vikaran.com மர்ம
கண்டெய்னர்களும் அதில் இருந்த 570 கோடி ரூபாய் யாருடையது என்ற ரகசியமும்
தொடர்கின்றன. கோவை தீயணைப்புத் துறைக்கு எதிரே உள்ள ஸ்டேட் பாங்க்
அலுவலகத்திற்குள் சரியாக காலை 6.45 மணிக்கு வந்தடைந்தது. அவற்றை
பின்வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு பணத்தை எண்ணத் தொடங்கிவிட்டது மத்திய
அரசின் வருமான வரித்துறை.உண்மையில்
570 கோடி ரூபாய் விவகாரத்தில் என்னதான் நடந்தது என ஸ்டேட் வங்கி அதிகாரி
களைக் கேட்டோம்.
""ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்பது இந்தியாவில் மட்டுமல்ல... 36 வெளிநாடு களில் இயங்கும் நம் நாட்டு வங்கி. இந்த வங்கிதான் தமிழகத்தில் மாநில அரசாங்கத்தின் கணக்குகளைப் பராமரிக்கிறது. தமிழக அரசு திட்டங்களுக்குத் தேவையான நிதி இந்த வங்கி மூலம்தான் தரப்படு கிறது. ஊழல், லஞ்சம் எதுவாக இருந்தாலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உதவி இல்லாமல் தமிழக அரசில் எதுவும் நடக்காது.
ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய கம்பெனிகள் பல ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் உதவியுடன் தான் இயங்கின. இப்படி சர்வதேச அளவில் தொடங்கி தமிழ்நாடு அரசைத் தொட்டு ஜெ.வுக்கு நெருக்கமாக இயங்கும் வங்கிதான் இந்த வங்கி. 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய குற்றச் சாட்டுக்குள்ளான விஜய் மல்லையாவுக்கு அதிக கடன் கொடுத்த வங்கி இந்த வங்கிதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
;அதேபோல் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் வங்கி என முத்திரை குத்தப்பட்டுள்ள வங்கிகளில் இதுவும் ஒன்று. வங்கி வட்டாரத்தில் பெரிதும் விவாதிக் கப்படும் வங்கிகள் இணைப்பு என்பதில் தொடர் புடையதும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாதான்.t;">மிகவும் நஷ்டத்தில் இயங்கும் இந்த வங்கி யோடு சில வங்கிகளை இணைக்க இந்திய நிதி யமைச்சர் அருண்ஜெட்லி முன் மொழிந்திருக்கிறார். இப்படி ஜெ., ஜெட்லி ஆகிய இருவரு டன் நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த வங்கியின் இயக்குநர்கள் குழுமம் நினைத் தால் எது வேண்டுமென்றாலும் நடக்கும். அது எப்படி வேண்டு மென்றாலும் நடக்கும்'' என்ற அவர்கள் 570 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக சில ஆவணங்களையும் கொடுத்தார்கள்.

அதில் இடம்பெற்ற முதல் கடிதம் இந்தப் பண பரிமாற்றம் பற்றிய உண்மையை விளக்குகிறது.
(ஆவணம் : 1);;ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னம் பாலாஜி நகரில் இயங்கும் சிறப்பு பண சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவசர அவசர மாக ரூ.570 கோடி அனுப்பப்பட்டது என்கிற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வின் விளக்கத்தை பொய் என காட்டு கிறது
/மே மாதம் 6-ந் தேதி அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாகத்தான் 11-ஆம் தேதி தே.சூரிகுமார் ரெட்டி என்கிற அதிகாரியை கோவைக்கு அனுப்பி வைத்ததாகவும் 2-ஆவது கடிதம் சொல்கிறது. ;
(ஆவணம் : 2) 11-ஆம் தேதி வரவேண்டிய சூரிகுமார் ரெட்டி 13-ஆம் தேதி நள்ளிரவு ஏன் வந்தார். 2 நாள் தாமதத்திற்கு என்ன காரணம்? கடந்த மார்ச் மாதம் பணம் வேண்டும் என விசாகப்பட்டினம் கிளை கடிதம் அனுப்புகிறது. அதற்கு மே மாதம் 6-ந் தேதி ""நாங்கள் தயார், நீங்கள் கேட்ட தொகையை அனுப்புகிறோம்'' என கோவை கிளை சொல்கிறது. அதைப் பெற்றுக்கொண்டு விசாகப்பட்டினம் செல்ல 11-ஆம் தேதி அனுப்பப்பட்ட சூரிகுமார் ரெட்டி 2 நாட்கள் தாமதமாக அந்தப் பணத்தை 3 கண்டெய்னர் லாரிகளில் சீல் வைக்கப்படாத பூட்டுகளுடன் லுங்கி அணிந்த போலீசாருடன் ஏன் செல்ல வேண்டும்? அந்த லாரியில் இடம்பெற்ற போலீசார் உண்மையான போலீசாரா? அப்படி அவர்கள் உண்மையான ஆந்திர மாநில காவலர்களாக இருந்தாலும் வாடகை போலீசார் அழைத்து வரப்பட்டிருக்கலாம் அல்லவா? இந்த சந்தேகத்துடன்தான் வருமானவரித்துறை, அவர்களை கேள்வி கேட்கத் தொடங்கியது எனச் சொல்லும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு அதிர்ச்சிகரமான ஆவணத்தை நமக்கு அளித்தார்கள். (ஆவணம் : 3)அந்த ஆவணத்தில் 3 கண்டெய்னர்களில் 1,000 ரூபாய் நோட்டுகள் 2,000 பண்டல்கள், 500 ரூபாய் நோட்டுகள் ஒரு லட்சத்து ஆயிரம் பண்டல்கள், 100 ரூபாய் நோட்டுகள் 45,000 பண்டல்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 48,000 பண்டல்கள் அனுப்பப்பட்டன.
இந்த கண்டெய்னர் லாரிகள் எல்லாம் கரூர் அன்புநாதனின் ஏற்பாட்டில் வந்த திருட்டு நம்பர் பிளேட் லாரிகளாக இருக்கும் என சந்தேகப்படுகிறோம். இதைப் பற்றி விசாரித்தால் மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரும்'' என்கிறார்கள்.
லாரிகளின் டிரைவர் களாக வந்த வடநாட்டு வாலிபர்களுக்கு தமிழக போலீசார் ராயல் சல்யூட் அடித்து சாப்பாடு, சரக்கு என வாங்கிக் கொடுத்து அந்தப் பகுதி மக்களிடம் பேசாதே என மறைத்து வைத்து உபசரித் தது பல சந்தேகங்களை உருவாக்குகிறது'' என்கிறார் கள்.தாமோதரன் பிரகாஷ், அருள்குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக