இதிலும் அவர் ஜனவரி 2014-வரை 40 லட்சம் கட்டிவிட்டார். அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டி, 26 மாதத்தில் 75 லட்சத்துக்கு மேல் கட்டி விட்டார். மாதச்சம்பளம் 75,300 ரூபாய் மட்டுமே வாங்கிக்கொண்டு, எப்படி இதனைச் செய்ய முடியும் என்று சிந்திப்போர்கள் சிந்திக்க.. 2009-2014-ல் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை சராசரியாக 13.6% உயர்ந்துள்ளது. ஆனால் இத்தகைய பிரவீன்குமாரர்கள் காலத்தில்தான் தமிழகத்தில் மட்டுமே 29.1% என ஒரேயடியாக உயர்ந்துள்ளது. அதாவது 1.21 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அதிசயம் வேறு எந்த மாநிலமும் காணாத அசுரத்தனமான வளர்ச்சி. வாக்காளர்கள் அதிகம் ஆக... ஆக... அ.தி.மு.க.ஜெயிக்கும் நிலையினைக் காணமுடிகிறது. ஆனால் வாக்காளர்கள் சேர்க்கையும் National census data-வுடன் ஒத்துப்போக (TALLY) மறுக்கிறது. அப்படியானால் எந்த அடிப்படையில் இந்த அசுரத்தனமான வாக்காளர் சேர்க்கை சாத்தியம் ஆயிற்று.
;2011-ல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் சிறுகச் சிறுக அ.தி.மு.க. ஏன் கவனமாக வாக்காளர் சேர்ப்பு செய்யவேண்டும். தேர்தல் காலத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இப்படி சேர்க்கப்பட்ட போலி வாக்காளர்களை வைத்து அ.தி.மு.க. தேர்தல் அதிகாரி துணையுடனே வாக்குப் பதிவை உயர்த்திக் காட்டிவிட்டு, போதும் என்ற அளவுக்கு வாக்குகள் சேர்த்து tally செய்வது சாத்தியமே.
ஒரு வாக்காளன் பெயரில் 13 பூத் ஸ்லிப் இருந்த அவலத்தை நீதிமன்றம்வரை தி.மு.க. சமர்ப்பித்தும் இன்றைய தமிழக தேர்தல் ஆணையாளர் லக்கானி "சுமார் 40 லட்சம் போலியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கையில்... "சென்னையில் மட்டுமே சுமார் ஒரு லட்சம் நீக்கப்பட்டது' என்றும், "தமிழகம் முழுவதும் சுமார் 6.5 லட்சம் நீக்கப்பட்டது' என்றும் தெரிவித்தார். அப்படியென்றால் சுமார் 32 லட்சம் போலி வாக்காளர்களை வைத்துக்கொண்டே தமிழ்நாட்டில் 2016 தேர்தல் நடைபெற்றிருக்கிறது என்பது வருத்தமான விஷயம்.
பல இடங்களில் மின்வெட்டு, விலைவாசி மற்றும் தண்ணீர் பிரச்சினை காரணமாக அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஊருக்குள்ளே நுழைய அனுமதி மறுப்பு என்ற பிரச்சினைகள். 2014-ல் மட்டும் இல்லை... 2016-ல் நடந்த நிகழ்வு காலத்திலே போலி வாக்காளர்கள் தந்த நம்பிக்கையில். அ.தி.மு.க. சுமார் 10% ஓட்டுகளை தனதாக்கிக்கொள்ளும் வாய்ப்பில்தான், "இரண்டுநாளில் முடிவுகள் தெரியும்' என்று அதீத நம்பிக்கையில் முதல்வர் ஜெயலலிதாவால் சொல்ல முடிகிறது. வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே தி.மு.க. கூட்டணி 107 இடங்களில் முன்னிலை பெற்று 24 இடங்கள் ஊசலாடிக் கொண்டிருக்கும்போதே ஜெயலலிதா அவர்களுக்கு பிரதமர் பாராட்டும் தெரிவிக்க முடிகிறது என்றால் "ஏன்' என்றும் சிந்திப் போர்கள் சிந்திக்க...
ஜனநாயக நாட்டில் ஒரு கணிசமான அளவில் போலியான வாக்காளர்களைச் சேர்த்து விட்டு பின்னர் வெறும் பூத்ஸ்லிப் வைத்துக் கொண்டு மட்டுமே ஓட்டுப் போட்டுவிடலாம் என்றால்... இதனை வீடு, வீடாக கடந்த 10 ஆண்டுகளில் சென்று சரி பார்க்காத திட்டமிட்ட காரியத்தின் பின்னால் ஒளிந்துள்ளது தேர்தல் கமிஷனுடன் கைகோர்த்த அ.தி.மு.க.வின் 2014 மற்றும் 2016 வெற்றிக் கூட்டணி.
;எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீதிமன்றம் சென்று இந்தப் போலி வாக்காளர்களை நீக்காத வரை அதிக ஓட்டுப் பதிவுகள் நடந்தால் "அ.தி. மு.க. வெல்கிறது' என்ற தொடர் செய்தியை, தண்ணீருக்கும் உப்புக் கும் வரி கட்டிக் கொண்டே நாமும் படித்துக்கொண்டே இருக்கலாம் nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக