பதவியேற்ற முதல் நாளிலேயே டாஸ்மாக் கடைகளின் நேரத்தை
குறைத்து மதியம் 12 மணிக்குத்தான் விற்பனை ஆரம்பம் என்று ஜெயா அறிவித்தார்.
மொத்த கடைகளில் 500 கடைகளை குறைத்தும் அவர் உத்தரவிட்டதை ஊடகங்கள்
மாபெரும் சாதனையாக வெளியிட்டிருந்தன.
மீனை வெறுப்பதாக பூனை என்னதான் சீனைப் போட்டாலும் கவிச்சியின்றி அம்மா கட்சியினர் வாழ முடியுமா என்ன? ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் உரிய நேரத்தை தாண்டியும், முன்னரும், விடுமுறைகளின் போதும் திருட்டுத்தனமாக அதாவது பார்களில் பகிரங்கமாக சரக்கு விற்பது வாடிக்கையான ஒன்று.
இன்று 24.05.2015 காலை சென்னையில் நடைப் பயிற்சிக்கு போன தோழர் ஒருவர், நகரின் மையப்பகுதி ஒன்றில் டாஸ்மாக் கடையருகே உள்ள பெட்டிக்கடையில் இன்று முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டிருப்பதால் விற்பனை குறையுமா?” என்று விசாரித்திருக்கிறார். கடைக்காரரோ சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு அவரது கடை அருகே உள்ள தேநீர்க்கடையைத் தாண்டி காலியாக நிற்கும் கையேந்தி பவன் வண்டி அருகே சரக்கு விற்பனை நடைபெறுவதாக தெரிவித்தார்.
அருகே சென்று பார்த்தால் பார் ஆசாமி கை நிறைய காந்தி நோட்டுக்களுடன் நின்று கொண்டிருக்க கீழே தண்ணீர் பாக்கெட் மூட்டை போல இருந்த வெள்ளை பிளாஸ்டிக் சாக்கில் பாட்டில்கள் இருந்தன. இந்த விற்பனை நேரம் காலை 7.00 மணி.
பிறகு விசாரித்தால் தமிழகம் முழுவதும் இன்று முழுவீச்சோடு டாஸ்மாக் விற்பனை அதிகாலையிலிருந்தே அமோகமாக நடைபெறுகிறது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள இரு கடைகளில் ம.க.இ.க தோழர்கள் காலையில் சென்று விசாரித்த போது சரக்கு விற்பனை கன ஜோராக நடைபெறுவதை நேரில் கண்டார்கள். அதன் புகைப்படங்களை இங்கே தந்திருக்கிறோம். இவை எடுக்கப்பட்ட நேரம் காலை 9.30 மணி. உறையூர் பகுதியில் இருக்கும் இரு கடைகளிலும் டாஸ்மாக் விற்பனை சூடு பிடித்துக் கொண்டிருந்தது. ரெகுலர் கடையில் இருக்கும் கூட்டத்திற்கு இணையாக பாரில் நடக்கும் திருட்டு விற்பனையும் இருந்தது.
பொதுவில் காலையில் குடிப்பவர்கள் குடிக்கு அடிமையாக இ ருப்பவர்களும், காலையிலேயே வேலைக்கு குடித்து விட்டு செல்பவர்களும் என்று இரு வகையினர் இருக்கிறார்கள். போதை மீட்பு மையத்தில் இருக்க வேண்டிய இந்த பரிதாபத்திற்குரிய மக்களை இன்று பாசிச ஜெயா அரசு கொல்வதின் சாட்சிதான் இந்த பிளாக் விற்பனை.
புரட்சித் தலைவியின் அதிரடி அறிவிப்பின் முதல் நாளிலேயே இக்கடை அதிகாலை 7.00 மணிக்கே திறக்கப்பட்டுள்ளது. மெயின் கடை பூட்டப்பட்டிருந்தாலும், பார் மட்டும் திறக்கப்பட்டு கடை விற்பனையை கவனித்துள்ளது. குடிமகன்கள் வழக்கம் போல வந்து குடித்து விட்டுப் போகிறார்கள். கடையில் சுமார் 90 அல்லது 100 ரூபாயிக்கு விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில் இங்கே சுமார் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அம்மா தடை செய்த நேரத்தில் சரக்கு கிடைக்கிறது என்பதால் குடிமகன்களும் இந்த விலை உயர்வை சட்டை செய்வதில்லை.
இதன்படி பார்த்தால் இனி தமிழகமெங்கும் காலை விற்பனை என்பது இப்படித்தான் நடக்கும். பார்களை நடத்தும் அ.தி.மு.க ரௌடிகள் கடை வருமானத்திற்கு நிகரான வருமானத்தை இங்கு பெறுவது உறுதி. இப்படி கட்சிக்காரர்கள் எனும் குண்டர் படை பொறுக்கித் தின்பதற்கே பாசிச ஜெயா இப்படி கடை நேரத்தை குறைப்பதாக நாடகமாடி வருகிறார். இந்த அதிகாலை விற்பனைக்கு ஆதரவு தரும் பொருட்டு போலீசின் மாமூலும் கூட்டி கொடுக்கப்படுமென்று தெரிகிறது. மதுவிலக்கை முழுமையாக கொண்டு வராத எந்த நாடகமும் இப்படித்தான் கொள்ளையை கூட்டும் என்பதும், ஆண்கள் சாவதையும், பெண்கள் சித்ரவதையில் வாழ்வதையும் இந்த நாடகம் அதிகப்படுத்தும் என்பதும் உறுதி.
டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போமென்னு ஜெயா அறிவித்த உடனே அவரது ஊடக அடிமைகள் துள்ளிக் குதித்தார்கள். அவர் ஆட்சி அமைத்த பிறகு இவர்கள் செய்திகளால் கட்அவுட் நட்டார்கள்.
அம்மாவின் போங்காட்டம் ஆரம்பித்து விட்டது. அதை முறியடிக்கும் மக்கள் அதிகாரம் போராட்டமும் ஓயாது!
பின் குறிப்பு: வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவரும் தங்களது ஊரில் நடக்கும் அதிகாலை டாஸ்மாக் விற்பனை குறித்த புகைப்படங்கள், செய்திகளை அனுப்பித் தருமாறு கோருகிறோம்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகேயும், சித்ர குப்தன் கோவில் அருகேயும் உள்ள கடையில் இன்று காலை முதல் பாட்டில் விற்பனை ஜரூராக நடக்கிறது.
– செய்தி, படங்கள்: வினவு செய்தியாளர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக