக) அரசு அகற்றப்பட வேண்டும்.
பெண்கள் சமவுரிமையை நோக்கி போகவேண்டுமானால் அவர்கள் வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒரு ஆட்சியை தேர்தெடுக்கவேண்டும்.
யோசித்துப்பாருங்கள். திமுகவிற்கு தான் வாக்களிக்கவேண்டும்.
ஆதரிப்போம் உதயசூரியனை....

 

May be an image of text that says 'அழிந்த பிறகு சிந்தித்து பயனில்லை. சௌகார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஏற்கனவே குஜராத்தி மார்வாடிகள் கையில் மாறிவிட்டது. ஆவடியில் மாஃபா இந்தியில் ஓட்டு கேட்கிறான். கோவையில் வானதியுடன் பிரச்சாரம் செல்வது பிரச்சார செலவு செய்வது அனைத்தும் வடகத்தியன். மீண்டும் கூறுகிறேன் அழிந்த பிறகு சிந்தித்து பயனில்லை.'

கருத்துகள் இல்லை: