
லக்னோ
- உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பாபா
பரமானந்த சாமியார், 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இங்கு வந்து ஆசிரமம்
தொடங்கினார். இவர் பல்வேறு நோய்களை குணமாக்குவதாகவும், இவரிடம் ஆசி
பெற்றால் பல்வேறு பிரச்சினைகள் தீருவதாகவும் பல்வேறு தகவல் பரவியது.
இதனால், ஏராளமான பக்தர்கள் இவரது ஆசிரமத்துக்கு படை எடுத்தனர். மேலும்
குழந்தை இல்லாத பெண்கள் இவரிடம் ஆசி பெற்றால் குழந்தை கிடைப்பதாகவும், பெண்
குழந்தைகள் மட்டுமே பிறக்கும் பெண்ணுக்கு இவருடைய ஆசியால் ஆண் குழந்தை
பிறப்பதாகவும் கூறப்பட்டது.
இதை
அறிந்ததும் அவர் இரவோடு இரவாக ஆசிரமத்தில் இருந்து தப்பி சென்று விட்டார்.
போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர். அவர் மத்திய பிரதேச மாநிலம் சத்னா
என்ற இடத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவரை
கைது செய்தனர். பின்னர் அவரை அங்கிருந்து பாரபங்கிற்கு அழைத்து வந்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்த போது ஆசிரமத்துக்கு குழந்தை வரம் கேட்டு வந்த
பெண்களை ஏமாற்றி அவர்களை கற்பழித்ததாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை
இவ்வாறு கற்பழித்திருப்பதாகவும் அவர் கூறினார். சாமியாரை கைது செய்த அதே
நேரத்தில் போலீசார் அவரது ஆசிரமத்தில் சோதனையிட்டனர். அப்போது ஏராளமான ஆபாச
படங்கள் ஆசிரமத்தில் சிக்கின. இவற்றில் 8 சிடிகளில் சாமியார் மற்ற
பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் படங்கள் பதிவாகி இருந்தன.
மற்ற
சிடிக்களில் வேறு ஆண், பெண்களின் ஆபாச காட்சிகள் இருந்தன. சாமியார்
பெண்களுடன் இருந்த ஆபாசமாக இருந்த காட்சிகளை ரகசிய வீடியோ கேமரா மூலம் படம்
பிடித்ததாக சாமியார் கூறி உள்ளார். அவரது அறையில் மேல் பகுதியில் வீடியோ
கேமராவை பொருத்தி வைத்து இருந்ததாகவும், அதன் மூலம் இந்த காட்சிகளை படம்
பிடித்ததாகவும் அவர் கூறினார். ஒரு முறை சாமியாரால் கற்பழிக்கப்பட்ட பெண்
மறு தடவையும் தன்னுடன் வருவதற்கு தயங்கினால் ஆபாச படத்தை வெளியிட்டு
விடுவேன் என கூறி அவர்களை மிரட்டி மீண்டும், மீண்டும் கற்பழித்து உள்ளார்.
சாமியார் தற்போது 3 பெண்கள் கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில்
அவர் மீது 12 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். நேற்று சாமியார் பாரபங்கி
கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.
அதை
தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. மீண்டும் அவரை காவலில்
எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது இன்னும் ஏராளமான
தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாமியாரை கைது செய்த போது
அவருடன் அவருடைய சிஷ்யர் அரவிந்த் என்பவரும் உடன் இருந்தார். அவரையும்
போலீசார் கைது செய்து உள்ளனர். இதற்கிடையே சாமியாரின் முன்னாள் டிரைவர்
சுசில் அவாஸ்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் சாமியார் பெண்களை
கற்பழித்தது உண்மை என்று கூறி இருப்பதுடன் அவரது செயலுக்கு அவரது மகன்
மற்றும் மருமகள் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தினபூமி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக