
விஷால் பிரஸ் மீட்டில் பேசியபோது, ‘ஆன்லைனில் ரிலீஸ் செய்பவர்களைவிட படத்தை வீடியோ எடுக்க உதவும் தியேட்டர்காரர்களைத்தான் முதலில் தண்டிக்கவேண்டும். என் படத்தை விடுங்கள். அடுத்து ரிலீஸாகும் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தையாவது காப்பாற்றுங்கள்’ என்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
விஷால், பிரச்னையின் ஆரம்பப்புள்ளியை அழிக்க நினைத்து பேசிய பேச்சை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் Tamilgun இணையதளத்தினர். விஷாலின் ‘மருது’ திரைப்படத்தை அவர்களது இணையதளத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதற்கு கீழே Vishal Supports Tamilgun என்ற டைட்டிலில் விஷால் பேசிய வீடியோவை வைத்திருக்கிறார்கள். ஆன்லைனில் படங்களை ரிலீஸ் செய்யும் மற்றுமொரு பிரபல இணையதளமான TamilRockerz-ம் ‘படத்தை திருட்டு டிவிடி தயாரிக்கவிடாமல் தடுத்தால் எங்களுக்கு எப்படி வீடியோ வரும்? நாங்கள் ஏன் ரிலீஸ் செய்யப்போகிறோம்? முதலில் அதை நிறுத்துங்கள்’ என விஷாலுக்கு சவால் விடுகிறார்கள். minnambalam.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக