


மொத்தமா அவங்க கட்டுப்பாட்டுல போயிடுச்சு...’ என்று சொல்லியிருக்கிறார். ‘போட்டோவை தூக்கினா தூக்கிட்டு போகட்டும். இதுக்கெல்லாமே காரணம், தினகரன்தான்!’ என்று சசிகலா சொன்னதாக சொல்கிறார்கள். அடுத்த கட்டமாக என்ன செய்வதென புரியாத குழப்பத்தில்தான் சசிகலாவும் இருக்கிறார்.”
தொடர்ந்து வாட்ஸ் அப்பில் அடுத்த மெசேஜ்ஜும் வந்தது. “கைது செய்யப்பட்ட தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எடப்பாடி அணியையும், பன்னீர் அணியையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை இன்னும் முடிவை எட்டாத சூழ்நிலையில் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார். ’தினகரனை நாம் ஏற்கெனவே கட்சியிலிருந்து விலக்கி வைப்பதாக அறிவித்துவிட்டோம். இப்போது அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுவிட்டார். இனி அவரைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. தினகரன் குடும்பத்தை நாம் விலக்கி வைப்பதாக அறிவிச்சதே பொதுமக்களிடம் நல்ல பெயரை உண்டாக்கி இருக்கு. பன்னீர் தரப்பில் உப்பு சப்பில்லாத காரணங்களை எல்லாம் சொல்லி பேச்சுவார்த்தையை தள்ளிப் போடுறாங்க. அவங்க சொல்ற மாதிரி முதல்வர் பதவியை நாம் விட்டுத்தரக் கூடாது. துணை முதல்வர் என்பதுதான் சரியாக இருக்கும்..’ என்று தங்கமணி சொல்லியிருக்கிறார். பன்னீர் தரப்பிலும் பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. எல்லோரும் தினமும் காலை 11 மணிக்கு பன்னீர் வீட்டுக்கு வருகிறார்கள்.

“டிடிவி தினகரன் மனைவி அனுராதா ஜெயா டிவிக்கு போவதும் வருவதுமாக இருந்தார். தினகரனுக்கு சிக்கல் வந்த பிறகு அனுராதா அந்தப் பக்கம் போகவில்லை. வீட்டிலிருந்தபடியே ஜெயா டிவிக்கு பேசுவதும் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பதுமாக இருந்தார். தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக அறிவித்த பிறகு, அனுராதாவிடம் இருந்து ஜெயா டிவிக்கு போன் வந்திருக்கிறது. ‘ஆட்சியும் கட்சியும் நல்லா இருக்கணும்னா சின்னமா பொதுச் செயலாளராக இருக்கணும். தினகரன் துணைப் பொதுச் செயலாளராக இருக்கணும் என்று தமிழ்நாடு முழுக்க கட்சி நிர்வாகிகளிடம் பேட்டி வாங்கச் சொல்லுங்க. அதை திரும்பத் திரும்ப ஒளிபரப்புங்க...’ என்று சொல்லி இருக்கிறார். ஜெயா டிவி அலுவலகத்தில் இருந்து நிருபர்களுக்கு தகவல் சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால், முக்கிய நிர்வாகிகள் யாரும் அப்படி பேட்டி கொடுக்கவே இல்லையாம். பேருக்காக ஆட்களை பிடித்து பேட்டி எடுத்து அனுப்பி இருக்கிறார்கள் ஜெயா டிவி செய்தியாளர்கள். அந்த பேட்டிகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி அனுராதா பார்வைக்கு அனுப்பிய பிறகு, ஒளிபரப்பி வருகிறார்களாம். தினகரன் சிறைக்கு சென்றுவிட்டார். இனி அனுராதாவிடமிருந்து வரும் உத்தரவுகளை பின்பற்றலாமா, என ஜெயா டிவி ஊழியர்கள் சற்று குழப்பத்தில்தான் இருக்கிறார்களாம்”மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக