செவ்வாய், 24 மே, 2016

இந்தியா ஈரான் இடையே 10 ஒப்பந்தங்கள்.... பிரதமர் மோடி அதிபர் ஹசன் ரூஹாணி... .

டெஹ்ரான்,:ஈரான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேசினார். அப்போது, வரலாற்று சிறப்புமிக்க, 'சபாஹர்' துறைமுகம் உள்ளிட்ட மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேற்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தியா, பெட்ரோலிய தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வந்ததுடன், அந்நாட்டுடன் நீண்ட கால கலாசார உறவையும் கொண்டிருந்தது. அந்நாடு மீது ஐ.நா., விதித்த பொருளாதார தடையால், பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் இந்தியா இருந்தது. தற்போது தடை நீக்கியதால், புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ஈரான் சென்றார். தலைநகர் டெஹ்ரானில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அங்குள்ள குருத்வாராவுக்கு அவர் சென்றார். மேலும் இந்தியா - ஈரான் கலாசாரம் தொடர்பான சர்வதேச மாநாட்டையும் துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானியை, பிரதமர் மோடி, நேற்று சந்தித்துப் பேசினார். பின், இருதரப்பு
குழுவினரும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகினஈரானின் தெற்கு கடல் பகுதியில் அமைந்துள்ள சாபஹார் துறைமுகத்தை மேம்படுத்த, இந்தியா சார்பில் உறுதியளிக்கப்பட்டது. அங்கு, இந்தியா, 3,400 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது;இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
அங்கு, இந்திய துறைமுக பொறுப்பு கழகத்தின் சார்பில் கப்பல் தளம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவிற்கு என, பிரத்யேகமாக சரக்குகளை கையாள முடியும். இதைத் தவிர அங்கு, ரயில் பாதை, உரம் மற்றும் அலுமினிய உருக்கு ஆலைகள் அமைக்கவும் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.
இரு நாடுகளிடையே, மொத்தம், 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.வர்த்தக உடன்பாடு தவிர, பயங்கரவாத ஒழிப்பு தொடர்பாகவும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பயங்கரவாத செயல்கள் தொடர்பான தகவல்களை பறிமாறிக் கொள்ளவும், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது. பயங்கரவாதிகள் இணையதளங்களை பயன்படுத்தி, கொடூர தாக்குதல்களில் ஈடுபடுவதை கண்காணிக்கவும் இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.

முக்கியத்துவம்
ஈரானில்உள்ள சாபஹார் துறைமுகம், இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்கு அருகாமையில் உள்ளது. குஜராத்தின் காண்ட்லா மற்றும் ஈரானின் சாபஹார் துறைமுகங்களின் துாரம், டில்லி - மும்பை துாரத்தை விடவும் குறைவானது.
இந்த துறைமுகம் மேம்படுத்தப்பட்டால், பாகிஸ்தானை தவிர்த்து ஈரான் மற்றும் ஆப்கனுக்கு எளிதாக செல்ல முடியும். மற்ற ஆசிய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் செல்ல வாய்ப்பு ஏற்படும். அந்த துறைமுகத்தில் தடையற்ற வர்த்தக மண்டலத்தை உருவாக்கி, அதன் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்த இந்தியா திட்டமிடுகிறது.
இந்த கட்டுமான பணிகள் ஏற்கனவே துவங்கி நடந்து வந்தன. பொருளாதார தடையால் தடைபட்ட இத்திட்டத்தின் பணி தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளது. தற்போது, இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய சகாப்தம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியர்களுக்கு ேவலைவாய்ப்புபிரதமர் நரேந்திர மோடியின் ஈரான் பயணத்தில் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தங்கள் மூலம் அந்நாட்டில் பெரியளவில் கட்டுமான பணிகள் நடப்பதுடன் தொழிற்சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.
இதை இந்திய நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்பதால் இந்திய தொழிலாளர்கள், இன்ஜினியர்களுக்கு கணிசமான அளவு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  தினமலர்.கம

கருத்துகள் இல்லை: