சனி, 29 ஏப்ரல், 2017

ஜெயாவின் வாகன ஓட்டுனர் கனகராஜ் மரணம் .... வீதி விபத்தாம் ?

எடப்பாடியை சேர்ந்த கனகராஜ் ஜெயலலிதாவிடம் 2 வருடங்களாக கார் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது ஜெயலலிதாவுடன் அடிக்கடி கொடநாடுக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது..
கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொடூரமாக கொலை தொடர்ந்து கனகராஜ் சரண் அடைய முடிவு செய்து நேற்று இரவு மோட்டார் சைக்கிளை சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசாரிடம் சரண் அடைய சென்றார்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுகார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். பலியான கனகராஜூக்கு கலைவாணி என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.அவரது உடலை கைப்பற்றிய போலீசார் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனி சாமி ஒரு வாரம் சேலத்தில் தங்கி உள்ள நிலையில் சரண் அடைய வந்த போது நடந்த கொலையா அல்லது கொன்று விட்டு விபத்து ஜோடிக்கப்பட்டு உள்ளதா என்ற பலவாறு பேசுகிறார்கள் அப்பகுதி மக்கள் ..
ஆத்தூர்: கோடநாடு எஸ்டேட் வழக்கில் சம்பந்தப்பட்ட கனகராஜூவை மர்ம கும்பல் துரத்தி வந்ததா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தலைமறைவாக இருந்து வந்த கனகராஜ் இடைப்பாடியில் இருந்து காரில் வந்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பரின் டூ வீலரில் (பதிவெண் இல்லை ) பயணித்து வந்துள்ளார். இவரை சில மர்ம கும்பல் துரத்தி வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது போலீஸ் படையினர் விரட்டி பிடிக்க முன்வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கனகராஜ் விபத்து நடந்த இடம் ஒரு விபத்துக்கான இடமே இல்லை என்றும் கூறப்படுகிறது. சிலர் துரத்துவதால் கனகராஜ் படு வேகத்தில் வந்திருக்கலாம். இதனால் எதிரே வந்த கார் மீது மோதியிருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டது தொடர்பாக கேரள மாநிலம், வயநாடு, மலப்புரம், திருச்சூர் பகுதியை சேர்ந்த அவர்கள் விரைவில் கோவை அழைத்து வரப்பட உள்ளனர். விரைவில் கைது: காவலாளி கொலை தொடர்பாக மாவட்ட எஸ்.பி., முரளி லம்பா கூறியதாவது: காவலாளி கொலை தொடர்பாக அனைவரையும் கைது செய்ய வேண்டியுள்ளதால், ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.  தினகரன்

கருத்துகள் இல்லை: