வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது வசித்து வரும் இந்தியர்களுக்கு,
இந்தியாவில் ஏதேனும் கல்யாணம் அல்லது விழாக்களுக்கு வரும் போதும் ஏர்போர்ட்
கஸ்டம்ஸ்-களில் அதிகத் தங்கம் மற்றும் தங்க நகைகளை வைத்திருப்பதற்காக
என்ஆர்ஐ-கள் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர்.
இதேபோல் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கும்
இதேபோன்ற நிலைதான். இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்
மத்திய அரசு தற்போது உள்ள கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளை அறிவிக்க
உள்ளது.
இதன் மூலம் என்ஆர்ஐ-கள் எவ்வளவு தங்க நகைகள் வேண்டும் என்றாலும் கொண்டு
வரலாம்.
மத்திய அரசு
பர்சனல் பேகேஜ்-களில் அதிகளவில் தங்க கடத்துப்படுவதால் மத்திய கலால்
மற்றும் சுங்க வரித்துறையினர், கடத்தலைத் தடுப்பதற்காகக் கடுமையாகக்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கட்டுப்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்காமல், என்ஆர்ஐ-கள் தங்களது பிர்சனல் பேகேஜ்-களில் சொந்த உபயோகத்திற்காகக் கொண்டு வரும் நகைகளின் அளவுகளில் தனிப்பட்ட வரைவுகள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தற்போதுள்ள கட்டுப்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்காமல், என்ஆர்ஐ-கள் தங்களது பிர்சனல் பேகேஜ்-களில் சொந்த உபயோகத்திற்காகக் கொண்டு வரும் நகைகளின் அளவுகளில் தனிப்பட்ட வரைவுகள் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
என்ஆர்ஐ
இதன் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்வோரும்,
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவரும் எவ்விதமான கஸ்டம்ஸ்
நெருக்கடிகள் இல்லாமல் தங்க நகைகளைக் கொண்டு வர முடியும்.
நிதியமைச்சகம்
இப்புதிய கட்டுப்பாடுகள் தளர்வுகளை அறிவிக்க மொத்த கட்டுப்பாடுகளையும்
ஆராய்ந்து வருகிறோம். இதன் மூலம் என்ஆர்ஐ-கள் தங்களது சொந்த
உபயோகத்திற்காகக் கொண்டு வரப்படும் நகைகளுக்கான கட்டுப்பாடு இருக்காது
வர்த்தகம்
இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும் மத்தியிலான வர்த்தக வாய்ப்புகளை
அதிகரிக்கும் ஒரு முயற்சியாக மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறையினர்
இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதேபோல் Food Safety and Standards Authority of India என்னும் FSSAI
அமைப்பு பன்னாட்டு வர்த்தகத்தில் இருக்கும் தேவையற்ற தடைகளைத்
தளர்த்துள்ளது.
கடத்தல்
மத்திய அரசு நாட்டில் தங்க இறக்குமதியைக் குறைப்பதற்காகப் பயணிகள் கொண்டு
வரும் அதிகப்படியான தங்கத்தின் மீது 15 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதன்
பின் நாட்டில் தங்கம் சார்ந்த கடத்தல் அதிகரித்துள்ளது காணப்படுவதாகச்
சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
கல்யாணம் மற்றும் விழா
இது கல்யாணம் மற்றும் விழாக் காலங்களுக்கு இந்தியா வரும் என்ஆர்ஐ-களுக்கு
மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. எனவே இப்பிரச்சனையை முழுமையாகக்
களைய மத்திய அரசு புதிய கட்டுப்பாடு வரைவுகளை அமைக்க உள்ளது.
மேலும் இந்தத் தளர்வுகளைப் பெறுவதற்குச் சில முக்கியப் படிவுகளை நிரப்ப
வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
விரைவில்
கூடிய விரைவில் இந்தத் தளர்வுகளை மத்திய கலால் மற்றும் சுங்க வரித்துறை வாயிலாக நிதியமைச்சகம் வெளியிடும்.
Read more at: //tamil.goodreturns.in
Read more at: //tamil.goodreturns.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக