புதன், 26 ஏப்ரல், 2017

விவசாயத்துக்கு வருமான வரி விதிக்கும் யோசனையில் மத்திய அரசு ?

மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது பொருளாதாரச் சர்வே வரி விதிக்கப்படாது வருமான வரி வரம்பு மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்டெல்லி: விவசாயம் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசுக்கு இன்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய்ப் பரிந்துரைத்துள்ளார். இந்தச் செய்து ஊடகங்களுக்குக் கிடைத்ததை அறிந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார். வருமான வரிச் செலுத்துபவர்களை மேலும் அதிகரிக்கும் விதமாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் கிராமம் மற்றும் நகர வாழ்க்கையில் நாம் எந்த வித்தியாசமும் பார்க்கக் கூடாது என்றும் விவசாயத்தில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கும் வரி விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்து இருந்தார். டிவிட் இந்தச் செய்து ஊடங்களுக்கு வெளியாகிய உடனே மறுப்பு தெரிவித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மத்திய அரசுக்கு விவசாயம் மூலமாகப் பெறப்படும் வருவாய்க்கு வரி விதிக்கும் எந்த எண்ணமும் இல்லை என்று டிவிட் செய்தார்.
அரசியலமைப்பின் அதிகார ஒதுக்கீட்டின் படி, விவசாய வருவாய்க்கு வரி விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் தெளிவு படுத்தினார்.
அருண் ஜேட்லி இதற்கு முன்பே மார்ச் 22-ம் தேதி அன்று விவசாய வருவாய்க்கு வரி கிடையாது என்றும், வரி விதிக்கப்படாது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாய வருவாய்க்கு வரி விதிப்பது அரசியல் ரீதியாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதனால் மத்திய அரசு இதனை அனுமதிக்காது என்றும் கூறப்படுகின்றது.

2017 பட்ஜெட் கூட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமாக வரியைக் குறைத்தும், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வரி மற்றும் 12,500 ரூபாயும், 10 லட்சத்திற்கு அதிகமாக வரி செலுத்துபவர்களுக்கு 30 சதவீதம் வரி மற்றும் 1,12,500 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் அருண் ஜேட்லி அறிவித்து இருந்தார்.

 நிதித்துறை ஆலோசகர் அரவிந்த சுப்பிரமணியன் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை உயர்த்த விவசாயத்தின் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்று பொருளாதாரச் சர்வேயில் கூறியிருந்தார். மேலும் இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து விவசாயத்தில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி: விவசாயம் மூலம் பெறப்படும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை மத்திய அரசுக்கு இன்று நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய்ப் பரிந்துரைத்துள்ளார். இந்தச் செய்து ஊடகங்களுக்குக் கிடைத்ததை அறிந்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அதற்கு உடனே மறுப்பு தெரிவித்தார்.
வருமான வரிச் செலுத்துபவர்களை மேலும் அதிகரிக்கும் விதமாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் டெப்ராய் கிராமம் மற்றும் நகர வாழ்க்கையில் நாம் எந்த வித்தியாசமும் பார்க்கக் கூடாது என்றும் விவசாயத்தில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கும் வரி விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்து இருந்தார்.

"இந்தச் செய்து ஊடங்களுக்கு வெளியாகிய உடனே மறுப்பு தெரிவித்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மத்திய அரசுக்கு விவசாயம் மூலமாகப் பெறப்படும் வருவாய..."
வரி விதிப்பது அரசியல் ரீதியாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதனால் மத்திய அரசு இதனை அனுமதிக்காது என்றும் கூறப்படுகின்றது. 2017 பட்ஜெட் கூட்டத்தில் 2.5 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதமாக வரியைக் குறைத்தும், 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 20 சதவீத வரி மற்றும் 12,500 ரூபாயும், 10 லட்சத்திற்கு அதிகமாக வரி செலுத்துபவர்களுக்கு 30 சதவீதம் வரி மற்றும் 1,12,500 ரூபாயும் செலுத்த வேண்டும் என்றும் அருண் ஜேட்லி அறிவித்து இருந்தார்.  tamiloneindia

கருத்துகள் இல்லை: