செவ்வாய், 24 மே, 2016

சீனா பீகார் வரை ரெயில் பாதை அமைக்க திட்டம் A train from Beijing to Bihar

A train from Beijing to Bihar? China wants to extend its Nepal rail link to India. A train from Beijing to Bihar
பீகார் வரை ரெயில் பாதையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாடு அரசின் அதிகாரபூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. திபெத் வழியாக நேபாளத்திற்கு சாலைகள் மற்றும் ரயில் பாதையை அமைத்து ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சீனா தற்போது இந்தியாவின் பீகார் மாநிலம் வரை நீட்டிக்க சீனா விருப்பம் தெரிவித்து உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்திலிருந்து நேபாளத்தின் ரசுவாகதி வரை ரயில் பாதை அமைக்க இரு நாடுகளும் ஆலோசனை நடத்தியுள்ளன. இந்த திட்டம் 2020ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்பாதையை நேபாள எல்லையில் உள்ள பீஹாரின் பிர்குஞ்ச் வரை நீட்டிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளன. இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால், பீஹார் மாநிலத்திலிருந்து சீனாவுக்கு கோல்கட்டா வழியாக வர்த்தகம் செய்வதை விட எளிதானது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை: