திங்கள், 23 மே, 2016

கே. ரகோத்தமன் ::பத்மநாபா கொலை வழக்கு ராஜிவ் படுகொலை வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய ....

ilakkiyainfo.com:  சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் செய்த பெரிய சேவை’ என்றும் சொன்னார். சின்ன சாந்தனுக்கு அப்போது இருபது, இருபத்தொரு வயதுதான். அந்த வயதுக்கே உரிய ஆர்வமும் பரபரப்பும் சாகசச் செயலில் ஈடுபடும் குதூகலமும் இருந்தன. சிவராசனுக்காக  ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகத்துக்குச் சென்று பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு ஒற்றறிந்து சொல்வதாக உறுதியளித்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் இயங்கிக்கொண்டிருந்தது. சின்ன சாந்தன் அங்கே செல்லத் தொடங்கினார். இலங்கையிலிருந்து புதிதாக வந்து இறங்கியிருக்கும் அகதி என்பது போன்ற அறிமுகத்துடன் அங்கே சென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின்மீது தனக்கு அக்கறையும் ஈடுபாடும் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, அங்கிருந்த நபர்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டார். பேச்சுக்கிடையே அடிக்கடி விடுதலைப் புலிகள் பற்றிப் போலியாகக் கோபப்பட்டு, விமரிசனம் செய்து, தன்னை அவர்களில் ஒருவனாக அடையாளப்படுத்திக்கொள்ளவும் தவறவில்லை.


அன்று மாலை ஆறு மணி அளவில் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சின்ன சாந்தனைக் காத்திருக்கச் சொன்னார்.

ஒரு அம்பாசிடர் காரில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த டேவிட் மற்றும் சிலரும் சிவராசனுடன் அப்போது வந்தார்கள்.

சின்ன சாந்தனை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏற்றிக்கொண்டு நேரே ஈ.பி.ஆர்.எல்.எஃப். அலுவலகத்துக்குச் சென்றார்கள்.

சற்றுத் தள்ளி காரை நிறுத்திவிட்டு சின்ன சாந்தனை மட்டும் இறக்கி, அலுவலகத்தில் பத்மநாபா இருக்கிறாரா என்று பார்த்துவரச் சொன்னார்கள்.

சென்று பார்த்துவிட்டுத் திரும்பிய சின்ன சாந்தன், ‘பத்மநாபா அலுவலகத்தில் இல்லை. அருகிலேயே ஒரு அபார்ட்மெண்டும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்புக்குச் சொந்தமானது இருக்கிறது.

அங்கே தங்கியிருக்கிறார்’ என்று தகவல் சொல்ல, சிவராசன், டேவிட் மற்றும் உடன் வந்த சிலரும் நேரே அந்த அபார்ட்மெண்டுக்குச் சென்றார்கள்.

அனைவரிடமும் ஏகே 47 இருந்தது. ஒரு வெடிகுண்டும் கொண்டு போனார்கள்.

வெளியே காவலுக்கு நின்ற சின்ன சாந்தனுக்குச்  சிறிது நேரத்தில்  உள்ளே துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டது.
மணி சரியாக  இரவு ஏழு. பரபரவென்று உள்ளே போன அனைவரும் திரும்பி வந்து காரில் ஏறிக்கொண்டார்கள். சாந்தனும் ஏறியதும் கார் புறப்பட்டுவிட்டது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நாங்கள் தேடிப் பிடித்த சின்ன சாந்தன் என்னும் சுதேந்திர ராஜா அளித்த மேற்படி வாக்குமூலத்தின் மூலம்தான் பத்மநாபா கொலையில் ஈடுபட்ட ரகுவரன், டேவிட் என்கிற பெயர்களுக்குரிய நபர்கள் யார் என்னும் விஷயமே தெரியவந்தது.

சின்ன சாந்தனின் வாக்குமூலம் அதோடு முடியவில்லை. இன்னும் இருக்கிறது.

சென்னையில் பத்மநாபாவைக் கொன்றுவிட்டு அம்பாசிடர் காரில் தப்பித்தவர்கள் நேரே தஞ்சாவூர் சென்று அங்கிருந்து கோடியக்கரைக்குச் சென்று இலங்கைக்குத் தப்பிப்பதுதான் திட்டம்.

அவர்கள் செங்கல்பட்டு தாண்டும்போதே இரண்டு போலீஸ்காரர்கள் வழிமறித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சந்தேகமெல்லாம் ஒன்றுமில்லை.

வழக்கமான நெடுஞ்சாலைப் பரிசோதனைதான்.  காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு எதற்கோ  இறங்கியிருந்தவர்களை நெருங்கிய அந்த இரண்டு போலீசாரும் வண்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்கள்.

வண்டியில் நிறையவே ஆயுதங்கள் இருந்தன. ஏகே ரகத் துப்பாக்கிகள். கையெறி குண்டுகள். இன்னும் பல.

‘டிக்கியைத் திறந்து காட்டுங்கள்!’ இரண்டு காவலர்களில் ஒருவர் வயதானவர். இன்னொருவர் இளைஞர். கேட்டது இளைஞர்தான். வயதான காவலருக்கு அவர்களைப் பார்த்ததும் ‘பிரயோஜனமில்லாதவர்கள்’ என்று தோன்றிவிட்டிருக்கிறது.

இளைஞருக்கு ஒரு முயற்சி செய்து பார்க்கும் ஆசை. அதனால்தான் அவர் டிக்கியைத் திறந்து காட்டச் சொல்லியிருக்கிறார். ‘டிக்கிதானே? ஓ திறக்கிறேனே!’ என்று சொல்லிவிட்டு சிவராசன் மற்றவர்களைக் காரில் ஏறச் சொல்லிக் கண் ஜாடை காட்டினார்.

அனைவரும் காரில் ஏறிக்கொள்ள, சிவராசன், டிக்கியைத் திறக்கச் செல்பவர் மாதிரி காரின் பின்புறமாகச் சென்று, ஒரு கணம் தாமதித்து, சடாரென்று காரைச் சுற்றி வந்து டிரைவர் சீட்டில் பாய்ந்து ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

அந்த இளம் காவலர் விடாமல் வண்டியைத் துரத்தப் பார்க்க, அவர் கையை இழுத்துப் பிடித்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு சிறிதுதூரம் ஓடி, ஓரிடத்தில் கையை விட்டார் சிவராசன்.

அடி. பலத்த அடி. அதன்பிறகு சிவராசனுக்குக் கவலை வந்துவிட்டது. ஒரே வண்டியில் மொத்தமாக அனைவரும் செல்வது ஆபத்து. இன்னொரு வண்டி வேண்டும்.

மிகவும் அவசரம். விழுப்புரம் அருகே அவர்களுக்கு அந்த இன்னொரு வண்டி கிடைத்தது. யாரோ மூன்று பேர் ஒரு வெள்ளை மாருதி வேனில் சென்றுகொண்டிருந்தார்கள்.

சிவராசன் அந்த வண்டியை வலுக்கட்டாயமாக நிறுத்தி, அவர்களைத் துப்பாக்கி முனையில் இறக்கிவிட்டு, அந்த வண்டியையும் எடுத்துக்கொண்டார்.

இரண்டு வண்டிகளில் அவர்கள் பிரிந்து ஏறி திருச்சிக்குச் சென்றார்கள். அங்கிருந்து மல்லிப்பட்டணம் சென்று ஒரு தோப்பில் தங்கியிருந்து மறுநாள் மாலை படகேறி வல்வெட்டித் துறைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

index  பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   "வரதராஜப் பெருமாளை''  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9) index4அங்கே பொட்டு அம்மான் அவர்களை வரவேற்று, கட்டித்தழுவி பாராட்டினார். மறுநாள் பிரபாகரனே நேரில் வந்தும் பாராட்டினார்.

அதன்பின் சின்ன சாந்தன் தன் படிப்பை விட்டுவிட்டு முழுநேர விடுதலைப் புலி ஆகிப்போனார். இது சின்ன சாந்தன் விவரித்த தகவல். மறுபுறம், இங்கே வேனைப் பறிகொடுத்த நபர் சென்னை கமிஷனர் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டு புகார் அளித்திருக்கிறார்.

ஆயுதங்களுடன் வேனைக் கடத்திக்கொண்டு போகிறார்கள், திருச்சிக்குத் தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்று அவர்கள் துல்லியமாகத் தகவல் சொல்லியும் சிவராசன் குழுவினரை திருச்சி அடைவதற்கு முன்னாலோ, திருச்சியிலோ மடக்கிப் பிடிக்கவும் கைது செய்யவும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவே இல்லை.

அவர்கள் திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து மல்லிப்பட்டணம் போய், இரவு வரை காத்திருந்து படகு வந்து ஏறிச் செல்லும்வரை ஒரு நடவடிக்கையும் கிடையாது.

போகிறவர்களைப் பிடிக்க வேண்டாம் என்று மேலிடத்து வாய்வழி உத்தரவுகள் இருந்ததாகப் பின்னால் சொல்லப்பட்டது.

இந்த வழக்கை யாரும் கேட்டுக்கொள்ளாமலேயே சி.பி.ஐ. எடுத்துக்கொண்டிருக்கலாம். அதற்கான அதிகாரங்கள் எங்களுக்கு உண்டு. தவிரவும் ராஜிவ் படுகொலை வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய வழக்கு அது.

ஆனால் மாநில போலீஸ் மெத்தனம் காட்டுவதைக் கண்டு அ.தி.முக. தலைவர் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்தபோது, இதனை சி.பி.ஐக்கு மாற்றச் சொல்லி சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மத்திய அரசுக்குக் கடிதமே எழுதிய பிறகும் ஏனோ ராஜிவ் கொலை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரான கார்த்திகேயன் அதில் அப்போது ஆர்வம் செலுத்தவில்லை.

வழக்கை இறுதிவரை கையில் எடுக்கவும் இல்லை. தமிழ்நாடு போலீசே விசாரிக்கட்டும் என்று சொல்லிவிட்டார். இதற்கான காரணம் எனக்குப் புரியவேயில்லை.

கொடைக்கானல் கேம்ப்
பத்மநாபா கொலைச் சம்பவம் நடக்கிறவரை தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு உளவுப் பிரிவு என்ற ஒன்று கிடையாது. கிடைக்கிற ஆள்கள், கிடைக்கிற தகவல்கள், கிடைக்கிற வழிகளில் மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்.
இலங்கையில் இருந்தே ஒருவனை அழைத்து வந்து, அவனைக் கல்லூரியில் சேர்த்து, செலவு செய்து, ஈ.பி.ஆர்.எல்.எஃப்காரன் மாதிரி நடிக்கச் சொல்லி தகவல் சேகரித்துக் காரியத்தை முடித்த விதமே இதனைப் புரியவைத்திருக்கும்.
பத்மநாபாவைக் கொன்றபிறகு, பிரபாகரனின் அடுத்த உடனடி இலக்கு ராஜிவ் காந்தி இல்லை. இந்தியாவின் வடமாநிலம் ஏதோ ஒன்றில் தலைமறைவாக இருந்த இன்னொரு ஈ.பி.ஆர்.எல்.எஃப் பிரமுகரும் இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான வரதராஜப் பெருமாள்.
index  பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   "வரதராஜப் பெருமாளை''  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9) index3எப்படியாவது வரதராஜப் பெருமாளைக் கொன்றுவிட வேண்டும் என்று சொல்லித்தான் செப்டெம்பர் 1990ல் சிவராசனைத் திரும்பவும் இந்தியாவுக்கு அனுப்பினார் பிரபாகரன்.
பத்மநாபாவை வெற்றிகரமாகக் கொன்று முடித்துத் திரும்பியவர் என்பதனால், இந்தப் பணியையும் சிறப்பாக முடிப்பார் என்று நம்பியே அனுப்பினார்.

திரும்பவும் இந்தியாவுக்கு வந்த சிவராசனுக்கு இம்முறை தோப்புத்துறை ஜகதீசன் என்ற நபர் உதவி செய்தார். இவர் ஒரு கருவாடு ஃபேக்டரி வைத்திருந்தவர்.

சென்னையில், குவாலியரில் பயிற்சி முகாம்களில் இருந்த சில ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர்களுடன் மெல்ல மெல்லப் பேச்சுக் கொடுத்து, அவர்கள் மூலம் வரதராஜப் பெருமாள் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க, இந்தத் தோப்புத்துறை ஜகதீசன் சிவராசனுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார்.

ஆனால் விஷயம் அத்தனை சுலபமாக இல்லை. வட இந்தியாவில் அவர் ஏதோ ஒரு மாநிலத்தில், எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார் என்பதற்கு மேல் ஓர் அங்குலம் கூடத் தகவல் பெற முடியவில்லை.

இந்த முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுதான் 1991 பொதுத் தேர்தல் அறிவிப்பு வந்தது. பிரபாகரனின் ஹிட் லிஸ்டில் ராஜிவ் காந்தி இருந்ததும், இந்தப் பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிடக் கூடாது என்னும் பதற்றம் மேலோங்கியிருந்ததும், வரதராஜப் பெருமாளைத் தேடுவதை நிறுத்திவிட்டு, ராஜிவ் காந்தியைக் குறிவைக்கக் காரணமானது.

இலக்கு ராஜிவ் காந்தி என்பது முடிவானதும் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் முதல் முதலில் சொன்ன விஷயம், தமிழகத்தில் நமக்கென்று ஒரு பிரத்தியேக உளவுக் கிளை அமைத்தாக வேண்டும் என்பதுதான்.

ஒவ்வொரு சிறு காரியத்துக்கும் ஆள்களைத் தேடிக்கொண்டிருப்பது சிரமம் என்பது தவிர, அது ஆபத்தானதும் கூட. எனவே, தமிழகத்தில் ஓர் உளவுப் பிரிவை நிறுவியே  தீரவேண்டும் என்று சொல்லி, அதற்கான முதல் கட்ட நடவடிக்கையை ஆரம்பித்தார்.

murukan  பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   "வரதராஜப் பெருமாளை''  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9) murukanஜனவரி 91ல் முதல் முதலாக இந்து மாஸ்டர் என்று புலிகள் இயக்கத்தில் அறியப்படும் ஸ்ரீஹரன் என்ற இயற்பெயர் கொண்ட, முருகன் என்கிற தாஸை இந்தியாவுக்கு அனுப்பினார் பொட்டு அம்மான்.

முருகன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.

அவரது தந்தை அங்கே ஒரு சிறு ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்தவர்.

முருகனின் அண்ணன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, 1987ல் இலங்கை ராணுவத்தின் ஒரு தாக்குதலில் இறந்தவர்.

டீச்சர் உத்தியோகம் பார்க்கும் ஓர் அக்கா, மூன்று தங்கைகள் அவருக்கு உண்டு.

அண்ணனின் மரணத்துக்குப் பிறகு புலிகள் இயக்கத்தில் இணைந்து சில போர்க்களங்களில் பங்குபெற்று, பொட்டு அம்மானின் நேரடி கவனிப்புக்கு உள்ளாகி, இயக்கத்தின் உளவுத்துறைக்குச் சென்றவர்.

பொட்டு அம்மான் முருகனிடம் சொன்ன விஷயம் இதுதான். ‘நீ இந்தியாவுக்குப் புறப்படு. சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தின்  உள்புற அமைப்பு, போலீஸ் தலைமையகம், வேறு சில குறிப்பிட்ட காவல் நிலையங்களின் அமைப்பு, இருப்பிடம், உட்புற வெளிப்புற அமைப்புகளைப் படமெடுத்து அனுப்பவேண்டியது உனக்கு முதல் பணி.

நீ கிளம்பும்போது சுருளி என்ற நபர் உன்னைச் சந்திப்பார். இரண்டு தங்க பிஸ்கட்டுகளைக் கொடுப்பார். அதைக் கொண்டு போய் சென்னையில் காந்தனிடம் கொடு. (காந்தன் இன்னொரு விடுதலைப் புலி உறுப்பினர்.)

காந்தனை  உனக்கு ரகுவரன்  அறிமுகம் செய்து வைப்பார். நீ அங்கே சென்று இறங்கியதும் அவர் வந்து உன்னைச் சந்திப்பார்.

என்னிடம் ஏதாவது பேசவேண்டுமென்றால் காந்தனின் வயர்லெஸ் மூலம் மட்டும் பேசு.

புறப்படு.’

91ம் வருடம் ஜனவரி மூன்றாம் வாரம், மூன்று எஞ்சின்கள் பொருத்தப்பட்ட ஒரு பிளாஸ்டிக் படகில் முருகன் கோடியக்கரைக்கு வந்து சேர்ந்தார்.

சிவராசன் அங்கேயே வந்து காத்திருந்து, அவரை அழைத்துக்கொண்டு கோடியக்கரை மகாலிங்கம் என்கிற நண்பரின் வீட்டுக்குச் சென்றார்.

குளித்து, சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறிச் சென்னை. சென்னையில் ராபர்ட் பயஸ் என்கிற இன்னொரு விடுதலைப் புலியின் வீட்டில் முருகனைத் தங்க வைத்தார் சிவராசன்.

sivarasan  பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   "வரதராஜப் பெருமாளை''  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9) sivarasansivarasan

ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். முருகன் முதல் முதலில் தமிழகத்துக்கு வரும்போது அவருக்கு சிவராசனைத் தெரியாது. அப்போதுதான் அறிமுகமாகிறார்.

sivarasan-20140108-2  பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   "வரதராஜப் பெருமாளை''  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9) sivarasan 20140108 2சிவராசனின் நிஜ உருவம்

சிவராசன் மூலம்தான் ராபர்ட் பயஸும் அறிமுகமாகிறார். ரகுவரன் பொட்டு அம்மானுக்கு வலக்கரம் போன்றவர் என்பது தெரியும். அவருக்குத்  தமிழகத்தில்  சிவராசன் என்று பெயர்  என்பதெல்லாம் தெரியாது.

26-1448516834-perarivalan-santhan-murugan-nalini-s-jayakumar-p-ravichandran-1-600  பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   "வரதராஜப் பெருமாளை''  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9) 26 1448516834 perarivalan santhan murugan nalini s jayakumar p ravichandran 1 600ராபர்ட் பயஸ் வீட்டில் முருகன் தங்கியிருந்தது ஐந்து நாள்கள். அங்கே வந்து போன காந்தன் மற்றும் நிஷாந்தன் என்னும் இரண்டு புலி உறுப்பினர்களுடன் தொடர்பு உண்டானது.

நிஷாந்தன் மூலமாக முத்துராஜா அறிமுகமாகி, முத்துராஜா மூலம்தான் முருகனுக்கு பாக்கியநாதன் தொடர்பு ஏற்பட்டது.

ராயப்பேட்டை முத்தையா கார்டன் வீதியில் உள்ள பாக்கியநாதன் வீட்டில் அவரது தாய் பத்மா, தங்கை கல்யாணி, அவளது தோழி பாரதி என்று அனைவரையும் முருகன் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

பத்மா முதலில் சற்றுத் தயங்கினாலும் விரைவில் முருகன் அங்கே தங்க அனுமதி கிடைத்தது.

ஆங்கிலம் படிக்கச் சென்னை வந்தது மாதிரி சொல்லிவிட்டு, சபரி இன்ஸ்டிட்யூட்டில் போய்ச் சேர்ந்தார் முருகன்.

எல்லாம் ஒரு சில நாள்கள்தான்.

அவர்களுக்குள் எதையும் மூடி மறைக்க வேண்டிய அவசியம் ஏதும் பின்னால் ஏற்படவில்லை. பாக்கியநாதனின் மூத்த சகோதரி நளினி வில்லிவாக்கத்தில் தனியே வீடு எடுத்துத் தங்கியிருக்கும் விஷயம் முருகனுக்குத் தெரிந்தது.

குடும்பச் சண்டைகள் பற்றியும் கருத்து விரோதங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

அடடே, ஒரு சின்ன சமாதான முயற்சி செய்தால் தப்பில்லையே? முருகன் நளினியை அவரது அடையாறு அலுவலகத்தில் சென்று சந்தித்தார்.

பிறகு அச்சந்திப்பு, நளினியின் வீட்டில் தொடர்ந்தது. நளினி ராயப்பேட்டை வீட்டுக்கு வந்தார்.

முருகன் வில்லிவாக்கத்துக்குப் போனார். பேசிப்பேசி இருவரும் ஒருவரையொருவர் மிகவும் விரும்ப ஆரம்பித்தார்கள். அதுதான் ஆரம்பம்.
தொடரும்…
கே. ரகோத்தமன் (தொகுப்பு:கி.பாஸ்கரன்-சுவிஸ்)

கருத்துகள் இல்லை: