புதன், 26 ஏப்ரல், 2017

குற்றவாளிகளை 'காட்டி கொடுத்த ஜெ., அறை... கோடநாடு காவலாளி கொலையில் திடீர் திருப்பம்

கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில், திடீர் திருப்பமாக, போலீசாருக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. காயத்துடன் உயிர் தப்பிய காவலாளி, கிருஷ்ண பகதுாரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெ.,க்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இதன் காவலாளி ஓம்பகதுார், நேற்று முன்தினம் அதிகாலை, மர்ம நபர்களால் அடித்து கொல்லப்பட்டார். உடன் வேலை செய்யும் காவலாளி கிருஷ்ண பகதுார், 35, என்பவர் காயத்துடன் தப்பினார். இவர் அளித்த வாக்குமூலத்தில், '10க்கும் மேற்பட்ட முகமூடி ஆசாமிகள், ஓம் பகதுாரை அடித்து கொன்று, என்னையும் தாக்கினர்; நான் மயங்கி விட்டேன்' என, கூறினார்.


சம்பவ இடத்தை பார்வையிட்ட கோவை ஐ.ஜி., பாரி, டி.ஐ.ஜி., தீபக் தமோர், நீலகிரி எஸ்.பி., முரளி ஆகியோர், எஸ்டேட்டில் உள்ள ஜெ., பங்களாவை ஆய்வு செய்தனர். இரு அறை களின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டிருந் தன.தடயங்கள் சிக்கின: நீலகிரி மாவட்ட தடய அறிவியல் துறையினர், காவலாளி கொல்லப் பட்ட இடத்தில் படிந்திருந்த ரத்தக்கறை மாதிரி கள், பங்களா அறைகளின், ஜன்னல் கண்ணாடி களை உடைத்த இடத்தில் படிந்திருந்த ரத்தக் கறைகள், விரல் ரேகை பதிவுகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்து, ஆய்வுக்கு அனுப்பினர்.

இதற்கிடையே, முகமூடி ஆசாமிகளின் தாக்கு தலில் காயமடைந்து தப்பியதாக கூறப்படும்
கிருஷ்ண பகதுாரை, சம்பவ இடத்துக்கு அழைத்து சென்று, 'என்ன நடந்தது' என்பதை விளக்குமாறு போலீசார் உத்தரவிட்டனர். அவரும், கொலை நிகழ்ந்த நாளில் நடந்த சம்பவத்தை அப்படியே நடித்து காட்டினார். தான் ஒன்பதாம் எண் நுழைவாயிலில் இருந்த தாகவும், 10ம் எண் நுழை வாயில் பணியில் இருந்த ஓம்பகதுாரின் கதறல் கேட்டு ஓடி வந்ததாகவும், அப்போது அங்கு அவரை தாக்கியமுகமூடி அணிந்த நபர்கள், தன்னையும் தாக்கியதாக கூறினார்.

இங்கு தான் போலீசாருக்கு இடித்தது. இரு நுழை வாயில்களுமே மிகமிக அருகில் உள்ள நிலையில், வாகன போக்குவரத்தோ, ஆள் நடமாட்டமோ அறவே இல்லாத அதிகாலை நேரத்தில், 'இரு வாகனங்கள் வந்தது தெரியாது' எனக்கூறிய இந்த நபர், ஓம்பகதுாரின் கதறல் கேட்டே தான் அங்கு ஓடியதாகவும் தெரிவித்ததை, போலீஸ் அதிகாரி களால் நம்ப முடியவில்லை. இதையடுத்து, கிருஷ்ண பகதுாரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று, ரத்த மாதிரி சேகரித்து, ஒப்பீட்டு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கேமரா ஆய்வு:

கோடநாடு செல்லும் சாலை மற்றும் நீலகிரி மாவட்ட எல்லை சாலைகளில் பல்வேறு நிறுவனங் கள் உள்ளன. இவற்றின் சார்பில், சி.சி.டி.வி., கேமராக்கள் ஆங்காங்கு நிறுவப்பட்டுள்ளன. 22ம் தேதி இரவு முதல் மறுநாள் வரை பதிவான காட்சிகளை கைப்பற்றியுள்ள போலீசார், சந்தேக வாகன பட்டியலை தயாரித்து, உரிமையாளர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர்கூறியதாவது: காயத்துடன் தப்பியதாக கூறப் படும் காவலாளி மீதும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. இந்நபரே முன்விரோதம் காரணமாக, சக காவலா ளியை கொலை செய்துவிட்டு, கொள்ளை முயற்சி நாடகமாடுகிறாரா அல்லது வெளியில் இருந்து வந்த முகமூடி கும்பலுக்குதுணை புரிந்தாரா, என்ற யூகத்தின் அடிப்படையிலான சந்தேகங்களும் உள்ளன; இதையும், உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது. கிருஷ்ண பகதுாரின் ரத்த மாதிரி யும், ஜெ., அறையின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்ட இடத்தில் படிந்திருந்த ரத்தக்கறை படிம மாதிரியும், ஆய்வகத்தின் பரிசோதனையில் ஒத்துப்போகும் பட்சத்தில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைது செய்வதில் சிரமம் இருக்காது.

அதற்கு வாய்ப்பில்லை என்றால், வேறு கோணங்களிலும் விசாரணை தொடரும். குற்ற வாளிகள், விரைவில் அடையாளம் காணப் பட்டு கைது செய்யப்படுவர்.

குற்றவாளிகளால் உடைக்கப்பட்ட அறைகளின் நுழைவுக் கதவுகள் மிக உறுதியானவை. வலு வான ஆயுதமின்றி எளிதில் உடைத்துவிட முடியாது. ஆனால், அவையும் இரும்பு கடப் பாரை போன்ற பொருளால் நெம்பி உடைக்கப் பட்டிருக்கிறது. என்ன பொருள் கொள்ளை போனது என்ற விபரங்கள் எல்லாம், குற்ற வாளிகள் பிடிபட் டால் மட்டுமே தெரிய வரும்.

ஜெயலலிதா இறந்து, நான்கு மாதங் களுக்கு மேல் ஆன நிலையில், முக்கிய ஆவணங்கள் பங்களாவில் வைக்கப்பட்டிருக் குமா, அவற்றை திருடி செல் லும் நோக்கில் கொலை நடந்திருக்குமா, என்பதெல்லாம் யூகங்களின் அடிப்படையி லான சந்தேகங்களே. எல்லாவற் றிற்கும் விரைவில் விடை தெரியும்.இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். - நமது நிருபர் -  தினமலர்

கருத்துகள் இல்லை: