சேரணும்னு பேச்சு ஓடிக்கிட்டே இருக்கணும், ஆனா சேரக்கூடாது..... பிஜேபி எப்போ சொல்லுதே அப்போ தான் பேச்சு வார்த்தை நடக்கும்...
செம்மலை பேசியதாவது:தற்போதுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களை வைத்து, நல்லாட்சி தர முடியாது. தற்போது நடக் கும் அலங்கோலமான ஆட்சியால், செயல்பட முடி யாத அளவுக்கு, சிலரின் பிடியில் சிக்கி, முதல்வர் பழனிசாமி தவிப்பதால், அரசியலிலும் மாற்றம் தேவை. வெளிப்படையான நிர்வாகத்தை, பன்னீரால் மட்டுமே தர முடியும். விமர்சனங்கள் வந்துவிட கூடாது என்பதற்காக,குழு அமைத்தோம். ஆனால், வார்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கட்சியி னரை வளைக்கும் சூழ்ச்சி நடக்கிறது. அதற்கு, யாரும் பலிகடா ஆக மாட்டார் கள். இவ்வாறு அவர் பேசினார். நியமனத்தையே ஏற்காத போது, அவரால் நியமிக்கப்பட்ட முதல்வர் பழனிசாமியை, எங்களால் எப்படி ஏற்க முடியும். ஜெ., மர்மத்தை கண்டறிய, சி.பி.ஐ., விசாரணை கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.
சசிகலா உட்பட, அவரது குடும்பத்தினர் எல்லாரையும், கட்சியில் இருந்து நீக்கிய பின்னே, பேச்சை துவக்குவோம். கட்சி தலைமைக்கும், பதவிக்கும் நல்லவர்கள் வர வேண்டும். அவர்களை வழிநடத்தும் தகுதி, பன்னீருக்கு மட்டுமே உண்டு. இவ்வாறு அவர் கூறினார். தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக