வியாழன், 26 மே, 2016

எஸ் ஆர் பிக்கு ராஜ்யசபா எம்பி... வாசன் கோஷ்டிக்கும் ஏனைய கட்சிகளுக்கு சிக்னல்! வந்தால் எலும்பு கிடைக்கும் .

எஸ்.ஆர்.பி.,க்கு எம்.பி., பதவி தந்து வாசனுக்கு புத்தி புகட்டிய ஜெ., சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வில் இணைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார். இதன்மூலம், 'அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற விரும்பாமல், கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டம் பிடித்த, த.மா.கா., தலைவர் வாசனுக்கு, பாடம் புகட்டப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இடம் பெற விரும்பிய து. கூட்டணி தொடர்பாக, நடத்தப்பட்ட பேச்சில், வாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும், கட்சி பலத்தின் அடிப்படையில், தொகுதிகளையும் வழங்க, அ.தி.மு.க., முன்வந்தது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில், இரட்டை இலை சின்னத்தில், த.மா.கா., போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.     வாசன் போன்ற பண்ணையார்கள் அரசியலில் இருப்பது பொழுது போக்கே தவிர பொது நமை கருதி அல்ல.இதையும் கூட அறிந்து கொள்ளாத சில மக்கள் இன்னும் இவர் பின்னே.மூப்பனாரலையே ஒன்றும் செய்யமுடியாதபோது வாசன் என்ன செய்ய முடியும்.இவர் தனது கட்சியை கல்லிப்பது நாளது.தொண்டர்கலேனும் வெற்றிகட்சியில் சேரலாம்.


அதற்கு,எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சம்மதித்தனர். ஆனால், வாசன் ஏற்க மறுத்தார். கடைசி நேரத்தில், அ.தி.மு.க., நிபந்தனையை ஏற்காமல், மக்கள் நலக் கூட்ட ணியில், த.மா.கா., சேர்ந்தது. அதை எதிர்த்து, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், அவரது ஆதரவு மத்திய சென்னை மாவட்ட தலைவர் கதிரவன் உட்பட சிலர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

அப்போதே, 'உங்களுக்கு உரிய அங்கீகாரம் கட்சியில் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா உறுதி கொடுத்தார். அதேபோல் அவருக்கு, நேற்று ராஜ்யசபா எம்.பி., 'சீட்'அறிவித்துள்ளார். இதுகுறித்து, த.மா.கா., வட்டாரம் கூறியதாவது:

தேர்தலுக்கு முன் அ.தி.மு.க., வில் இணைந்த எஸ்.ஆர்.பி.,க்கு, எம்.பி., பதவி கொடுத்ததில், அரசியல் இருக்கிறது. அ.தி.மு.க., வில், தகுதியானவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

அவர்களை எல்லாம் விடுத்து, எஸ்.ஆர்.பி.,க்கு கொடுத்ததன் மூலம், வாசனுக்கு புத்தி புகட்டி உள்ளார். தன்னை நம்பி வந்திருந்தால், வாசனுக்கு இந்த பதவி கிடைத்திருக்கும் என்பதை சொல்லி உள்ளார்.

த.மா.கா., மட்டுமல்லாமல், காங்கிரஸ், தே.மு.தி.க., - ம.தி.மு.க., போன்ற கட்சிகளில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தங்கள் அரசியலின் எதிர்காலம் கருதி, அ.தி.மு.க.,வில் இணைவதற் கும் வழி வகுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு த.மா.கா., வட்டாரம் தெரிவித்தது.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: