'மூட போகும், 500 'டாஸ்மாக்' கடை பட்டியலில், எங்கள் பகுதியில்
உள்ள கடையையும் சேர்க்க வேண்டும்' எனக் கோரி, தினமும் ஏராளமான மக்கள்,
டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகள்
செய்வதறியாது திணறி வருகின்றனர்.
முதல்வர் ஜெயலலிதா, முதற்கட்டமாக, 500
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து,
சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு, எழும்பூரில் உள்ள
டாஸ்மாக் தலைமை அலுவலகம், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில்,
மதுக்கடையை மூடுமாறு பலரும், கோரிக்கை மனுவை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, குடியிருப்போர்நலச்சங்கம், தொண்டு நிறுவனம், இளைஞர்கள் சங்கம் உட்பட பலரும், 'மூட உள்ள, 500 கடைகள் பட்டியலில், எங்கள் பகுதியில் கடையையும் சேர்க்க வேண்டும்' எனக் கோரி மனு அளித்து வருகின்றனர். இதனால், மூட வேண்டிய கடைகளை தேர்வு செய்வது சிரமமாக உள்ளது. இம்மாத இறுதிக்குள், 500 கடைகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக