ஞாயிறு, 22 மே, 2016

அதிமுகவின் 4 வது ராஜ்யசபா சீட்டுக்காக அரவக்குறிச்சி தஞ்சாவூரை தள்ளிவைக்கும் தேர்தல் ஆணையம்..

மாநிலங்களவைத் தேர்தலில் 4 இடங்களில் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக விளங்கும் சூழல் உருவாகி யுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங் களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்), ஏ.நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், ஏ.டபிள்யூ. ரபி பெர்னார்ட் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜூன் 11-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134, திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தைப் பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுக 3, திமுக 2 இடங் களில் எளிதாக வெற்றி பெறும். 6-வது இடத்தைப் பெறும் வாய்ப்பு அதிமுகவுக்கு அதிகம் உள்ளது.

தற்போது மக்களவையில் 37, மாநிலங்களவையில் 12 என நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு 49 எம்பிக்கள் உள்ளனர். காலி யாகும் 3 மாநிலங்களவை உறுப் பினர் பதவிகளை அதிமுக எளி தாகப் பெற்றுவிடும். 6-வது இடத் திலும் அதிமுகவுக்கே அதிக வாய்ப் புகள் இருப்பதால் ஜூன் 11-ம் தேதிக்குப் பிறகு மாநிலங்களவை யில் அதிமுகவின் பலம் 13 ஆக அதிகரிக்கும். இதன் மூலம் நாடாளு மன்றத்தில் அதிமுக எம்பிக்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிக்கும்.
ஆதரவு அவசியம்
50 எம்.பி.க்கள், 134 எம்எல்ஏக் களுடன் மிக வலுவாக இருப்பதால் 2017-ம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக விளங் கும்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்பி, எம்எல்ஏக்களும், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக் களவை, மாநிலங்களவை எம்பிக் களும் வாக்களிக்க தகுதி படைத்த வர்கள். குடியரசுத் தலைவர் தேர் தலில் மக்கள் தொகை அடிப் படையில் அந்த மாநிலத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களின் வாக்குகளுக்கு மதிப்பு அதிகரிக் கும். எனவே, இத்தேர்தல்களில் அதிமுக முக்கிய சக்தியாக விளங் கும் எனக் கூறப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவைத் தலைவராகவும் இருப்பார் என்பதால் அதில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. இதில் எளிதாக வெல்ல வேண்டுமானால் அதிமுகவின் ஆதரவு அவசியம்.
எனவேதான் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவர்கள் அதிமுகவுடன் இணக்க மான போக்கை கடைப்பிடித்து வருவதாக பாஜக தலைவர் ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: